"இங்க ஒரே ஒரு காமெடியனை வச்சு, மொத்த படத்தையும் முடிச்சிடுறாங்க!" – மனம் திறக்கும் வித்யுலேகா

“உடம்பு குண்டாக்குறதும், அதை ஒல்லியாக்குறதும் எனக்கு ரொம்ப ஈஸி. ஆனா, உடல் எடையை ஒரே எடையா பராமரிக்கறதுதான் ரொம்ப சிரமம். என் கல்யாணத்துக்குப் பிறகு, கொஞ்சம் பூரிப்பானேன். இப்ப `குக் வித் கோமாளி’க்கு பிறகு நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு வெயிட் ஆகிட்டு இருக்கேன்!” – முகம் மலர்ந்து புன்னகைக்கிறார் வித்யுலேகா. நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் அசத்தி வந்தவர். இப்போது விஜய் டி.வியின் ‘குக் வித் கோமாளி’யில் கலகலக்கிறார். எப்படி இருக்கு சின்னத்திரை அனுபவம்..? வித்யுலேகா ”ரொம்ப ரொம்ப … Read more

IPL 2018: Dad's Army- யின் மகத்தான கம்பேக்; தோனி செய்த சிறப்பான சம்பவம்! #OnThisDay

“வந்துட்டேன்னு சொல்லு… ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எப்படி போனனோ அதே கெத்தோடு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என உலகத்தின் காதுகளில் சென்னை அணி உரக்கக் கூறிய தினம் இன்று. சிறிது காலம் காட்டில் இல்லை என்றாலும் சிங்கம் அக்காட்டுக்கு ராஜா நானே! என கேப்டன் தோனி நிரூபித்த தினம் இன்று. சென்னை அணியின் ஆதிக்கம் முடிந்துவிட்டது என நிம்மதி பெருமூச்சுவிட்டவர்கள் எல்லாம் மிரளும் படியான கம்பேக் ஒன்றை 2018-ம் ஆண்டு கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இரண்டு … Read more

“அதிமுக-வுக்குள் சசிகலா வருவது, மோடி, அமித் ஷா கையில் இருக்கிறது” – திருநாவுக்கரசர் எம்.பி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்கப்படவில்லை, போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு இல்லை, பற்றாக்குறையாக இருக்கிறது என்பதே மின்தட்டுப்பாடுக்கு காரணம் என்று கூறப்பட்டது. இது அனைத்தும் விரைவில் சரிசெய்யப்படும் என அத்துறையின் அமைச்சர் தெரிவித்திருந்தார். செல்லுமிடமெல்லாம் பொதுமக்கள் மின் பிரச்னை குறித்து தெரிவிக்கின்றனர். உரிய மின்சார தொகுப்பை மத்திய அரசு கொடுக்க வேண்டும். மின் தட்டுப்பாடு … Read more

நிறம் மாறா நட்பு! – குறுங்கதை

காம்பவுண்ட் சுவரில் பொருத்தியிருந்த கிரில் கேட்டை ராம்நாத் திறந்தபோது க்ரீச்.. க்ரீச்சென சப்தம் எழுப்பியது கேட்.. உள்ளே ஹாலில் ஈஸிசேரில் அமர்ந்து பகவத்கீதையின் சாரம் என்ற புத்தகத்தில் லயித்திருந்த சங்கர சாஸ்திரிகள்… கிரில் கேட்டின் சப்தம் கேட்டு இவன்தான் வருவானென்று யூகித்து சட்டென எழுந்து வந்து மெயின்டோர் நிலைப்படியை அடைத்துக்கொண்டு நின்றுகொண்டார். அப்பா நிலைவாசல்படியை அடைத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தபடியே.. உட்புறமாய் தாளிட்டிருந்த வராண்டா கிரில் கேட்டின் தாழ்ப்பாளை உள்புறம் கைவிட்டுத் நீக்கி வராண்டாவில் கால்வைத்தான் ராம்நாத். “ஏய்.. … Read more

Work From Home-க்கு ஏற்ற 10 சிறந்த நகரங்கள்; Kisi நிறுவனத்தின் அறிக்கை! | PhotoStory

