“மத்திய அரசு தெலங்கானாவை `மாற்றாந்தாய்' மனப்பான்மையோடு நடத்துகிறது!" – கே.டி.ராமா ராவ்

தென் மாநிலமான தெலங்கானாவுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் கடிதம் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக 27 கேள்விகளை அவர் அமித் ஷாவிடம் எழுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “மத்திய பா.ஜ.க அரசு தென் மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. மக்கள் இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். தெலங்கானா மக்கள் மத்தியில் பா.ஜ.க வெறுப்பைப் பரப்புகிறது. மக்களுக்கு அளித்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், … Read more

தேனி: வீரபாண்டி திருவிழா தேரோட்டம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி வருகின்ற மே 17 – ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பக்தர்கள் கடந்த செவ்வாய் முதல் முக்கிய நிகழ்வுகள் தொடங்கியிருந்தாலும்கூட ஏப்ரல் 20 – ம் தேதி திருவிழாவுக்குக் கம்பம் நடு நிகழ்வு முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் … Read more

வெடிக்கும் உட்கட்சித் தேர்தல் பஞ்சாயத்து – கூண்டோடு ராஜினாமா செய்த திருப்பூர் திமுக நிர்வாகிகள்!

திமுக உட்கட்சித் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முடித்த கையோடு உட்கட்சித் தேர்தலுக்கான பணியில் இறங்கியுள்ளது. தற்போது நகர தலைவர், பேரூர் கழக பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக அண்ணா அறிவாலயம் `பெண்ணுரிமை பேசிக்கொண்டே பெண்ணடிமையை ஊக்குவிப்பதுதான் திராவிட மாடலா?’ -திமுக-வுக்கு ஓபிஎஸ் கண்டனம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, கொங்கு மண்டலத்தில்தான் அதிக பிரச்னை வெடித்தது. இப்போது உட்கட்சித் தேர்தலின்போதும் கொங்கு திமுக தகிக்க தொடங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக … Read more

திரிபுரா: பாஜக-வில் வெடித்த உட்கட்சிப் பூசல்… திடீரென பதவியை ராஜினாமா செய்த முதல்வர்!

திரிபுரா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான திப்லப் குமார் தேப் திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அந்த மாநில ஆளுநரிடம் வழங்கியுள்ளார். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். திரிபுரா முதலமைச்சர் – அமித் ஷா திரிபுரா மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணாமாக பாஜக நிர்வாகிகள் சிலர் அண்மையில் திரிணமூல் காங்கிரஸிலும் … Read more

பால்வெளியில் இருக்கும் கருந்துளையின் முதல் புகைப்படம்… விஞ்ஞானிகள் சாதித்தது எப்படி?

முதல்முறையாக நம் பால்வெளியில் (Milky Way) இருக்கும் கருந்துளையை(Black Hole) படமெடுத்துச் சாதித்திருக்கிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். ஷஜிடேரியஸ் ஏ ஸ்டார் (Sagittarius A*) என அழைக்கப்படும் இந்த கருந்துளை Supermassive Black Hole அல்லது SMBH என்று வகைப்படுத்தப்படும் மிகப்பெரிய கருந்துளை. இது நம் சூரியக்குடும்பம் இருக்கும் பால்வெளியின் நடுவில் மையம் கொண்டிருப்பதை இந்தப் புகைப்படம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இது மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஏன் தெரியுமா? கருந்துளை என்றால் என்ன? மனிதனைப் … Read more

காங்கிரஸின் சிந்தனை அமர்வு மாநாடு ஹைலைட்ஸ்!

சோனியா காந்தி 5 மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, ராஜஸ்தானில் `சிந்தனை அமர்வு மாநாடு’ நடத்தப்போவதாக டெல்லியில் மார்ச் 14-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. காங்கிரஸ் மே 13,14,15 என 3 நாள்கள் நடைபெறும் இந்த சிந்தனை அமர்வு மாநாடானது, காங்கிரஸில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. `ஒரே குடும்பம், ஒரே டிக்கெட்’ என்ற வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தல் சீட் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படுவதாகத் தகவல். மே 13, … Read more

கல்லூரி முதல்வரை மாணவி காலில் விழக் கட்டாயப்படுத்திய ஏபிவிபி தலைவர் – தேசிய மாணவர் சங்கம் கண்டனம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எஸ்.ஏ.எல் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏ.பி.வி.பி தலைவர் ஜெய்ஸ்வால் மற்றும் பிற உறுப்பினர்கள் சேர்ந்து, கல்லூரி பெண் முதல்வரை மாணவி ஒருவரின் காலில் விழுமாறு கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், கல்லூரி பெண் முதல்வர் மாணவியின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இந்தச் செயலுக்குக் … Read more

“என் சாவுக்கு திமுக கவுன்சிலர்தான் காரணம்!" – கடிதம் எழுதிவைத்து தூக்கில் தொங்கிய ஊராட்சி செயலாளர்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக கடந்த 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார் அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர். இவருக்கு காந்திமதி என்ற மனைவியும், 2 வயதில் யாகேஷ் என்ற குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு அவர் தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சடலம் தொங்கிய அறையிலிருந்து மூன்றுப் பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்று சிக்கியது. அதனை ஊராட்சி செயலாளர் ராஜசேகர் தனது கைப்பட … Read more

“இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது!" – ப.சிதம்பரம் கருத்து

காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர். இந்த நிலையில, இன்று இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம்,“இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இதன் காரணமாக பணவீக்கம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மாநிலங்களின் நிதி நிலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பலவீனமாக இருக்கிறது. வளர்ச்சி விகிதத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இது தற்போதைய அரசாங்கத்தின் அடையாளமாக … Read more

`ரத வீதிக்கு கலைஞர் பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் சொல்லிட்டாரு..' – கே.என்.நேரு

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பாலப் பணிக்கு நிலம் கிடைக்காததால், கடந்த 8 ஆண்டுகாலமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66 சென்ட் நிலம் பெறப்பட்டு எட்டு ஆண்டுகளாக நிறைவடையாமல் இருந்த திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பால பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, கலெக்டர் சிவராசு, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் நாராயணசாமி ஆகியோர் இன்று … Read more