ஜம்மு-காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்!

ஜம்மு-காஷ்மீரில் தொலைக்காட்சியில் நடித்துவரும் நடிகை ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திடம், “மத்திய காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் மே 25-ம் தேதியன்று அம்ரீன் பட் என்ற பெண், அவர் வீட்டுக்கு வெளியே இரவு நேரத்தில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் பெண் தொலைக்காட்சிகளில் நடித்து வந்திருக்கிறார். தாக்குதலில் அந்தப் பெண்ணுடன் இருந்த 10 வயது சிறுவன் … Read more

Vijay 66: படத்தில் இணைகிறாரா 'பட்டாஸ்' ஹீரோயின்? யார் இந்த Mehreen Pirzada|Photo Story

விஜய் 66 படத்தில் ஏற்கெனவே நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கி இருக்கையில் புதிதாக மெஹ்ரீன் பிர்ஸாடா இணைய இருப்பதாக வட்டராங்கள் தெரிவிக்கின்றன. யார் இந்த மெஹ்ரீன் பிர்ஸாடா? மெஹ்ரீன் பிர்ஸாடா 2016 தெலுங்கில் வெளிவந்த Krishna Gaadi Veera Prema Gaadha என்கிற படத்தில் அறிமுகமாகிறார். நானி அந்தப் படத்தின் ஹீரோ. தமிழில் 2017-ல் அறிமுகமாகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த `நெஞ்சில் துணிவிருந்தால்’ ஹீரோயின் இவர்தான். இவர் நடித்த `Mahanubhavudu’ ரொமான்டிக் படம் தெலுங்கில் ஹிட். `எங்கேயும் எப்போதும்’ … Read more

பாட்டியாலா சிறை: ரூ.90 தினக்கூலிக்கு கிளார்க் ஆகப் பணியாற்றும் காங்கிரஸின் சித்து!

1988-ல் நடந்த சாலை தகராறு வழக்கு ஒன்றில் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதையடுத்து, சித்து பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சித்து குறித்து சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக சிறை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சித்துவுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, நீண்ட நீதிமன்றத் தீர்ப்புகளை எப்படிச் சுருக்குவது, சிறைப் பதிவுகளைத் தொகுப்பது எப்படி என்று சொல்லி … Read more

GRT ஜூவல்லர்ஸ்: அழகிய ரகங்கள் மற்றும் வியப்பூட்டும் சலுகைகளுடன் வெள்ளிப் பொருள்களின் அணிவகுப்பு!

GRT ஜூவல்லர்ஸ் தெய்வீகமான வேலைப்பாடு மற்றும் மாசற்ற வெள்ளி ஆகிய இரண்டும் சங்கமிக்கும் பிரமிப்பூட்டும் வகையிலான வெள்ளிரகங்களை வழங்குகிறது. மிகவும் அப்பழுக்கற்ற கலைத்திறனுடன் வடிவமைக்கப்பட்ட டிசைன்களைக் கொண்ட இந்த புதிய ரக வெள்ளிப் பொருட்கள் மூன்று விதங்களில் அதாவது கண்கவர் வெள்ளி ஆபரணங்கள், நேர்த்தியான டின்னர் செட்கள் மற்றும் பூஜை பொருட்கள் ஆகிய வகைகளில் கிடைக்கின்றன. இவை உங்கள் வழிபாட்டிற்கு தெய்விக உணர்வை கூட்டுவதோடு உங்கள் வீட்டிற்கு வசீகரமான அழகையும் கொணர்ந்தளிக்கின்றன. 1964-ஆம் ஆண்டு முதல் GRT … Read more

“இனம், மதம், சாதி அரசியல் நீண்ட காலம் நிற்காது…” – சொல்கிறார் சீமான்

“மதத்திற்கும் அரசுக்கும் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. மனிதம் தான் இருந்து அரசு ஆள வேண்டும். அது இங்கு இல்லை. இது பேராபத்தில் தான் கொண்டு போய் நிறுத்தும்” என்கிற, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளன் விடுதலை; பெரியார் எதிர்ப்பு போன்ற விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்… “பேரறிவாளன் விடுதலை சொல்லும் செய்தி…” “31 ஆண்டுகள். முழுக்க முழுக்க ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஒரு குற்றத்திற்கு மரணம், ஆயுள் என … Read more

