இலங்கையில் கொரோனா:குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 24 ஆயிரத்து 676

இலங்கையின் கொரோனா தொற்றினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 24 ஆயிரத்து 676 ஆக உயர்வடைந்துள்ளதாகவும், நேற்றைய தினம் (20) 84 பேர் சிகிச்சை நிலையங்களில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 470 ஆக காணப்பட்டது. இது தற்போது 300 ஐ விட குறைவடைந்து உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. நேற்றைய தினம் 236 பேருக்கு தொற்றுதி செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு முந்தைய நாள் … Read more

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டில்: ஆசியாவின் எந்த ஒரு நாடும் முதல் 20 இடங்களுக்குள் இல்லை

உலகிலேயே மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டு இடங்களை முந்தியுள்ளது. அதன்படி, இலங்கை தற்போது உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 127வது இடத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின், உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் அறிக்கையின்படி, இலங்கை 129 வது இடத்தில் காணப்பட்டது. இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் (2022) இலங்கை முன்னேற்றங்கண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் அறிக்கையின்படி, முதலாவது இடத்தை பின்லாந்தும், இறுதி … Read more

நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகவில்லை

நாட்டில் சில பிரதேசங்களில் தற்பொழுது 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட மழை பெய்த போதிலும் மத்திய மலையக நீரேந்து பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நீரேந்து பகுதிகளில் போதுமான மழை பெய்வதை எதிர்பார்க்க முடியாது என்று வளிமண்டலவியல் திணைக்கள எதிர்வு கூறல் பிரிவு பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் ,இடைக்கால பருவப்பெயர்ச்சிக் காலநிலை ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீரேந்து பகுதிகளில் மழையை மே … Read more

5,000 கறவை கால்நடைகளை இறக்குமதி செய்ய திட்டம்

அடுத்த வருடத்திற்குள் 5000 கறவை கால்நடைகளை நாட்டிற்கு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவிததுள்ளார். அத்துடன், பசும்பால் உற்பத்தியை மற்றும் பாவனையை அதிகரிக்கும் நோக்கில், பாரிய அளவிலான பால் பண்ணைகளை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அமச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மர் கடற்பகுதியை நோக்கி நகர்கிறது அசானி புயல்

அசானி புயல் ,மியான்மர் கடற்பகுதியை நோக்கி நகர்வதாக இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் உருவெடுத்தது. இந்த புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டது. அசானி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய  வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு … Read more

வாகன விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழப்பு

காலி – மாத்தறை வீதியில் அஹங்கமவில்  இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (20) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   மாத்தறையிலிருந்து காலி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, லொறி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் இந்த  விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.   விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான  ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதான பெண் பலத்த காயங்களுடன் அந்த இடத்திலேயே  உயிரிழந்துள்ளரர்.   குறித்த விபத்து தொடர்பாக … Read more

வண.அதபத்துகந்தே ஆனந்த தேரருக்கு நற்சான்றிதழ் பத்திர கையளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பங்கேற்பு…

வண.அதபத்துகந்தே ஆனந்த தேரருக்கு சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ தம்மரதன பிரஞானதிஸ்ஸ என்ற கௌரவ நாமத்துடன் தக்ஷின லங்காவே சமதபல சம்பன்ன பிரதம நீதிமன்ற சங்க நாயக்க பதவி வழங்கப்பட்டது. ஸ்ரீ சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று, (20) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. வண. அத்தபத்துகந்தே ஆனந்த தேரர் ஆற்றிவரும் சாசன, மத, சமூக சேவைகளைப் பாராட்டி … Read more

அந்தமான் கடற்பரப்பில் சூறாவளி: வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 21ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த தாழமுக்கம் மார்ச் 20 ஆம் திகதி பிற்பகல் 11.30 மணிக்கு தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக வட அகலாங்கு 11.30 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 93.40 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளது. அது வடக்கு திசையில் அந்தமான் தீவுகளை அண்டி நகரக்கூடிய … Read more

புனரமைக்கப்படவுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை கௌரவ பிரதமர் பார்வையிட்டார்

யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று (20) காலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான யுத்தம் காரணமாக மூடப்பட்டது. இத்தொழிற்சாலை 728 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்தாலும், தற்போது அதன் பெரும்பாலான பகுதிகள் குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளன. 2021 பெப்ரவரி 08 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய … Read more