அருவி, கைதி, சூரரைப்போற்று, மாஸ்டர்… இத்தனை படங்களா? இந்தியில் ரீமேக் ஆகும் தமிழ்ப் படங்கள்!

தமிழ்ப் படங்களுக்கு உலகளவில் எப்போதும் வரவேற்பு இருக்கும். சமீபத்தில் தமிழில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த படங்கள் இந்தியில் ரீமேக் ஆகின்றன. அவற்றில் சில, சூரரைப் போற்று சூர்யா ஹீரோவாக நடித்த படம் 2020, தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அக்ஷய் குமார் நடிக்க இப்போது இந்தியில் ரீமேக்காக இருக்கிறது. அங்கும் சுதா கோங்ராதான் இயக்குநர். விக்ரம் வேதா மாதவன், விஜய் சேதுபதி தமிழில் நடித்த ரோலில் இந்தியில் சாயிப் அலி கான் – ஹ்ரித்திக் … Read more

பெண்ணை கார் ஏற்றிக் கொன்ற தொழிலதிபர் மகன்… 18 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்

கலிபோர்னியாவில் உள்ள மேற்கு லே பகுதியில் தொழிலதிபர் ஜேம்ஸ் குரி என்பவரின் 17 வயது மகன், சுமார் 100 கி.மீ வேகத்தில் சிக்னல் போட்டதையும் மதிக்காமல் தனது லம்போர்கினி காரில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மோனிக் முனோஸ் (32) என்ற பெண் ஒருவர் இடப்பக்கம் திரும்பும்போது, தொழிலதிபர் மகனின் லம்போர்கினி கார் மோதி உயிரிழந்தார். தொழிலதிபரின் மகன் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்தியது தொழிலதிபரின் மகன் என்பதால் போலீஸார் அந்த சிறுவனை … Read more

மீண்டும் சூர்யாவுடன் கைகோக்கும் `ஜெய் பீம்' இயக்குநர்… வெற்றி மாறன், சுதா கொங்கரா படங்கள் எப்போது?

சிவகார்த்திகேயனின் `அயலான்’ படத்தை இயக்கி வரும் ஆர். ரவிக்குமார், அடுத்து சூர்யாவுடன் கைகோக்கிறார் என்று சொல்லியிருந்தோம். இதனையடுத்து இயக்குநர்கள் வெற்றிமாறன், த.செ.ஞானவேல் ஆகியோரின் படங்களில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. சூர்யா இப்போது பாலாவின் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதிகளில் நடந்து வருகிறது. பாலாவின் படத்திற்கு ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார். இதனை முடித்துவிட்டு ‘அயலான்’ படத்திற்கு வருகிறார் சூர்யா. இது சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் என்கிறார்கள். விக்ரம் குமாரின் ’24’ படத்திற்கு … Read more

“ரூ. 7 லட்சம் அபராத தொகை கட்டலன்னா, கேஸ் போடுவோம்!” -கரூர் இளைஞரை ஏமாற்றிய வடமாநில இளைஞர்கள்

கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓமன் நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர், கரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில், அவரின் தந்தை மூலம் ஒரு புகாரை கொடுத்திருந்தார். அந்த புகாரில், “கடந்த 03.02.2022 -ம் தேதி ஃபேஸ்புக்கில் செல்போன் விற்பனை என்ற விளம்பரத்தைப் பார்த்து லிங்கை கிளிக் செய்து அதில் வரும் வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு செல்போனை ஆர்டர் செய்தேன். அதன்பிறகு, ஓமன் கஸ்டம்ஸ் மற்றும் காவல்துறையில் பேசுவதாக கூறி என்னை மிரட்டி, … Read more

“கடந்த ஆட்சியில் அரசு வேலைக்கு பல லட்சங்கள் பெறப்பட்டது” – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே என்.சுப்பையாபுரம் கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டார். கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், ரேஷன்கடை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பள்ளிக்கு கூடுதல் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மக்களுக்கு உறுதி அளித்தார். கிராம சபைக் கூட்டம் பின்னர் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “கடந்த ஆட்சியில் அரசு வேலை பெற பல … Read more

மக்களை ஈர்க்கும் குளுட்டன் இல்லாத சிறுதானிய உணவுகள்! குறைந்த விலையில் விற்பனை செய்யும் அபீடா!

இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பானது சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியை (AAHAR) நடத்தி வருகிறது. இந்த நிகழ்வில் பல நாடுகளிலும் உள்ள மக்கள் பங்கேற்று, அந்தந்த நாட்டு உணவு பொருட்களை காட்சிபடுத்துவதோடு விற்பனை செய்வர். இந்நிலையில் 2022-ம் ஆண்டிற்கான 36-வது கண்காட்சி புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்றது.  Spicy Food (Representational Image) ஒவ்வாமையை ஏற்படுத்தும் குளுட்டன் உணவுகள்… யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? இதில் அனைத்து வயதினருக்கும் 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் … Read more

ஒரே மாதத்தில் ₹10 லட்சம் கோடியை நெருங்கிய UPI பரிவர்த்தனை; காரணங்கள் இவைதான்!

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அவற்றில் யு.பி.ஐ மூலமானப் பணப் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான முடிந்த ஏப்ரலில் யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை ரூ.10 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது. அதாவது, 9.83 லட்சம் கோடி ரூபாய்க்கு பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுவரை இந்த அளவுக்குப் பணப் பரிவர்த்தனை ஆனதில்லை எனும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு உயர்வாகும். கடந்த … Read more

இன்று வெளியாகவுள்ள `விக்ரம்' படத்தின் அப்டேட் இதுதான்!

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிற `விக்ரம்’ படம், வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி படத்திற்கான புரொமோஷன்களை ரயில் விளம்பரத்தில் இருந்து தொடங்கியிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு அப்டேட் வருகிறது. இதுகுறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ரயில் பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும். என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. `மூன்றாம் பிறை’, `மகாநதி’, `தேவர் மகன்’ என பல … Read more

“மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது'' – புது கணக்கு போடும் பிரசாந்த் கிஷோர்?

பாஜக-வில் தொடங்கி காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக போன்ற பெரிய கட்சிகளுக்காக பணியாற்றி, அக்கட்சிகளின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பெரும் பங்கு ஆற்றினார். இதனிடையே, பிரசாந்த் கிஷோர் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக தகவல்கள் வெளியானது. அதை அவர் மறுத்துவிட்டர். மேலும் தன்னைவிட காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தலைமை தான் முக்கியம் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து பிரசாந்த் கிஷோர் தனது தனிப்பட்ட அரசியல் பயணத்தை அறிவிக்க இருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் … Read more

“மஞ்சு வாரியார் உயிருக்கு ஆபத்து" – மலையாள இயக்குநர் சனல் குமாரின் அதிர்ச்சிப் பதிவு!

சனல் குமார் சசிதரன் Oraalppokkam, ஒழிவு திவசத்தே கழி, செக்ஸி துர்கா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். மஞ்சு வாரியர் நடித்த Kayattam என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பாக அவரது பேஸ்புக் பதிவில், “மஞ்சு வாரியார் உயிர் ஆபத்தில் இருக்கலாம். அவர் பிணையாக வைக்கப்பட்டுள்ளார். சொந்த முடிவுகளை எடுக்கக்கூட அவரை அனுமதிப்பதில்லை” எனப் பகிர்ந்திருந்தார். மேலும் மஞ்சு வாரியர் உடன் Kayattam படப்பிடிப்பின்போது கூட அவரிடம் பேச அனுமதிக்கவில்லை என்றும் பினேஷ் சந்திரன் மற்றும் பினு … Read more