பாகிஸ்தான் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் லாகூர் நகருக்கு இடமாற்றம்

பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெறவிருக்கும் வரையறுக்கப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் ராவல்பிண்டி நகரிலிருந்து லாகூர் நகருக்கு மாற்றப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் பதற்றங்களினால் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பது இதன் நோக்கமாகும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேய்க் ரசீட் அஹமட் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் எதிர்வரும் 29ம், … Read more

பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்19ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 19ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் … Read more

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்…

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதம செயலாளர் ஜே ஷா (Jay Shah) அவர்கள், இன்று (18) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச்  சந்தித்தார். ஆசிய கிரிக்கெட் சபையின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, திரு. ஜே ஷா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து 40 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை  தந்துள்ளனர். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் … Read more

போராட்டங்கள் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் போது விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது நாளாந்தம் பதிவாகும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், மக்கள் பொதுக் கூட்டங்களை ஒழுங்கமைக்கும்போது சுகாதார நடைமுறைகளை மீறினால் எந்த நேரத்திலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், வரவிருக்கும் பண்டிகை காலத்தை … Read more

நிபந்தனையின்றி இந்தியா, இலங்கைக்கு கடன் – அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை

மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு இந்தியா வழங்கிய 10 பில்லியன் அமரிக்க டோலர்கள் பயன்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று (18) மாலை நாடு திருப்பிய அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில். ஊடகவியலாளர்கள் மத்தியில் இவ்வாறு குறிப்பிட்ட நிதி அமைச்சர், இந்தியா – இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியமைக்காக எந்த நிபந்தனையையும் … Read more

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது 2022 மார்ச்19ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022மார்ச் 18ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின்  ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் … Read more

மார்ச் 21 ஆம் திகதியளவில் சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 18ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. 2022 மார்ச் 18ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக மையம் கொண்டுள்ளது. அது அடுத்த 24 … Read more

பங்களாதேஷ் கபடி விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளும் மட்டக்களப்பு வீரர்கள்

பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்றுவரும் Bangabandhu International கபடி போட்டியில் பங்கேற்பதற்காக தேசிய கபடி அணிக்காக தெரிவாகியுள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த கபடி வீரர்களான எல்.தனுஜன், ஏ.மோகனராஜ் , எல்.அனோஜ், ராசோ வென்சி ஆகிய நான்கு வீரர்களும் பங்களாதேஷ் நோக்கி பயணமாகியுள்ளனர். இன்றைய தினம் இடம்பெறவுள்ள போட்டித் தொடரில் விளையாடுவதற்காகவே குறித்த நான்கு வீரர்களும் தேசிய அணி சார்பாக பங்களாதேஷ் நோக்கி பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்ச் 22 முதல் 25 வரை பாராளுமன்றம் கூடும்

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டை எதிர்வரும் 22ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள  (16) அன்று முற்பகல் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். இதற்கமைய திருத்தங்களுடன் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படவிருப்பதாக ரோஹனதீர தெரிவித்தார். அன்றையதினம் பாராளுமன்றம் மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன் மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை … Read more

சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரம்:விநியோக நடவடிக்கை ஆரம்பம்

விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறை எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.