Cannes: கலர்புல்லாக களமிறங்கிய தீபிகா, பூஜா ஹெக்டே; கூலான கமல், ரஹ்மான், பா.ரஞ்சித்| Photo Story

நேற்று 75-வது கான் திரைப்பட விழா ஆரவாரமாகத் தொடங்கியிருக்கிறது. மே 25 வரை நடைபெறவிருக்கும் இந்தத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இந்திய நட்சத்திரங்கள் பலரும் பிரான்ஸுக்கு சென்றிருக்கின்றனர். தீபிகா படுகோன் இந்த வருடம் நடுவர் குழுவில் இடம்பெற்றிருக்கிறார். தமன்னா கான் திரைப்பட விழாவில் பங்கேற்கிறார். ரஹ்மான் இயக்குநராக களமிறங்கி இயக்கிய முதல் படம் Le Musk திரையிடப்பட உள்ளது. மாதவன் முதன் முறையாக இயக்கிய Rocketry: The Nambi Effect படமும் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட … Read more

`பன்றிக்கறி வறுவலும் கடுங்குளிரின் வாதையும்' – ஸுகு பள்ளத்தாக்கு அனுபவங்கள்! – Back பேக் – 12

அந்த இரவில் என் பயணத்திட்டத்தை மாற்றியமைத்தவன் சௌரவ்தான். அடுத்த நாள் அதாவது பிப்ரவரி 15-ம் தேதி திமாபூரிலிருந்து கவுஹாத்திக்கு ரயில் முன்பதிவு செய்திருந்தேன். கவுஹாத்தி சென்று மேகாலயா செல்வதுதான் திட்டம். அஸ்ஸாம் மாணவிகளில் ஒருத்தி குளிர்காய்ந்தபடியே அடுத்து உங்கள் பயணத்திட்டம் என்ன என்று கேட்டபோது நான் ஷில்லாங் சென்று சிரபுஞ்சி செல்லும் திட்டத்தைச் சொன்னேன். மேகாலயாவுக்கு மூன்று நாள்கள் ஒதுக்கியிருக்கிறேன் என்று சொன்னதும் அது பயனற்றது என்றான் சௌரவ். மேகாலயாவின் பூரண அழகு வெளிப்படுவது மழைக்காலத்தில்தான் என்பதால், … Read more

"சினிமா ஊமையாக இல்லை என்பதை நிரூபிக்க புதிய சாப்ளின் தேவை" – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

2022-ம் ஆண்டிற்கான 75-வது கான் திரைப்பட விழா பிரான்ஸின் கான் நகரில் மே 17-ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மே 17-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இவ்விழாவில் தமிழ் திரையுலகிலிருந்து ரஹ்மான், கமல் ஹாசன், நயன்தாரா, மாதவன், பூஜா ஹெக்டே, தமன்னா போன்ற பிரபலங்கள் சிவப்பு கம்பள வரவேற்புடன் பங்கேற்றுள்ளனர். மேலும் கமல் நடித்த `விக்ரம்’ படத்தின் முன்னோட்டம், பார்த்திபன் நடித்த `இரவின் நிழல்’, ரஹ்மானின் விருட்சுவல் ரியாலிட்டி … Read more

பேரறிவாளன் விடுதலை: “தமிழர்கள் என்பதற்காக விடுதலை செய்ய வேண்டும் என்பது முறையல்ல!" – கே.எஸ்.அழகிரி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். விடுதலையடைந்த பேரறிவாளன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், தனது விடுதலைக்காகப் போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். மேலும், “வரலாற்றில் இடம்பெற வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், மாநில … Read more

பேரறிவாளன் விடுதலை: “ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சட்ட ஞானத்துக்கும் கிடைத்த வெற்றி!" – அதிமுக

உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்துக்கும் கிடைத்த மகத்தான வெற்றிதான் பேரறிவாளன் விடுதலை. ஜெயலலிதா போராட்டத்தை முன்னெடுத்ததன் நிறைவாக பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. பேரறிவாளன் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் … Read more

இளையராஜா கான்சர்ட்டில் மாற்றமா? இன்று மாலை அவர் அறிவிக்கப்போவது என்ன?

கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி சென்னையில் ‘ராக் வித் ராஜா’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார் இளையராஜா. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள ரசிகர்களும் ‘எங்கள் ஊரிலும் ஒரு கன்சர்ட் நடத்துங்கள்’ என ராஜாவிடம் கேட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து வருகிற ஜூன் 2ம் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு கோவையிலுள்ள கொடிசியா அரங்கில் இளையராஜாவின் லைவ் இன் கன்சர்ட் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் தன் இசைநிகழ்ச்சி குறித்து இன்று மாலை … Read more

`எக்ஸாம் எழுதிட்டு வந்துட்டேன்ப்பா!' – அப்பா இறந்த நிலையிலும் ப்ளஸ் டூ தேர்வை எழுதிமுடித்த மாணவி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தர்ராஜ் பட்டிணத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரின் மனைவி பவானி. இந்தத் தம்பதியின் மகள் சுரேகா, பரமக்குடி அலங்கார மாதா மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார். Students கடந்த சில நாள்களுக்கு முன்பு ரவிச்சந்திரனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு உயிரிழந்தார். குடும்பமே சோகத்தில் மூழ்கியது. தந்தை இறந்த துக்கம் ஒருபுறம் என்றால், மறுநாள் காலை ப்ளஸ் 2 வணிகவியல் தேர்வு எழுத … Read more

பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் ரியாக்ஷன் இதுதான்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்துவரும் எழுவரில் ஒருவரான பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் படி ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால், பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே இன்று பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. இந்த நிலையில், பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சு.வெங்கடேசன் சு.வெங்கடேசன் எம்.பி “அரசியல் … Read more

பேரறிவாளன் வழக்கு: `மாநில அரசின் முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட்டவர்தான்!' – உச்ச நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? உள்ளிட்டக் கேள்விகள் தமிழ்நாடு அரசியல் களத்தில் அனலடித்தன. `ஆளுநர், குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்த விஷயங்களுக்குப் போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது… பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது’ என உச்ச நீதிமன்றம் முந்தைய அமர்வில் … Read more

பேரறிவாளன் விடுதலை, எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது – நளினியின் அம்மா உருக்கம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிய பேரறிவாளனை அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். மகனுக்காக பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் பல வருடங்களாகப் பேராடினார். அவர் தட்டாத கதவுகள் இல்லை. சந்திக்காத தலைவர்கள் இல்லை. ஒரு தோள்பையோடு ஊர் ஊராக சுற்றியலைந்து மகனின் விடுதலைக்கு ஆதரவு திரட்டிய அந்தத் தாய்க்கு இப்போது நிம்மதி வாய்த்திருக்கிறது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், நளினி, … Read more