“அனைத்து இந்து விவகாரங்களிலும் துரோகி என்றால் அது சுப்பிரமணியன் சுவாமிதான்!"- தஜிந்தர் பால் தாக்கு

அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடமாக நம்பப்படும் ஷாஹி இத்கா மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவிடக் கோரி, மதுரா நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல், வாரணாசியிலுள்ள கியான்வாபி மசூதி தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உதித்தரவின்பேரில் விசாரணைக்குழு நடத்திய ஆய்வில், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான், பா.ஜ.க-வை சேர்ந்த முன்னாள் ராஜ்ய சபா எம்.பி-யான சுப்பிரமணியன் சுவாமி, “8 வருடங்களாக மோடி மக்களவையிலும், … Read more

174 நெல் ரகங்கள், விவசாயிகளுக்கு 2 கிலோ விதைநெல்; மே 21-ம் தேதி தொடங்கும் தேசிய நெல் திருவிழா!

ஒவ்வோர் ஆண்டும் திருத்துறைப் பூண்டியில் நடைபெறும் நெல் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.வி. தனலட்சுமி திருமண அரங்கில் வருகிற மே 21, 22 , சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் தேசிய அளவிலான நெல் திருவிழா நடைபெறவுள்ளது. ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பர்ய நெல் பாதுகாப்பு மையம் இவ்விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் பாரம்பர்ய நெல் ரகங்களின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. … Read more

"`கே.ஜி.எஃப்' டப்பிங் பேசறப்பவே படத்தோட வசூலை சாக்குலதான் அள்ளணும்னு சொன்னேன்!" `நிழல்கள்' ரவி

செல்போன் சார்ஜரை போலதான் நிழல்கள் ரவியும். அவரிடம் பத்து நிமிஷம் பேசினாலே போதும், ஃபுல் எனர்ஜி நமக்கு ஏறிவிடும். அப்படி ஒரு உற்சாக குடோன் அவர். மணிரத்னத்தின் `பொன்னியின் செல்வன்’ படத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். `கே.ஜி.எஃப்.’ல உங்க வாய்ஸ் ஓவர் ரொம்ப பிரபலம். டப்பிங், வாய்ஸ் ஓவர் துறைக்குள் எப்படி வந்தீங்க? “‘நிழல்கள்’ல நான் அறிமுகமாகுறதுக்கு முன்னாடி, பாரதிராஜா சார் அப்ப ‘நிறம் மாறாத பூக்கள்’ இயக்கிட்டு இருந்தார். அதோட டப்பிங் நடந்துட்டு இருந்துச்சு. ஒரு கேரக்டருக்கு … Read more

`எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க!' – குறைகேட்புக் கூட்டத்தில் ரோஜாவிடம் கோரிக்கை வைத்த முதியவர்

ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரோஜா, நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதையடுத்து ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களும் தங்களின் சட்டமன்ற தொகுதிகளுக்குச் சென்று, மக்கள் குறைகளைக் கேட்டுவரும்படி உத்தரவிட்டிருந்தார். ரோஜாதனது சட்டமன்ற தொகுதியான நகரியில் மக்களின் குறைகளைக் கேட்டுவந்தார். ரோஜா அரசியலில் சந்தித்த சோதனைகள், வேதனைகள்… அமைச்சர் ரோஜா ஜெயித்த கதை! ஒவ்வொரு வீடாக விசாரித்து வந்தபோது, முதியவர் … Read more

விஜய் பிறந்தநாளுக்கு எஸ்.ஏ.சி போடும் திட்டம்… அப்பா – மகன் இடையே அதிகரிக்கிறதா விரிசல்?

“விஜய்யின் இந்தப் பிறந்தநாளில் ஒரு முக்கியமான ஒரு அறிவிப்பை கொடுக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு விஷயம் ரொம்ப நாளா என் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு. குறிப்பா, இந்திய மக்கள் பாதுகாப்பா இருக்காங்களா? தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கா? ஒரு தாய் தனியா இருக்க முடியுதா? ஒரு குழந்தை தனியா விளையாடிட்டு வீட்டுக்கு வர முடியுதா? என்பது குறித்தெல்லாம் ரொம்ப காலமாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு தமிழனுக்கும் பாதுகாப்பு கிடைக்கவேண்டும். அதற்கு எல்லோர் வீட்டிலும் சிசிடிவி கேமரா இருந்தால் குற்றம் … Read more

வெங்கைய நாயுடு பங்கேற்கும் நிகழ்ச்சியில் பணியின்போது இறந்த புலனாய்வு அதிகாரி! – என்ன நடந்தது?

