மதுரை: காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி; சாதிக்கும் தெற்கு ரயில்வே!

காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பல கோடி ரூபாய்க்கு மின்சாரச் செலவைக் குறைத்து தெற்கு ரயில்வே சாதனை செய்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை ரயில்வே கோட்ட ஊடகத் தொடர்பாளர், “சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளைத் தெற்கு ரயில்வே எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரைக் கோட்டத்தில் கயத்தாறு அருகில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்துவருகிறது. காற்றாலை மின் உற்பத்தி 10.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்தக் காற்றாலை அமைக்க … Read more

விழுப்புரம்: பெண் அதிகாரி Vs விசிக மாவட்ட செயலாளர்; உச்சக்கட்ட வாக்குவாதம் – பின்னணி என்ன?

விழுப்புரம் வடக்கு மாவட்ட வி.சி.க செயலாளராக இருப்பவர் சேரன். இவரின் மனைவி ஷீலாதேவி தற்போது விழுப்புரம் மாவட்ட துணைச் சேர்மனாக இருக்கிறார். அரசியல் பின்புலம் மட்டுமின்றி, அரசு ஒப்பந்ததாரராகவும் செயல்பட்டு வந்துள்ளார் சேரன். இந்நிலையில், விழுப்புரம் தாட்கோ அலுவலக செயற்பொறியாளர் அன்பு தேவகுமாரியிடம்… இவர், ஆதரவாளர் சிலருடன் சென்று தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகளும்; பெண் செயற்பொறியாளர், இந்நபரை ஒருமையில் பேசி மேசையின் மீது இருந்த ஒரு பொருளை ஆக்ரோஷமாக எடுக்கும் மற்றொரு … Read more

“காந்தியம், கம்யூனிசம், திராவிட மாடல்… மூன்றும் ஒரே ராணுவத்தின் 3 படைகள்” – பீட்டர் அல்போன்ஸ்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் 12வது மாநில மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாள் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமசந்திரன் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “விலைவாசி உயர்வை கண்டித்து வரும் 25-ஆம் தேதி முதல் 31-ம் தேதி … Read more

காங்கிரஸில் இருந்து ஹர்திக் படேல் விலகல்: வருகிற குஜராத் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு லாபம்?!

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியில் தொடரும் உட்கட்சிப் பூசலால் படிதார் குழுவின் தலைவர் ஹர்திக் படேல் அந்தக் கட்சியிலிருந்து தான் விலகிவிட்டதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக, “நான் முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேச முயன்றபோது அவர்கள் குஜராத் பிரச்னைக்கு செவி சாய்ப்பதைவிட மொபைல் போன்களில் பரபரப்பாக மூழ்கியிருந்தனர். குஜராத் காங்கிரஸ் மூத்த தலவர்களுக்கோ, டெல்லியில் இருந்து வரும் கட்சி மேலிடத் தலைவர்களுக்கு ‘சிக்கன் சேண்ட்விச்’ சரியாக தயாராகிறதா என்பதை கவனிப்பதில்தான் அக்கறையே தவிர மக்களுக்கான யாத்திரையில் எந்த … Read more

குறைவான பணவீக்கம்… விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா… சாத்தியமானது எப்படி?!

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், ஏப்ரல் மாதத்துக்கான பணவீக்க புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசின் கீழ் இயங்கும் `தேசிய புள்ளியியல் அலுவலகம்’ (NSO). அந்தப் புள்ளிவிவரப் பட்டியலில், குறைந்த அளவிலான பணவீக்கம் கொண்ட மாநிலங்களில், முதல் இரண்டு இடங்களைக் கேரளாவும், தமிழ்நாடும் பிடித்திருக்கின்றன. இது சாத்தியமானது எப்படி? பணவீக்கம் தேசிய சாரசரியைவிட குறைவான பணவீக்கம்! ஏப்ரல் … Read more

RR v CSK: "Definitely" தோனி சொன்ன அந்த நம்பிக்கை வார்த்தை; டேபிளில் 2வது இடத்தை அடைந்த ராஜஸ்தான்!

தோனியால் 2020-ல் சொல்லப்பட்ட “Definitely Not” க்கும், இந்த ஆண்டு அதைச் சற்றே மாற்றிக் கூறப்பட்ட “Definitely”க்கும் இடையே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இருப்பினும், `அவரது இருப்பு மட்டுமே போதும்’ என்ற மனநிலையிலிருந்து ரசிகர்கள் மாறவே இல்லை. “அடுத்த சீசனும் ஆடுவேன்” என்ற அவரது கூற்றே போட்டியைத் தொடங்குவதற்கு முன்னதாகவே வென்றுவிட்ட திருப்தியை அவர்களுக்குக் கொடுத்தது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை 2008-க்குப் பிறகு அவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்து வந்த டாப் 2 இடத்தில் இந்தாண்டாவது முடிக்க வேண்டும் … Read more

21.05.22 சனிக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

#indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

ஊட்டி மலர் கண்காட்சி: திடீரென உயர்த்தப்பட்ட பூங்கா நுழைவுக் கட்டணம் – புலம்பும் உள்ளூர் மக்கள்!

நூற்றாண்டுச் சிறப்பு வாய்ந்த ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மலர் கண்காட்சி இன்று தொடங்கியிருக்கிறது. தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறவிருக்கும் 124-வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு மலர் அலங்காரங்களையும், மலர் மாடங்களை அலங்கரிக்கும் பல லட்சம் பூக்களையும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். இடைவிடாது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. கட்டண உயர்வு கடந்த … Read more

உயிரிழந்த பட்டியல் சமூகப்பெண்; அடக்கம் செய்ய இடமின்றி தவிப்பு – ஊரின் ஓடையோரம் எரிக்கப்பட்ட சோகம்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது கொட்டியாம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 8 பட்டியல் சமூக குடும்பங்களும், 500-க்கும் மேற்பட்ட மாற்று சமூக மக்களும் வசித்து வருகின்றனர். இந்த ஊரில், பட்டியல் சமூக மக்களுக்காக நிலையான சுடுகாடு ஏதுமில்லாமல்… ஓடை, ஏரி, குளம் போன்ற பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வந்துள்ளனர். ஆகவே, தங்கள் சமூகத்திற்கு தனியாக சுடுகாடு அமைத்துத்தர வேண்டும் என்று விக்கிரவாண்டி வட்டாட்சியர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பல … Read more

9-ம் இடத்திலிருந்து 3-ம் இடம்; டாடா மோட்டார்ஸ் முன்னேறியது எப்படி? – திருப்புமுனை – 12

2006 முதல் 2016-ம் ஆண்டு வரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்திய கார் சந்தையில் இடமில்லை. 2015-ம் ஆண்டில் இந்திய கார் சந்தையில் 9-வது இடத்தில் இருந்தது டாடா மோட்டார்ஸ். அந்தளவுக்கு பல சிக்கல்களைச் சந்தித்தது. ஆனால், கடந்த நிதி ஆண்டில் இந்திய கார் பிரிவில் மூன்றாவது இடத்தில் இருப்பதுடன், தற்போது ஐ.சி.இ இன்ஜின் பிரிவில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது டாடா மோட்டார்ஸ். தவிர, எலெக்ட்ரிக் கார் பிரிவில் முதல் இடத்தில் இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் பாகிஸ்தான் … Read more