8-வது மாடியில் தொங்கியபடி உயிருக்குப் போராடிய 3 வயது சிறுமி – உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய நபர்!

கஜகஸ்தானில் அடுக்குமாடி கட்டடத்தின் 8-வது மாடியில் ஜன்னலில் தொங்கிக்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை, உயிரைப் பணயம் வைத்து ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஜகஸ்தான் நாட்டின் தலைநகரமான நூர்-சுல்தானில் உள்ள கட்டடமொன்றில், 3 வயது சிறுமி 8-வது மாடி ஜன்னலில் தொங்கியபடி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, சபித் ஷொண்டக்பேவ் என்பவர் தன் நண்பருடன் சேர்ந்து உயிரைப் பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி … Read more

சசிகலா: `நான் பேசுறது எல்லோருக்கும் கேக்கணும்’ – எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஒரத்தநாடு திருமண விழா

சசிகலா தன்னுடைய 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் முதல் முறையாக ஒரத்தநாட்டில் நாளை நடைபெற உள்ள ஒரு திருமணத்தை தலைமையேற்று, தன் கையால் தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைக்க இருப்பதுடன் அந்த மேடையிலேயே வெளிப்படையாக அரசியல் பேசி தனது பயணத்தை தொடங்க இருப்பதாக சசிகலா தரப்பில் பேசப்படுகிறது. இந்த திருமணத்தில் டி.டி.வி.தினகரனும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. சசிகலாவிடம் அழைப்பிதழ் கொடுக்கும் ஆதவன் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தை … Read more

“பாராமதியின் காந்திக்கு கோட்சேயை தயார்படுத்தும் நேரம் இது!” – சரத்பவாருக்கு வந்த கொலை மிரட்டல்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு அமைய முக்கிய காரணமாக இருந்தார். தற்போதும் அரசுக்கு எந்த பிரச்னை வந்தாலும் அதனை தீர்த்து வைப்பதில் சரத்பவார் முன்னின்று செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சரத்பவாருக்கு சமூக வலைத்தளத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சரத்பவார் தனக்கு வந்துள்ள கொலை மிரட்டல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாராமதியின்(சரத்பவார் சொந்த ஊர்) காந்திக்கு நாதுராம் கோட்சேயை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது” என்று கொலை மிரட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். @NikhilBhamre8 … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துறைத்தலைவர் மீது மோசடி வழக்கு – அதிரடி காட்டிய விஜிலென்ஸ்

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் இதழியல் துறை தலைவராக இருந்தவர் நடராஜன். கடந்த 2010-ம் ஆண்டு பல்கலைக்கழக அடிப்படை வசதியை மேம்படுத்தவும், ஆராய்ச்சி பயன்பாட்டுக்கும், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவும், மத்திய அரசின் 11-வது நிதிக்குழு ரூ.7,66,50,000 நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியில் அமைக்கப்படும் சிறப்பு வகுப்புகளை கண்காணிக்கும் தலைவராக அப்போதைய இதழியல் துறைத்தலைவரான நடராஜன் நியமிக்கப்பட்டார். நடராஜன் அதில் அவருக்கு, ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வகுப்பு நடத்தும்படி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதன்படி … Read more

“என்னய்யா… உனக்கு எந்த டிபார்ட்மென்ட்?" – கலகலக்கும் அமைச்சரவை மாற்ற பேச்சுகள்

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், முதல்முறையாக கடந்த ஜனவரி மாதம் அமைச்சர்கள் கவனித்து வந்த துறைகளில், சில பிரிவுகள் மாற்றித் தரப்பட்டன. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த சர்க்கரை ஆலைகள் பிரிவு, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வசம் கொடுக்கப்பட்டது. அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடமிருந்து, விமானநிலையங்கள் துறை பிரித்தெடுக்கப்பட்டு, தொழில்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வசமிருந்த அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், அமைச்சர் மஸ்தான் வசம் அளிக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக இந்த … Read more

“பாகிஸ்தானியர்கள் இந்தியாவின் எதிரிகளல்ல; அரசியல் செய்ய விரும்புவோருக்கு மட்டுமே…" – சரத் பவார்

