தருமபுரி: உணவு தேடிச் சென்ற மக்னா யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்! – வனத்துறையினர் விசாரணை
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது காட்டு யானைகளின் நடமாட்டம் இருக்கும். அதிலும், கோடைக் காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடிக் காட்டு யானைகள் வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஊருக்குள் வருவது அதிகரித்துக் காணப்படும். மின்சாரம் தாக்கி பலியான யானை தற்போது கோடை வெயில் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த சூழலில்தான், தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகில் உள்ள நல்லாம்பட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி காட்டுயானை ஒன்று உயிரிழந்திருப்பதாக அந்த சரக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, … Read more