யாழ்ப்பாணம் நாவற்குளி சமித்தி சுமண விகாரையின் பிக்குமார் தங்குமிடக் கட்டிடம் கௌரவ பிரதமரினால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம் நாவற்குளி சமித்தி சுமண விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிக்குமார் தங்குமிடக் கட்டிடம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் இன்று (19) திறந்துவைக்கப்பட்டது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன் இந்த தங்குமிடக் கட்டிடம் கட்டப்பட்டது. பிக்குமார் தங்குமிடக் கட்டிடத்தை திறந்துவைத்த கௌரவ பிரதமர், அப்பகுதியில் உள்ள 50 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 50 போசாக்கு உணவு பொதிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் … Read more

யாழ்ப்பாணத்தில் 50 பாடசாலை மாணவர்களுக்கு கௌரவ பிரதமர் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த மத்திநிலையத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரரைச் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்று (19) சந்தித்து நலம் விசாரித்தார். வணக்கத்திற்குரிய மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட கௌரவ பிரதமர், அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த நிலையத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 50 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை … Read more

கொழும்பின் சில பிரதேசங்களில் தடைப்பட்டிருந்த நீர்விநியோகம் வழமை நிலைக்கு

தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், இரத்மலானை, கொழும்பு 05, கொழும்பு 06, பத்தரமுல்லை, உடுமுல்ல, ஹிம்புட்டான ஆகிய பிரதேசங்களில் நேற்றிரவு (19) முதல் நீர் விநியோகம் தடைப்பட்டது. கொழும்பு 4ல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது. நீர்க் குழாயில் திடீரென ஏற்பட்ட பாதிப்பினாலேயே நீர் விநியோகம் தடைக்கப்பட்டிருந்தது. எனினும், நீர் விநியோகச் செயற்பாடுகள் தற்போது வழமை நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம்

ஒரு லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை இன்று விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட எரிவாயு, கெரவலபிட்டிய எரிவாயு களஞ்சிய கட்டடத் தொகுதியில் வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளது. எரிவாயு இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட கொடுப்பனவை செலுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நேற்று நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், எதிர்வரும் சில தினங்களில் கேஸுக்கான தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று அந்த நிறுவனம் … Read more

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் நாளை இலங்கைக்கு….

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் நாளை இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகை இதுவாகும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து, சீமெந்து, தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தக் கடன் மூலம் வழங்கியது. அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின்போது இதற்கான உடன்படிக்கை சமீபத்தில் கைச்சாத்திடப்பட்டது. இந்தியா, இதற்கு முன்னரும் ஒன்று தசம் நான்கு பில்லியன் … Read more

வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான உத்தேச மேலதிக ஊக்குவிப்புத் திட்டம் இரத்துச் செய்யப்படும்

செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதிப்பது என்ற இலங்கை மத்திய வங்கியினது தீர்மானத்தின் விளைவாக, செலாவணி வீதமானது, வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்களையும் ஏற்றுமதி வருவாய்களை மாற்றுவதனையும் தூண்டும் நோக்குடன் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு மட்டத்தினை விஞ்சுகின்றதொரு மட்டத்தினை தற்போது அடைந்துள்ளமையினைக் காணமுடிகிறது. இதற்கமைய, நடைமுறை செலாவணி வீதம், வெளிநாட்டு வேலையாட்களின் வெளிநாட்டுச் செலாவணி பணவனுப்பல்களின் மீதும் ஏற்றுமதியாளர்களின் தேறிய வருவாய் மீதான உயர்ந்த ரூபா பெறுமதியின் மீதும் உயர்ந்த வருமானத்தினை வழங்குகிறது. அண்மைய இந்நிகழ்வுகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் வெளிநாட்டு வேலையாட்களின் … Read more

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அதற்கான சன்னஸ் பத்திரத்தை கௌரவ பிரதமர் வழங்கி வைத்தார்

அன்றும் வடக்கு மக்களை பாதுகாத்த நாம், அந்த மக்களை பாதுகாத்து இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் இன்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் வழங்கும் வகையில் யாழ்ப்பாணம் நயினாதீவு ரஜமஹா விகாரையில் இன்று (19) இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். யாத்ரீகர்களுக்குத் தேவையான தங்குமிட … Read more

இலங்கை அதிகாரிகளுக்காக இந்தியாவின் ஆளுமைவிருத்தி பயிற்சிகள்

இலங்கை கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக கல்வித் துறையைச் சார்ந்த நிர்வாகிகள், உத்தியோகத்தர்கள், கல்வித்திட்டங்களை வடிவமைப்போர் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோருக்காக சென்னையில் உள்ள தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்விக்கழகத்தினால்(என்ஐடிடிடிஆர்) ஐந்து ஆளுமை விருத்தி பயிற்சி நெறிகள், இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ்(ITEC)  இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த கற்கை நெறிகள் ஊடாக கிட்டத்தட்ட இலங்கையைச் சேர்ந்த 200 அதிகாரிகள் பயன்பெறுவார்கள் என்று நம்பப்படுகின்றது.  2.    … Read more

துறைமுகத்தில் சிக்கியிருக்கும் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை

டொலர் பிரச்சினை காரணமாக கொழும்பு துறை முகத்தில் சிகியிருக்கும் அத்தியாவசிய கொருட்களை உள்ளடக்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், வர்த்தகப் பொருட்களை துரிதமாக விடுவித்து அவற்றை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்குமாறு வர்த்தகர்களிடம் அமைச்சர்  கேட்டுக்கொண்டார். இந்தியாவுடன் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான கொடுப்பனவை பின்னர் செலுத்தும் முறைக்கு அமைவாக கடன் பெறப்பட்டுள்ளது. அதாவது Line of Credit  ஜ … Read more