`அவனின்றி' ஓர் அணுவும் அசையாது; காணாமல் போகும் டூ வீலர்கள்; கண்டுபிடித்துத் தரும் காவல்துறை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் ஸ்கூட்டர் சென்னையில் திருடு போனது. ஞாயிற்றுக்கிழமையன்று பகலில், `மருத்துவமனை அவரசத் தேவை’ என்று சொல்லி பக்கத்து வீட்டுக்காரர், வாங்கிச் சென்றுள்ளார். இரவு 9 மணியளவில் வண்டியைக் கொண்டுவந்து, வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, மூன்றாவது மாடியில் இருக்கும் நண்பரிடம் சாவியைக் கொடுத்துள்ளார். மறுநாள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு அலுவலகத்துக்குப் புறப்படுவதற்காக மாடியிலிருந்து இறங்கிவந்த நண்பரின் கையில் சாவி இருக்கிறது. ஆனால், வண்டி? பதறிப்போய், பக்கத்து … Read more

ம.பி: பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி; ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட இளம்பெண் – நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், மத்தியப் பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பாகேஷ்வர் கோயிலுக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளார். கோயில் வழிபாடு நிறைவடைந்த பிறகு அந்தப் பெண் புதன்கிழமை இரவு மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் மஹோபாவுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரயில் பெட்டியின் இடையில் ஏறிய 30 வயது இளைஞர் ஒருவர், அந்த பொதுப் பெட்டியில் வேறு பயணிகள் யாரும் இல்லாத … Read more

“மகாராஷ்டிராவிலிருந்து மும்பையைப் பிரிக்க பாஜக முயற்சி!" – சிவசேனா பகீர் புகார்

மகாராஷ்டிரா தினத்தையொட்டி மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே மகாராஷ்டிராவிற்காக பாடுபட்டு உயிர்தியாகம் செய்த தியாகிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அவர் மனைவி ரேஷ்மிதாக்கரே மற்றும் மகன் ஆதித்யதாக்கரே ஆகியோரும் சென்றிருந்தனர். ஏற்கெனவே மகாராஷ்டிரா தினத்தையொட்டி சனிக்கிழமை ஆற்றிய உரையில் மகாராஷ்டிராவில் இந்துக்களை பிரிக்க பா.ஜ.க முயற்சிப்பதாக உத்தவ்தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக மராத்தி இந்துக்கள், மராத்தியர் அல்லாத இந்துக்கள் எனப் பிரிக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது சிவசேனா தனது நாளேட்டில் … Read more

ரஷ்யா-உக்ரைன்: `இந்த நட்பு எப்போது புரியும்' நினைவுச் சின்னத்தை அகற்றிய உக்ரைன்;நெகிழ்ந்த மக்கள்!

உக்ரைன் தலைநகரான கிவ் பகுதியில் 1982-ல் சோவியத் யூனியனின் 60 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்த ‘People’s Friendship Arch’ எனும் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. இது ரஷ்ய-உக்ரேனிய நட்பைக் குறிக்கும் வகையில் உக்ரேனிய தொழிலாளியும் ரஷ்ய தொழிலாளியும் ஒன்றாகச் சேர்ந்து நிற்கும் சிலையாகும். தற்போது ரஷ்யா, உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்காண உக்ரைன் மக்களை கொன்று குவித்து வருகிறது. இதனால் உக்ரைன்- ரஷ்யா இடையான நட்பு முறிவடைந்துவிட்டது என்று உக்ரைனிய அதிகாரிகள் உக்ரைன் தலைநகரில் … Read more

ஆன்லைன் ரம்மியில் ரூ.35 லட்சத்தை இழந்ததால் விபரீத முடிவெடுத்த இளைஞர் – சென்னையில் சோகம்!