புனேவின் கோந்த்வாவில் ‘ஈத் மிலன்’ விழா நடைபெற்றது. அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் சரத்பவார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். பல்வேறு நாடுகள் குறித்தும் தனது கருத்துகளை அதில் தெரிவித்தார். அப்போது அவர், “இன்று உலகில் ஒரு வித்தியாசமான சூழ்நிலை நிலவுகிறது. ரஷ்யா போன்ற ஒரு சக்திவாய்ந்த நாடு உக்ரைன் போன்ற சிறிய நாட்டைத் தாக்குகிறது, இலங்கையில் இளைஞர்கள் அனைவரும் சாலையில் சண்டையிடுகிறார்கள், போராடுகிறார்கள். அந்த நாட்டின் தலைவர்கள் தலைமறைவாகிவிட்டனர். சரத் பவார் அதேபோல, … Read more

`அன்று அதிகார போதை… இன்று அகதி வாழ்க்கை' – மகிந்த ராஜபக்சேவின் அலங்கோல காலச்சக்கரம்!

2009 மே மாதத்தில், ஈழப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம், `சிங்களர்களின் மாமன்னன்’ எனச் சிங்கள மக்களால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப்பட்டார் மகிந்த ராஜபக்சே. சரியாக 13 ஆண்டுகள் கழித்து, 2022 மே மாதத்தில், அதே சிங்கள மக்களால் பிரதமர் பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார் அவர். அன்று அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்த மகிந்த, இன்று சிங்கள மக்களுக்குப் பயந்து தமிழ்ப் பகுதியான திரிகோணமலையில் ஒளிந்து கொண்டிருக்கிறார். கடந்த இரு தசாப்தங்களாக இலங்கையில் கோலோச்சிய மகிந்தவின் அரசியல் … Read more

How to: LIC IPO பங்கு கிடைத்துள்ளதா எனக் கண்டறிவது எப்படி? I How to check LIC IPO allotment status?

முதலீட்டாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த, லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷனின் (எல்.ஐ.சி) ஐ.பி.ஓ பங்குகளின் ஒதுக்கீடு (மே 12-ம் தேதி) நேற்றுடன் முடிந்துவிட்டது. இதில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் எளிய வழிகளை பின்பற்றித் தங்கள் பங்கு ஒதுக்கீட்டை அறிந்துகொள்ளலாம். அதாவது, முதலீட்டாளர்கள் பி.எஸ்.இ இணையதளத்திலோ அல்லது ஐ.பி.ஓ பதிவாளரின் இணையதளத்திலோ அறிந்து கொள்ளலாம். ஐபிஓ எல்.ஐ.சி ஐ.பி.ஓ… முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்? பிஎஸ்இ இணையதளம் பி.எஸ்.இ இணையதளத்தில் தங்கள் முதலீடுகளை அறிய விரும்புபவர்கள், இந்த இணையதளத்தில் `ஈக்விட்டி’ என்பதைத் … Read more

RCB v PBKS: பஞ்சாப்புக்கு பலம்சேர்த்த பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன்; ஆர்சிபியின் பிளேஆஃப் கனவு அவ்வளவுதானா?

கடந்த 4 சீசன்களில், ஆர்சிபி 180 ரன்களை சேஸ் செய்ததே இல்லை என்கின்ற தரவுகளே போட்டியின் முடிவையும் முன்கூட்டியே சொல்லிவிட்டது. பேர்ஸ்டோ மூலம் வீசத் தொடங்கிய புயல், லிவிங்ஸ்டனால் சூறாவளியாக மாறி, ஆர்சிபியை சுழற்றி அடித்துவிட்டது. டாஸ் ஜெயித்த டு ப்ளெஸ்ஸி மகிழ்ச்சியாக, “சேஸிங் செய்கிறோம்” என்று கூற பஞ்சாப் அணி பேட்டிங் ஆட இறங்கியது. தொடர் முழுவதும் நன்றாகப் பந்து வீசாத சிராஜ் பந்தில் அடி விழந்தது என்றால், பல போட்டிகளை தனது பக்கம் திருப்பிய … Read more

14.05.22 சனிக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link