தெலங்கானா மாநிலம், மாதப்பூரில் உள்ள ஷில்பகலா வேதிகாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு பங்கேற்கும் நிகழ்ச்சி தொடர்பான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த புலனாய்வு பணியகத்தின் (ஐ.பி) உதவி இயக்குநர், மேடையிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி உயிரிழந்தது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போலீஸார், “வரும் 20-ம் தேதி ஷில்பகலா வேதிகாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. … Read more

யூதர்கள் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'The Holocaust' படங்கள் |Photo Story

நாஜி வதைமுகாம்கள் பற்றியும் யூதர்களின் படுகொலைப் பற்றியும் எடுக்கப்பட்ட படங்களில் பார்க்க வேண்டிய சில படங்கள் பற்றிய Photo Story. Schindler’s List: ஹிட்லரின் வதை முகாம்களில் கொடுமைக்குள்ளாகும் யூதர்களை, அடிமைகளாக வாங்க வரும் தொழிலதிபர் மனம் மாறி தன்னிடம் இருக்கும் மொத்த பணத்தையும் வைத்து தன்னால் முடிந்த நூற்றுக்கணக்கான யூதர்களை வாங்கி அவர்களை விடுவிக்கும் நெகிழ்ச்சிக் கதை இது. The Diary of Anne Frank: யூத இனத்தைச் சேர்ந்த Anne Frank என்ற இளம்பெண் … Read more

`காதலியை கடத்தி விட்டனர்' – நீதிமன்றத்துக்குள் கையை பிளேடால் அறுத்து கொண்ட வாலிபரால் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் நீதிபதியை பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் தலைமை நீதிபதி மாறுதலாகி சென்றுவிட்டதாகவும், புதிய நீதிபதி இன்னும் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளனர். அப்போது திடீரென, `என்னுடைய காதலியை கடத்திவிட்டனர், அவரை தன்னுடன் சேர்த்துவைக்க யாருமே இல்லையா’ என்று நீதிமன்றத்திற்குள்ளேயே தனது இடது கையில் பல இடங்களில் பிளேடால் அறுத்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். அதனை … Read more

Sid Sriram: `அடியே' டு 'ஸ்ரீவள்ளி' வரை; காந்தக் குரலால் கட்டிப்போட்ட மந்திரக்காரன்|PhotoStory

சித் ஸ்ரீராம் குரலில் திகட்ட திகட்ட காதல் பாடல்களை கேட்டவர்களுக்குத் தெரியும் அவரின் குரலின் தனித்துவம். காந்தக் குரலோனுக்கு இன்று பிறந்தநாள். கடல் படத்தில் வரும் `அடியே, என்னை நீ எங்க கூட்டிப் போற’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சித் பாடி 2013-ல் வெளியாகிறது. அங்கிருந்து புஷ்பாவின் ஹிட் பாடலான ‘ஸ்ரீவள்ளி’ வரை அவர் பாடிய பாடல்களில் சித் ஸ்ரீராமை நம்மால் எளிதில் அடையாளம் காண முடியும். சென்னை பையனான சித் வளர்ந்தது எல்லாம் கலிபோர்னியா, அமெரிக்கா. அம்மா … Read more

Engineering: அடுத்த ஐந்தாண்டுகளில் வேலைவாய்ப்பு மிக்க துறைகள் என்னென்ன?

இன்ஜினீயரிங் துறைக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லக்கூடிய அதே நேரத்தில் அத்துறையில் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் உருவாகப்போகிறது போன்ற கேள்விகளோடு மனித வள மேம்பாட்டாளர் சுஜித் குமாரிடம் கல்வியாளர் ரமேஷ் பிரபா நிகழ்த்திய உரையாடல் இதோ… Engineering 1. சில இன்ஜினீயரிங் படிப்புகளுக்கு கணிதம் தொடங்கி சில பாடங்களின் மதிப்பெண்கள் அவசியமில்லை என்று கூறியிருக்கிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? “இன்ஜினீயரிங் மாணவர்களை எடுத்துக்கொண்டால், அதில் அதிக பேர் அரியர் வைத்திருப்பது கணிதத்தில்தான். … Read more