சென்னை போரூரில் உள்ள விக்னேஸ்வரா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்திருக்கிறார். கொரோனா பேரிடர் சமயத்தில் பணியை இழந்த பிரபு, அதற்குப் பின்பு பணிக்கு எதுவும் செல்லாது வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில், இவர் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இவருக்கும், இவரின் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி இந்த நிலையில்தான், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனனி வெளியே சென்றுவிட்டு, மீண்டும் … Read more

`அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து!' – இந்து முறைப்படி கோவை இளைஞரை திருமணம் செய்த ஆப்பிரிக்க பெண்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சுப்பிரமணியம் – தர்மலட்சுமி. இவர்களது மகன் முத்துமாரியப்பன், டிப்ளமோ மெக்கானிக் இன்ஜினியரிங் முடித்துவிட்டு மேற்கு ஆப்பிரிக்கா கேம்ரூனில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வால்மி – முத்து மாரியப்பன் திருமணம் காத்துவாக்குல ரெண்டு காதல்: “கல்யாணத்துக்கு முன்னாடி செமயா ஒரு படம்”- விக்னேஷ் சிவன் பகிரும் ரகசியம் முத்து மாரியப்பனுக்கும், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த வால்மி இனங்கா மொசொக்கே என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்கு இரண்டு … Read more

திருவாரூர்: மாயமான பெண் சாக்குமூட்டையில் சடலமாக மீட்பு – கொலையாளிகள் மூவர் கைது!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர்-மேலநெம்மேலி கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணவேணி. 55 வயதான இவருக்கு, காமராஜ், கனகராஜ் ஆகிய இருமகன்கள். இவர்கள் இருவரும் வெளியூரில் வசித்து வருவதால், கிருஷ்ணவேணி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணவேணி திடீரென மாயமானது, அந்தப் பகுதி மக்களிடையே குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இவர், உறவினர்கள் வீட்டிற்கு எங்காவது சென்றிருக்கக் கூடும் என்ற கோணத்தில், இவர் மகன் கனகராஜ் பல்வேறு … Read more

`நாம வாழணும்னா…' தொடங்கி 'நோ மீன்ஸ் நோ' வரை அஜித்தின் மாஸான பன்ச் டயலாக்குள்| Photo Story

மே 1 அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள். அஜித்துக்கு மாஸான பிறந்தநாள். அஜித் படங்களில் இடம்பெறும் பஞ்ச் வசனங்களுக்கு பயங்கர மாஸ் இருக்கும். அப்படியான வசனங்கள் இதோ. “என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா” “உடம்புல கை இருக்கும் கால் இருக்கும் மூக்கு இருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்காது” “காசுக்காக என்னவென்னலாம் பண்ணுவேன். ஆனா தன்மானத்துக்கு ஒரு தகராறுன்னா தலையே போனாலும்.. “ “என்னோட நண்பனா … Read more

வார ராசி பலன் 01-05-2022 முதல் 07-05-2022 | Vaara Rasi Palan | Weekly RasiPalan | இந்த வாரம் எப்படி?

வார ராசி பலன் 01-05-2022 முதல் 07-05-2022 | Vaara Rasi Palan | Weekly RasiPalan | இந்த வாரம் எப்படி? #weeklyraasipalan #Vaararasipalan #Astrology மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். #vaara_rasi_palan | #Weeklyhoroscope | #Astrology #வாரராசிபலன்கள் #வார ராசிபலன் Source link

மே- 1 உழைப்பாளர் தினம்: `பல்தொழில் செய்திடும் பாமரனே! உன் வியர்வையில் செழித்திடுமே இந்த மண்..!'

1820-களில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரின் இயந்திர தொழிலார்களினால் உருவான சங்கம் தான் உலகின் முதல் தொழிற்சங்கமாக கருதப்படுகிறது. 1820-30களின் காலகட்டத்தில் தொழிற்சங்கங்களின் கோரிக்கை `10 மணி நேர வேலை’ என்பது மட்டுமே. “8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு” என்ற முதல் முழக்கத்தை 1950-களில் ஆஸ்திரேலியாவின் கட்டட தொழிலாளர்களே முன்வைத்தனர். 1980-களில் அமெரிக்க தொழிற்சங்கங்கள், ஒன்றிணைந்து `8 மணி நேர இயக்கம்’ என்ற அமைப்பாக திரண்டனர். முதலாளித்துவ … Read more