இலங்கையிலுள்ள முக்கிய குழுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு

இலங்கை தொடர்பான முக்கிய குழுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மார்ச் 18ஆந் திகதி, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடலில் ஈடுபட்டார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, கொழும்பு 2021 மார்ச் 18 —

600 ஹெக்டேர் காணியில் கெளதாரிமுனையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் திட்டம் அமையும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

கிளிநொச்சி – பூநகரி கெளதாரிமுனை தெற்கு கடற்கரை பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்படவுள்ள பிரதேசத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் சேபாலவும் 15.03.2022 அன்று மாலை பார்வையிட்டனர். இதன்போது, திட்டம் தொடர்பில் அதிகார சபையின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெளிவுபடுத்தினார். இந்நிலையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய வகையில் இந்த திட்டம் அமையும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் 240 மெகாவாட் … Read more

யாழ்ப்பாணம் – கிளிநொச்சியில் ‘ஏற்றுமதிக் கிராமம்’ திட்டத்தை வினைத்திறனுடன் செயற்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அத்தியாவசியப் பொருடகள் விநியோகத்தினை மேலும் மேம்படுத்தல் மற்றும் ‘ஏற்றுமதிக் கிராமம்’ எனும் திட்டத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர். http://www.epdpnews.com

பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா – பந்துல குணவர்த்தன விஜயம்!

கற்பக தருவான பனை சார் உற்பத்திகளை மேலும் மெருகேற்றி சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தல் மற்றும், சதோச விற்பனை நிலையங்கள் மூலம் உள்நாட்டு சந்தை வாய்ப்பினை அதிகரித்தல் போன்றவை தொடர்பாக ஆராயும் நோக்கில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளடங்கிய பிரமுகர்கள் பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இதனிடையே ஊர்காவற்துறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் கடற்றொழில் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பிரதிநிதிகள், ஊர்காவற்துறை … Read more

நீரிழிவு நோயால் காலை இழந்த மூன்று குழந்தைகளின் தாய்க்கு பிரதமரின் பாரியாரினால் செயற்கை கால் வழங்கிவைப்பு

நீரிழிவு நோயினால் காலை இழந்து தவித்து வந்த றம்புக்கனை, சியம்பலங்கமுவ பகுதியைச் சேர்ந்த திருமதி .அனுஷா அத்தநாயக்கவுக்கு, அலரிமாளிகையில் வைத்துநேற்று (17) பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்க்ஷ அவர்களினால் செயற்கை கால் வழங்கி வைக்கப்பட்டது. சுமார் பத்து வருடங்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த ஐம்பத்து ஐந்து வயதுடைய குறித்த பெண்மணி பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்க்ஷவுக்கு தனது துன்பங்களை நெரிவித்ததன் விளைவாக செயற்கைக் கால் வழங்கப்பட்டது. இதுவரை தானடைந்த துன்பத்திற்கு விமோசனம் … Read more

திருப்பெருந்துறை நகர அபிவிருத்தி வேலைத்திட்டம்: மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடணத்திற்கு அமைவாக செழுமையான 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறையில் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் மக்கள் பாவனைக்காக இன்று (18) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. திரு.சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிபாரிசுக்கு அமைவாக இந்த திட்டத்தின் கீழான நடைபாதை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் சுமார் 300 மீற்றர்  நீளமான இந்த நடைபாதை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுமார் … Read more

கொரோனா வைரசு தொற்று குறைகிறதா?

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39.75 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18இலட்சத்து 94 ஆயிரத்து327 பேருக்கு கொரோனா … Read more

சென்னையில், 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்

44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளை எதிர்வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 முதல்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் ‘செஸ் ஒலிம்பியாட்’ முக்கியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டிற்கான போட்டிகள் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் … Read more