கோவா: `ஐ லவ் யூ’… ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்த திருடர்களின் மெஸ்சேஜ்

தெற்கு கோவாவின் மார்கோ நகரில், வசித்து வருகிறார் ஆசிப் ஷேக். இவர் இரண்டு நாள் விடுமுறைக்காகத் தனது பங்களாவைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில், விடுமுறை முடித்து வந்த ஆசிப் ஷேக் தனது பங்களா வழக்கத்திற்கு மாறாகக் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகி உடனே கோவா மாநில காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை வீட்டைச் சோதனையிட்டது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் பங்களாவை உடைத்து, ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பொருள்களை … Read more

பரு பிரச்னையால் தள்ளிப்போன திருமணம்; இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம்!

முகத்தில் அதிகப்படியான பரு இருந்த காரணத்தால் திருமணம் தள்ளிப்போனதால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. Pimples (Representational Image) உத்திரபிரதேச மாநிலம், பாண்டா மாவட்டத்தில் உள்ள அஜிட் பரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். தன் முகத்தில் இருந்த அதிகளவிலான பரு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர் வரன் பார்த்த வண்ணம் … Read more

"`நெஞ்சுக்கு நீதி' குமரனா அருள்நிதி இல்லன்னா பா.இரஞ்சித் நடிக்கறதா இருந்துச்சு. ஆனா…"- ஆரி

பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னரான ஆரி, உதயநிதி ஸ்டாலின் நடித்த `நெஞ்சுக்கு நீதி’ படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். படம் குறித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். பிக் பாஸுக்கு அப்பறம் ‘நெஞ்சுக்கு நீதி’ வாய்ப்பு அமைஞ்சது எப்படி? “பிக் பாஸ் பயணத்துக்குப் பிறகு எதுல இருந்து ஆரம்பிக்கணும்னு கேள்வி இருந்தது. ஏன்னா, வரலாற்று வெற்றின்னு எல்லாம் சொன்னாங்க. இந்தியாவிலேயே அதிகம் ஓட்டு வாங்குனா அஞ்சாவது ஆளுன்னு சொன்னாங்க. அளவுகடந்த அன்பை எல்லாரும் கொடுத்தாங்க. … Read more

அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி மோசடி?! – ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் நடந்தது என்ன?

மோசடி விளம்பரம்: சென்னை அமைந்தகரை பகுதியில் செயல்படும் ஆரூத்ரா கோல்டு நிறுவனத்துக்குத் தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட விளம்பரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதாவது, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தல் 36 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்று விளம்பரம் வெளியானது. இந்த விளம்பரத்தை நம்பி சிலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆருத்ரா கோல்டு நிறுவனம் இந்த விளம்பரம் தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்குப் … Read more

LSG v RCB: ரஜத் பட்டிதரின் அபார சதமும் ராகுலின் தொடர் சொதப்பலும்; எலிமினேட்டரைத் தாண்டிய ஆர்சிபி!

பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 207 ரன்களை எடுத்து முடித்தவுடன் சமூக வலைதளங்களில் ஒரு மீம் அதிகமாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. ‘பொல்லாதவன்’ படத்தின் கருணாஸ் வசனம் பேசும் டெம்ப்ளேட்டை மையமாகக் கொண்ட அந்த மீமில் பெங்களூருவின் பௌலர்கள் `10 ஓவருக்கு இந்த ஸ்கோரு போதும் மிச்சம் 10 ஓவருக்கு என்னா பண்றது’ என கேட்பது போல அமைந்திருக்கும். வேடிக்கையாக போடப்பட்டிருந்த மீம் நிஜமாவதை போன்றுதான் பெங்களூருவின் பௌலிங் இருந்தது. ஆனாலும் எப்படியோ சமாளித்து ஒரு வழியாக … Read more