Vikram: “அரசியல் கட்சி தொடங்கி சிறப்பா செயல்படுறீங்க ஆனால்…" – இசை வெளியீட்டில் உதயநிதி ஸ்டாலின்!

கமல்ஹாசன் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிற படம் ‘விக்ரம்’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 6 மணிக்கு தொடங்கியது. கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன், விஜய்சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், இயக்குநர் ரவிக்குமார், நரேன், காளிதாஸ் ஜெயராம், இயக்குநர் பா.ரஞ்சித் எனப் பலர் கலந்துகொண்டனர். யாரும் எதிர்பார்க்காத விதமாக சிம்பு … Read more

பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்; காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவலர் – என்ன நடந்தது?

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் காவலர் ஒருவர் தனிநபர் ஒருவரைச் சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. இந்த நிலையில், காவலர் தாக்கியகாகக் கூறப்படும் நபர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், தாக்கப்பட்ட அந்த நபர் அயனாவரம் பேருந்து பணிமனையில் நடத்துநராக பணிபுரிந்து வரும் பாலச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது. தாக்கிய காவலர் போக்குவரத்து ஊழியராக பணியாற்றும் பாலச்சந்திரன் இன்று காலை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள சர்ச்சுக்கு வந்துள்ளார். அதன்பின்பு, அங்கிருந்த கடையில் நின்று ஜூஸ் … Read more

Vikram: "கமல் சாரோட சேரப் போறேன்; மதுரையைக் கதைக்களமா வச்சு படம் பண்ணனும்னு ஆசை"- பா.இரஞ்சித்

‘விக்ரம்’ படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட இயக்குநர் பா.இரஞ்சித் அடுத்து தான் கமல் உடன் இணையவிருக்கும் படம் குறித்து பேசியிருக்கிறார். “லோகேஷ் நிறைய பேட்டிகளில் தான் கமல் ரசிகர் என சொல்லி இருக்கிறார். கமலுக்கு என்ன வேண்டும் என சரியாக புரிந்து கொண்டு லோகேஷ் இந்தப் படம் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரம் பண்ணியிருக்கிறார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல கன்டென்ட்டே இல்லையானு நிறைய பேர் … Read more

Vikram: சிம்புவின் சர்ப்ரைஸ் என்ட்ரி; இளையராஜாவின் வீடியோ; கமல் பாடிய பாடல்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 6 மணிக்கு தொடங்கியிருக்கிறது. கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன், விஜய்சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிம்பு, இயக்குனர் பா.ரஞ்சித், அன்புச்செழியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் படத்தின் பாடல்கள் பட்டியலை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். கமல் எழுதி பாடிய ‘பத்தல பத்தல’ பாடல் ஏற்கெனவே மூன்று நாட்களுக்கு … Read more

பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த கெங்கையம்மன் சிரசு… குடியாத்தத்தில் கோலாகலம்!

தமிழகத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் திருவிழாக்களில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெறும் கெங்கையம்மன் சிரசுப் பெருவிழாவும் ஒன்று. ஆண்டுதோறும், வைகாசி முதல்நாள் இந்த விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் சிரசு மிதந்து வரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். கொரோனா தொற்றின் கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக கோயில் வளாகத்துக்குள்ளேயே சிரசுத் திருவிழா நடைபெற்றது. இதனால், பக்தர்கள் மிகுந்த மன வேதனைக்குள்ளாகியிருந்தனர். சிரசு திருவிழா இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதால், இந்த … Read more

தமிழ்நாட்டின் முதல் புனிதர் – கன்னியாகுமரி தேவசகாயம் பிள்ளைக்கு வாடிகனில் புனிதர் பட்டம்!

இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் சுதந்திரத்துக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. குமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712-ம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று தேவசகாயம் பிள்ளை பிறந்தார். அவருக்கு பெற்றோர் நீலகண்ட பிள்ளை என்று பெயரிட்டனர். பத்மநாபபுரத்தை தலைமையிடமாகக்கொண்டு திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆண்டபோது அரண்மணை கருவூல அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அதன் பின்பு இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இலந்தவிளை அருகே உள்ள பார்கவி அம்மாவுக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் டச்சு படை … Read more

நெல்லை குவாரி விபத்து: “மீட்புப் பணியில் தொய்வு; முதல்வர் நேரில் வரவேண்டும்!" -வலியுறுத்தும் அதிமுக

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் கல்குவாரி சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிருடன் சிக்கிக் கொண்டனர். அவர்களில் முருகன், விஜய் ஆகிய இருவர் மீட்கப்பட்டுவிட்டனர். நெல்லை: கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 பேர் – மீட்பு நடவடிக்கை தீவிரம்! செல்வம் என்ற டிரைவரின் முகம் வெளியில் தெரிந்த போதிலும் அவரது உடல் முழுவதும் பாறை மற்றும் கிட்டாச்சி இயந்திரத்துக்குள் சிக்கியிருப்பதால் மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரு … Read more

திமுக ஆட்சியில் அதிகரித்திருக்கின்றனவா குற்றச்சம்பவங்கள்… புள்ளி விவரங்கள் சொல்வதென்ன?!

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று மே 7-ம் தேதியுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. இதனை தி.மு.க விமர்சையாக கொண்டாடி வருகிறது. ஆனால், தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதன்படி, அண்மையில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் இந்த கருத்தை முன்வைத்தன. ஸ்டாலின் அதற்கு முதல்வர் ஸ்டாலின், “கூலிப்படை ஆதிக்கம் … Read more

“கட்சியை மீட்கும் வரை ஓயமாட்டேன்..!" – தஞ்சை திருமண விழாவில் குரங்கு கதை சொன்ன சசிகலா

தஞ்சாவூர், ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சசிகலா, “எதிர்க்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும், நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழித்து விடமுடியாது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதே சோதனையான காலம்தான் ஜெயலிலதா மறைவுக்குப் பிறகும் ஏற்பட்டுள்ளது. அப்போது எப்படி கழகம் மீண்டதோ அதே போல் தற்போதும் மீண்டு எழும்… அதற்கு நானே காரணமாவேன், கட்சியை மீட்கும் வரை நான் ஓயாமட்டேன்” எனப் பேசினார். ஒரத்தநாட்டில் நடைபெற்ற திருமண விழாவில் சசிகலா … Read more