வாழ்விற்கும் வேலைக்குமான சமநிலை குறித்து ஆய்வுசெய்த தொழில்நுட்ப நிறுவனமான Kisi வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கேற்ற 10 சிறந்த நகரங்களைப் பட்டியலிட்டு இருக்கிறார்கள். சிங்கப்பூர் (52.06%) தொழில்நுட்ப நிறுவனமான Kisi வெளியிட்டிருக்கிற அறிக்கை வீட்டிலிருந்தே பணி செய்யப் போதுமான வசதிகளையும் வேலைவாய்ப்புகளை வழங்குகிற நகரங்களையும் சதவிகித அடிப்படையில் வரிசைப்படுத்தியிருக்கிறது. வாஷிங்டன் (49.77%) சிங்கப்பூருக்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரம் இடம்பெற்றிருக்கிறது. ஆஸ்டின் (45.51%) மூன்றாவது இடத்தில் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நகரமான ஆஸ்டின் இடம்பெற்றிருக்கிறது. பெர்ன் … Read more

ஊழியர்களைவிட உயர் அதிகாரிகளுக்கு 184 மடங்கு அதிக சம்பளம்… என்ன காரணம்?

இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு சம்பளம் வந்தாலும் போதவில்லை என்பதுதான் எல்லாத் தரப்பினரருடைய புலம்பலாகவும் இருக்கிறது. ஆனால், உண்மையிலேயே ஆய்வுகள் சொல்லும் முடிவுகளில் ஒரு நிறுவனத்தின் சராசரி ஊழியர்களின் சம்பளம் உயர்வதற்கும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சம்பளம் உயர்வதற்கும் இடையிலான வித்தியாசம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு இருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். Corporate companies இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் ஒரு சராசரி ஊழயரின் சம்பளத்தைவிட உயர் அதிகாரிகளின் சம்பளம் 184 மடங்கு அதிகமாக உயர்ந்திருக்கிறது. சராசரி … Read more

“சிபிஐ, பொய் வழக்கு போட்டு என் குரலை ஒடுக்க முயல்கிறது!" – சபாநாயகரிடம் கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரின் செல்வாக்கைப் பயன்படுத்தி, அவரின் மகனான கார்த்தி சிதம்பரம் சீன நாட்டினர் 263 பேருக்குச் சட்டவிரோதமாக விசா பெற்றுக் கொடுக்க ரூ. 50 லட்சம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதுடன், இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் என்பவரை டெல்லி சிபிஐ கைது செய்து விசாரித்து வருகிறது. மேலும், முதல் குற்றவாளி பாஸ்கரராமன், இரண்டாவது குற்றவாளி … Read more

புதுச்சேரி: “பேனர் வைத்தவர்களே அதனை அகற்றிவிட்டார்கள்!” – மாவட்ட ஆட்சியர் விளக்கம்

புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் இருக்கிறது. பொது இடங்களில் பேனர் வைக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் நிலை ஆணையும் இருக்கிறது. ஆனால் அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் அதனை கண்டுகொள்ளாமல் சாலைகளை அடைத்து பேனர்களை வைப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதனை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் விழா தேதி முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு, பேனர்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அப்படியும் அகற்றாத … Read more

தமிழ்த் தாய் வாழ்த்து: “நிதின் கட்கரி ஏன் எழுந்து நிற்கவில்லை என விளக்க வேண்டும்!"- மனோ தங்கராஜ்

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நேற்று மாலை ஐந்து மணியளவில் சென்னை வந்தார். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாகப் பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெங்களூரு-சென்னை 4 வழி விரைவு சாலையின் 3-ம் கட்ட பணிகளுக்கும், துறைமுகம் – மதுரவாயல் 2 அடுக்கு மேல் நிலை சாலை உள்ளிட்ட ரூ.31,000 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கிவைத்தார். Prime Minister Narendra Modi … Read more

டெல்லி முதல் கர்நாடகா வரை: அடுத்தடுத்து குறிவைக்கப்படும் பழைமையான மசூதிகள்! – கள நிலவரம் என்ன?

“அயோத்தி பாபர் மசூதி, ராமர் கோயிலை இடித்துக்கட்டப்பட்டது, அதை அகற்றிவிட்டு மீண்டும் அந்த இடத்தில் ராமர்கோயில் கட்டவேண்டும்!’ எனக்கோரி ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி போன்ற இந்துத்துவ அமைப்புகள் பல்லாண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தன. விளைவு, 1992-ம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையில் பாபர் மசூதி சட்ட விரோதமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அயோத்தி விவகாரம் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த வழக்கில், கடந்த 2019-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய இடம் இந்து அமைப்பினருக்கே சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்டு, தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த … Read more