Suriya 41: சூர்யா – பாலா படம் டிராப்பாகிறதா? பரவிய செய்தியும், விசாரித்த உண்மையும்!

இயக்குநர் பாலா – சூர்யாவின் கூட்டணியில் உருவாகி வரும் `சூர்யா-41′ படத்தின் பட்ஜெட் அதிகரித்ததன் காரணமாக மேற்கொண்டு படத்தின் படப்பிடிப்பு நடைபெறாது என்றும் படம் பாதியில் டிராப் ஆக உள்ளது என்றும் நேற்று திடீரென தகவல் பரவியது. அதேபோல் நாயகன் சூர்யாவுக்கும், இயக்குநர் பாலாவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து விசாரித்தோம். பாலாவின் இயக்கத்தில் சூர்யா ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களுக்குப் பிறகு ‘சூர்யா-41’ல் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை கன்னியாகுமரியில் துவங்குவதற்கு … Read more

தூத்துக்குடி: “தமிழகத்தில் ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு இடமில்லை!" – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சார்பில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் உயிர்ச்சூழல் பாதுகாப்புக் கருத்தரங்கம் தூத்துக்குடியில், கடந்த 24-ம் தேதி மாலையில் நடந்தது. இதில், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த மேதா பட்கர், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான தொல்.திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், மே-17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, பச்சைத்தமிழகம் கட்சியின் தலைவர் … Read more

குவாட் மாநாடு: டோக்கியோவில் பறந்த ரஷ்ய, சீன ஜெட் விமானங்கள்! – ஜப்பான் அமைச்சர் கண்டனம்

குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலிய, ஜப்பான் ஆகிய நாடுகள், பிராந்திய பாதுகாப்பு குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தின. ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்ற இந்த குவாட் மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி உட்பட நான்கு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், பாதுகாப்பு குறித்த இந்த பேச்சுவார்த்தையின்போது, டோக்கியோ நகரில் ரஷ்ய, சீன போர் விமானங்கள் வானில் பறந்ததாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நோபுவோ கிஷி … Read more

'என் முன்னோர் செய்த புண்ணியம் இது!' – டி.எம்.எஸ்

பதினாறு ஆண்டுகளுக்கு முன், சென்னை தெருக்களில் இருபது வயது வாலிபர் ஒருவர் சுற்றி அலைந்து கொண்டிருந்தார். அவருக்குச் சொந்த ஊர் மதுரை. இருநூற்றைம்பது ரூபாய் பணத்தோடும், தன் குரல் மீதுள்ள நம்பிக்கையோடும் சென்னை வந்தார். திரும்பி மதுரைக்குப் போக பணத்தை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு ஸ்டூடியோ ஸ்டூடியோவாக அலைந்தார். இசையமைப் பாளர்களின் வீடு வீடாக ஏறி இறங்கினார். படத்தில் பாட ‘சான்ஸ்’ கேட்டார். ‘சான்ஸ்’ கிடைக்கவில்லை. கையிலிருக்கும் பணமும் குறைந்து கொண்டே வந்தது. ஆனால், நம்பிக்கை மட்டும் … Read more

Doctor Vikatan: பனீர்… சீஸ்… குழந்தைகளுக்கு எது பெஸ்ட்?

குழந்தைகளுக்கு தினமும் சீஸ் கொடுக்கலாமா? சீஸ் கொடுத்தால் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்குமா? பனீர் கொடுப்பது நல்லதா? நவீன் (விகடன் இணையதளத்திலிருந்து) பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் சீஸ் மற்றும் பனீர் இரண்டிலுமே ஆற்றல், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் ஏ மற்றும் பி12, தாதுச்சத்துகள், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. பதப்படுத்தப்பட்ட சீஸை தினமும் குழந்தைகளுக்கு அவர்களது வயது மற்றும் உடல்வாகுக்கேற்ற பரிந்துரையின் அளவில் கொடுக்கலாம். ஊட்டச்சத்து ஆலோசகர் … Read more

`அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 19 குழந்தைகளைச் சுட்டுக்கொன்ற 18 வயது இளைஞன்!'

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள தொடக்கப்பள்ளியொன்றில், 18 வயது இளைஞன் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வெளியான தகவலில், டெக்ஸாஸ் மாகாணத்தில் சான் அன்டோனியாவுக்கு மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள யுவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளியினுள், 18 வயது இளைஞர் ஒருவர் காலை 11 மணியளவில் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். அப்போது திடீரென அந்த இளைஞன் பள்ளியினுள் கண்மூடித்தனமாகச் … Read more

புலன் விசாரணை: "படம் ஓடலைன்னா என்னைப் பார்க்கவே வராதே…"- இயக்குநர் சந்தித்த சோதனையும், சாதனையும்!

80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – `புலன் விசாரணை’. இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம். டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K Kids “இந்த ஆர்ட் பிலிம்ன்றாங்களே… திரைப்படக் கல்லூரி மாணவர்களால் அந்த மாதிரி ஒண்ணை வேணா எடுத்துட முடியும். ஆனா ஒரு கமர்சியல் சினிமாவை எடுத்து சக்சஸ் காட்ட முடியாது. அதற்கு நடைமுறை அனுபவ அறிவு … Read more

ஆந்திரா: அம்பேத்கர் பெயரைச் சூட்டியதால் வெடித்த கலவரம்; அமைச்சர், எம்.எல்.ஏ இல்லங்களுக்கு தீ வைப்பு

ஆந்திர மாநிலத்தில் `கோனசீமா’ என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்துக்குப் பெயரிடுவதில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அங்கு மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே உள்ள 13 மாவட்டங்கள், தற்போது 26 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், புதிதாக உருவாக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்துக்கு `பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா’ எனப் பெயரிடலாம் என அரசு பரிசீலித்து வந்தது. இதற்கு சில அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வந்தன. இந்த நிலையில், அந்த அதிருப்தி அலை தற்போது … Read more

GT v RR: பட்லரை ஓரங்கட்டிய மில்லரின் ஹாட்ரிக் சிக்ஸர்கள்… முதல் சீசனிலேயே பைனல் சென்ற குஜராத்!

லீக் போட்டிகளை முடித்துவிட்டு, இந்த ஐபிஎல்லின் முதல் குவாலிபையர் போட்டி கொல்கத்தாவில் தொடங்கியது. ராஜஸ்தான் வென்றால் 2008-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஃபைனலுக்கு முன்னேறலாம். ஒரு பக்கம் மழை வரலாம் என்கிற அச்சுறுத்தல் இருந்தாலும், அடித்து வெளுத்தது என்னவோ மில்லர் புயல்தான். 2016-ம் ஆண்டும் கார்லோஸ் பிராத்வெய்ட் பவுண்டரிகளாக அடித்து வெற்றியை நோக்கி நகர்ந்தார். இந்த முறை ‘மில்லர் தி கில்லர்’ அதைச் செய்திருக்கிறார். ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று சேஸிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் … Read more