பெட்ரோல், டீசல் விலை குறைப்பு… எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணியுமா தமிழக அரசு?

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சிறிய கால இடைவேளைக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் தினந்தோறும் அதிகரித்துவந்தன. ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் தாண்டியது. டீசல் விலையும் 100 ரூபாயைத் தொட்டது. பெட்ரோல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,000 ரூபாயைத் தாண்டியது. அதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் … Read more

சூர்யா – இயக்குநர் சிவா கூட்டணியில் ஒரு பான் இந்தியா பிரீயட் படம்… ஷூட்டிங் எப்போது?

`அண்ணாத்த’ சிவா – சூர்யா இணையும் படம் வருகிற ஜூலையில் துவங்குகிறது என்றும், இது `கே.ஜி.எஃப்’ போல பீரியட் படம் என்றும் தகவல்கள் வைரலாகி வருகின்றன. இதன் உண்மைத் தன்மை குறித்து விசாரித்தோம். சூர்யா இப்போது பாலாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய கடலோர பகுதிகளில் நடந்து முடிந்தது. இதன் அடுத்த ஷெட்யூல் கோவாவில் விரைவில் துவங்கவிருக்கிறது. சிவா ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் வெளியான சூட்டோடு சிவாவின் படம் … Read more

காவல் நிலையத்துக்கு தீ வைப்பு, வீடுகள் தரைமட்டம்… என்ன நடக்கிறது அஸ்ஸாமில்?

பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலம் நகோவான் பகுதியில் உள்ள பதாத்ரபா காவல் நிலையத்தை அப்பகுதி மக்கள் சிலர் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அந்த காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை சபிகுல் இஸ்லாம் என்ற மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார். அந்நபர் காவல் விசாரணையின் போது உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினரும் அப்பகுதி மக்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தீ வைத்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட ஐந்து குடும்பங்களின் வீடுகளை நகோவான் மாவட்ட நிர்வாகம், `சரியான … Read more

காலமெல்லாம் காதல் வாழ்க – விகடன் விமர்சனம்

பிரபலமான படத்தை வேற்றுமொழியில் ரீமேக் செய்வது புதுசான விஷயமல்ல! ஆனால், ‘காதல் கோட்டை’ படத்துக்கே கொஞ்சம் வேறு மாதிரி சட்டை மாட்டி தமிழ் ஸ்க்ரீனுக்கே மறுபடியும் கொண்டு வந்திருப்பதுதான் லேசாக நெருடுகிறது! ஹீரோயின் கவுசல்யாவுக்குத் தான் காதலிக்கும் ஹீரோ முரளியைத் தெரியும். ஹீரோ அடிக்கடி போனில் இவர் குரலைக் கேட்டுத் தவிப்பதோடு சரி… ‘அந்தக் குரல் என்னை உருக வைக்கிறது’ என்கிறார் முரளி. முரளியின் மூச்சு அடங்குகிற அளவுக்கு நிலைமை முற்றிவிட்ட பிறகு மறைந்து மறைந்து வேடிக்கை பார்த்த … Read more

மது போதையில் முதல்வருக்கு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! – நெல்லையில் கைதான ரயில்வே ஊழியர்

தமிழ்நாடு முதலமைச்சர் வீட்டில் உள்ள தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு (22-ம் தேதி) ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அதில், பேசிய நபர், “முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருக்கிறேன். அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும்” என வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவிட்டு தொடர்பைத் துண்டித்திருக்கிறார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்தோணி ராஜ் அதனால் பரபரப்படைந்த முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், அழைப்பு வந்த செல்போன் நம்பரை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த எண் எங்கிருந்து அழைக்கப்பட்டிருக்கிறது … Read more

