தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனைக் குழுவினால் ஐந்து பரிந்துரைகள்…

தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு விரைவாக செயற்படுத்த வேண்டிய ஐந்து பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் முதற் தடவையாக இன்று (21) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களையும் தேசிய பொருளாதார சபையின் உறுப்பினர்களையும் சந்தித்து பரிந்துரைகளை முன்வைத்தனர். ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளைத்  தீர்ப்பதற்கு நியமிக்கப்பட்ட தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு  வழங்குவதற்காக 16 பேரைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்று மார்ச் மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி அவர்களால் … Read more

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்  

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் 2022 மார்ச் 22 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பிராந்திய மற்றும் இருதரப்புக் கொள்கை விவகாரங்களை துணைச் செயலாளர் நுலாண்ட் மேற்பார்வை செய்கின்றார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை துணைச் செயலாளர் நுலாண்ட் சந்திக்கவுள்ளார். 2022 மார்ச் 23, … Read more

இலங்கைக்கான புதிய எகிப்தியத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான எகிப்தியத் தூதுவர் மகேத் மொஸ்லே, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 19ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். தூதுவர் மொஸ்லேவுக்கு அன்பான வரவேற்பைத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இலங்கையிலான அவரது பதவிக்காலத்தின் போது அவருடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் மொஸ்லே ஆகியோர் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பரந்த அளவிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், முக்கியமான … Read more

மண்முனைப்பற்றில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டு உதவி திட்டங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் “கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் – 2022” இற்கு அமைவாக மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் இன்று (21) திகதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் வழங்கப்பட்டன. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கான உதவிகளை வழங்கினார். … Read more

இலங்கை மத்திய வங்கி ,தொகைமதிப்பீட்டின் 150 ஆவது ஆண்டு நிறைவு ஞாபகார்த்த நாணயக்குற்றியினை வெளியிடுகிறது

இலங்கையில் குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீட்டின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் ரூ.20 முகப்புப் பெறுமதியுடன்கூடிய சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியொன்றினை நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களித்த நிகழ்வினை அங்கீகரிக்கின்ற விதத்தில் இலங்கை மத்திய வங்கி வெளியிடுகிறது. இந்நாணயக்குற்றியானது இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் கோரிக்கைக்கிணங்க வெளியிடப்படுகிறது. இலங்கையில் முதலாவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 1871இல் நடத்தப்பட்டதுடன் 2021ஆம் ஆண்டு 150ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது. 15 ஆவது குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பீட்டினை 2021இல் … Read more

இத்தப்பனை-ஹொரவளையை இணைக்கும் புதிய பாலங்களுக்கான இணைக்கும் புதிய பாலங்களுக்கான

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் தேசத்தைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை  பிரகடனத்தின் கீழ் கிராமப்புற மக்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்படும் நாடளாவிய கிராமிய பாலம் நிர்மாணத் திட்டத்தின் கீழ் பெந்தர ஆற்றின் குறுக்கே இத்தப்பனை மற்றும் ஹொரவளையை இணைக்கும் புதிய பாலங்கள் அமைக்கப்படும். இரண்டு உத்தேச புதிய பாலங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (21-03-2022) அரசாங்க பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்றது.  பலபிட்டிய பிரதேசத்தில் மாது ஆற்றின் … Read more

இலங்கை சாரணர் இயக்கத்தின் 105வது ஆண்டு விழா கொடி தினத்தின் முதல் கொடி கௌரவ பிரதமருக்கு அணிவிக்கப்பட்டது

இலங்கை சாரணர் இயக்கத்தின் 105வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கொடி தினத்தின் முதலாவது கொடி இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவி தலைமை ஆணையாளர் நிர்மலி வில்லியம் அவர்களினால் இன்று (21) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. இதன்போது சாரணர் இயக்கத்தின் வரலாறு குறித்து எழுதப்பட்ட நூலொன்று இலங்கை சாரணர் இயக்கத்தின் தொடர்பாடல் ஆணையாளர் ருக்ஷானி அஸீஸ் அவர்களினால் கௌரவ பிரதமருக்கு வழங்கி வைக்கப்பட்டது. சாரணர் இயக்கத்தின் நிறுவனரான ரொபர்ட் … Read more

தூதரக அலுவலகம் கொன்சியுலர் அலுவலகங்கள் மூடப்பட்டமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்….

சில நாடுகளில் இலங்கை தூதரக அலுவலகம் மற்றும் கொன்சியுலர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமை தற்காலிக ஏற்பாட்டின் அடிப்படையிலாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வருட காலப்பகுதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,நாட்டின் நிதி நிலைமையின் காரணமாக சிட்னி கொன்சியுலர் அலுவலகம் , ஈராக்கில் பாக்தாத் மற்றும் சுவிடனில் உள்ள தூதரக அலுவலகம் ஆகியவற்றை … Read more