பூவிலங்கு! – விகடன் விமர்சனம்

தயாரிப்பாளர் கே. பாலசந்தருக்கும் டைரக்டர் அமீர்ஜானுக்கும் நன்றி எதிர்காலத்துக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஒர் இளம் கதாநாயகனைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளதற்காக! (கதாநாயகி விஷயத்தில் இவர்கள் கோட்டை விட்டு விட்டார்கள் என்பது வேறு விஷயம்!) ரஜினிகாந்த், விஜய்காந்த் மாதிரி ஆண்மையோடு காதலிக்கவும், வீரத் தோடு சண்டை போடவும் வருங்காலத்துக்கு ஒரு வாரிசு இல்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு ‘பூவிலங்கு’ முரளி நல்ல ஆறுதல்! Poovilangu – vikatanreview கல்லூரியில் புதுசாகச் சேரும் மாணவி சரசுவை (குயிலி) ‘டீஸ்’ செய்யும் போதும், தன்னை … Read more

19,500 லிட்டர் கலப்பட எரிபொருள் பறிமுதல் – இருவர் கைது… சென்னையில் சோதனை தீவிரம்!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலப்பட எரிபொருள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், கலப்பட எரிபொருள் குறித்த ரகசியத் தகவல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸாருக்கு கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பெட்ரோல் தனிப்படை போலீஸார் அம்பத்தூர், பட்டரைவாக்கம், திருநின்றவூர் பகுதிகளில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளிலுள்ள கிடங்குகளில் தகுந்த ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கலப்படம் செய்யப்பட்ட எரிபொருள்கள் பதுக்கி … Read more

சொன்னால்தான் காதலா – விகடன் விமர்சனம்

 டி. ராஜேந்தரின் குடும்பப் படம். ஸாரி குடும்பப் பாங்கான படம்! மூன்று சகோதரிகள், ஒரு தம்பி என்று மெகா சீரியல் பாணி குடும்பத்தில் பிறந்த ரோஜாதான் குடும்பத்தின் வருமானத் தூண். குடிகார அப்பா மணிவண்ணன், அக்காவின் மானங்கெட்ட கணவனான வடிவேலு என்று கூட்டுக் குடும்பச் சிக்கல்கள். போதாதென்று விரட்டி விரட்டிக் காதலிக்கும் சக ஊழியர் முரளி. இப்படி பிரச்னை முட்களுக்கிடையே மலர்ந்து நிற்கிறது ரோஜாவின் வாழ்க்கை பத்திரிகையாளர்-கம்- பாடலாசிரியர்-கம்-காதல்குரு-கம்-ஆர்க்கெஸ்ட்ரா நடத்துபவராகப் படத்திலும் ஒரு பலகலைப் பிரமுகராக டி. ராஜேந்தர். இவரது தங்கை … Read more

நாய்க்கு பயந்து ஓடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மரணம்; மனதை உலுக்கும் சோகம்!

ஆழ்துளை கிணற்றில் 100 அடி ஆழத்தில் தவறி விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள கியாலா கிராமத்தில் ரித்திக் எனும் ஆறு வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவனை தெரு நாய்கள் துரத்தி உள்ளன. பயந்து ஓடிய சிறுவன் சணல் பையால் மூடப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றின்மேல் ஏறி நின்றுள்ளான். சிறுவனின் எடை தாங்காமல் சணல் பை அறுந்ததில், சிறுவன் ஆழ்துளை கிணற்றில் 100 … Read more

பகல் நிலவு! – விகடன் விமர்சனம்

கிரிஜா கல்யாணசுந்தரம், ஈரோடு.இந்தப் படத்தின் கதையைப் பொறுத்த  வரை ‘பழைய கள்; புதிய மொந்தை…’  சரிதானே? எம்.எஸ்.எம். ஸ்ரீதேவி, திருவண்ணாமலை.கதை புதுமையானதல்ல. ஆனால் படம் பார்ப்பதற்கு அலுப்பைத் தரவில்லை என்பது குறித்து தங்கள் கருத்து என்ன? அந்தக் கிராமத்துப் பெரியவர் சத்யராஜ் பசுத்தோல் போர்த்திய புலி. ஆஷாடபூதி. ஆரம்பத்தில் கதாநாயகன் முரளிக்குக் கெட்ட புத்தியோடு இவர் உதவ, அதையறியாத முரளி உடனே சரணாகதி!  ஊருக்குப் புதுசாய் வரும் போலீஸ் ஆபீசர் சரத்பாபு மனைவியை இழந்தவர். இவர் தங்கை ரேவதி… … Read more