CSK : தோனி மீண்டும் கேப்டனாகிறார்! ஜடேஜா எடுத்த அதிரடி முடிவு

பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிந்தார். தோனி சென்னை அணியின் வீரராக விளையாடி வந்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்திருக்கிறார். தோனி, ரவீந்திர ஜடேஜா Official announcement! Read More: #WhistlePodu #Yellove @msdhoni @imjadeja — Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022 கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்துவிட்டு தான் விளையாட்டில் … Read more

சென்னை: சாப்பிடச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை – மதுபோதையில் சிக்கிய இளைஞர்கள்

சென்னைன தி.நகர் காவல் மாவட்டத்தில் குடும்பத்தினருடன் 14 வயது சிறுமி வசித்து வருகிறாள். இவளின் அம்மா வனஜா (44). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். வழக்கம் போல 29.4.2022-ம் தேதி வனஜா தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு வேலைக்குச் சென்றார். மதியம் சாப்பிடுவதற்காக மகளை மட்டும் தனியாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டுக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வரவில்லை. அதனால் மகளைத் தேடி வனஜா வீட்டுக்குச் சென்றார். பாலியல் தொல்லை அப்போது வீட்டில் மகள் … Read more

சென்னை: பெருங்குடி குப்பைக் கிடங்கில் நான்காவது நாளாக எரியும் தீ – தற்போதைய நிலை என்ன?

சென்னை மாநகரத்தில் மட்டும் நாளொன்றுக்கு 5,000 டன்னுக்கும் அதிகமான திடக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றது. சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுக் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும். சென்னை பெருங்குடி பகுதியில் அரசுக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகின்றது. 225 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பைக் கிடங்கில் கடந்த புதன்கிழமை (27.04.2022) எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டது. பெருங்குடி குப்பைக் கிடங்கு – தீ விபத்து முதலில் ஒரு இடத்தில் உருவான தீ காற்றின் வேகம் காரணமாக … Read more

`வாட் வரியை குறைக்க வேண்டும்’ – அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் திரண்ட பாஜக-வினர்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், “மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் அறிவுரையை பின்பற்றாததால், இந்த மாநிலங்களில் உள்ள மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்பாட்டக்காரர்கள்  இந்த மாநிலங்களில் இப்போது வாட் வரியைக் குறைக்க கேட்டுக்கொள்கிறேன். நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்ததன் மூலம் குடிமக்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்க முடிந்தது” என்று பிரதமர் மோடி அன்மையில் பேசியது விவாத … Read more

நாடோடிச் சித்திரங்கள்: ஒளரங்கசீப் ஆலம்கிர் வாழ்வும் வரலாற்றிப் புனைவுகளும் | பகுதி 32

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சர்ச்சை வெடித்தது. சுமார் ஐம்பது ஆண்டு காலம் இந்திய மண்ணில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து இந்துக்களின் வழிபாட்டு அடையாளங்களை அழித்த முகலாய மன்னன் ஒளரங்கசீப்-இன் பெயர் தில்லியின் முக்கியமான சாலைக்கு பெயராக இருக்கக் கூடாதென்று சீக்கிய அமைப்பினரும், வலதுசாரி கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தின. அதனைத் தொடர்ந்து கொடுங்கோல் மன்னன் என்று வரலாற்றேடுகளில் தொடர்ந்து இடித்துரைக்கப்பட்ட ஒளரங்கசீப்பின் பெயர் கொண்ட சாலையை டாக்டர் அப்துல் கலாம் சாலை … Read more

பார்மா துறையிலும் களமிறங்கும் அம்பானி; 173 வருட இங்கிலாந்து நிறுவனத்தை வாங்கும் ரிலையன்ஸ்!

பொருளாதார சந்தையில் அதிகப் பங்கு வகிக்கும் தொழில்களான எண்ணெய், எரிவாயு மற்றும் டெலிகாம் ஆகியவற்றில் கோலோச்சும் இந்தியாவின் பெரும்பணக்காரர் அம்பானி பார்மா துறையிலும் களம் இறங்க முடிவு செய்துள்ளார். 173 வருட பழமையான இங்கிலாந்தை சேர்ந்த பார்மா நிறுவனம் பூட்ஸ். Pharmacy (Representational Image) கேள்வி – பதில் : பார்மா ஃபண்டில் முதலீடு… எனக்கேற்ற ஃபண்டுகள் என்னென்ன? இந்நிறுவனத்தை வாங்குவதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பார்மா துறையிலும் கால் பதிக்க உள்ளது. அப்போலோ குளோபல் நிறுவனத்துடன் … Read more

"ஒடுக்குதலைப் புரிந்துகொள்ளவும், எதிர்கொள்ளவும் எனக்கு இலக்கியமே உதவியது!"- மனம் திறந்த பா.இரஞ்சித்

இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக ஏப்ரல் மாதம் முழுவதும் தலித் வரலாற்று மாத நிகழ்வாக நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக மதுரையில் நேற்றும், இன்றும் தலித் எழுத்தாளர்களுக்கான வானம் கலைத் திருவிழா, வேர்ச்சொல் தலித் இலக்கிய சூடுகை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மதுரை உலகத்தமிழ்சங்கம் அரங்கில் பா.இரஞ்சித் நேற்று மனம் விட்டுப் பேசியதிலிருந்து… “இந்த எழுத்துக் கூடுகைக்கு வந்திருக்கிற நீங்க எல்லோருமே என்னை செதுக்கிய, செதுக்கிக் கொண்டிருக்கிற ஆசான்கள்னுதான் சொல்லணும். நீங்கள்தான் … Read more

`அடுத்தடுத்த விபத்துகள்; அபசகுண அச்சத்தில் அறநிலையத்துறை' – ஜோதிடர்களைத் தேடும் அமைச்சர்!

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் உள்ள ஆலயங்களின் தேர்தல்களால் ஏற்படும் விபத்துகளும். திருவிழாக்களில் நிகழந்த விபத்துகளாலும் அதிர்ச்சியில் உள்ளது அறநிலையத்துறை. குறுகிய காலத்திற்குள் நிகழ்ந்த இந்த விபத்துக்களை அபகுசணமாக ஆன்மிக அறிஞர்கள் பார்க்க ஆரம்பித்திருப்பதால் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஜோதிடர்களிடம் ஆலோசனை செய்ய ஆரம்பித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழாவில் நடந்த தேர் பவனியில் மின்சார வயரில் தேரின் அலங்கார விளக்கு உரசித் தீ … Read more

“லோக்கல் ஆள் தான் செஞ்சிருக்கணும்" – சி.ஆர்.பி.எஃப் வீரர் வீட்டு கொள்ளை வழக்கில் தீவிர விசாரணை

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகேயுள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம். சி.ஆர்.பி.எப் வீரரான இவர் தற்போது காஷ்மீரில் பணியில் உள்ளார். இவரின் மனைவி கலைவாணி கடந்த 27-ம் தேதி இரவு வீட்டில் தனது மாமியார், மாமனார், தனது 10 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், கலைவாணி முகத்தை துணியால் மூடி அவர் அணிந்திருந்த எட்டரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதில் கழுத்தில் … Read more

குழந்தைகளின் மனிதநேய உறவுகளுக்குத் துணைபோகும் “அக்கா குருவி’’!

“அக்கா குருவி’’யாகத் தமிழில் வருகிறது “சில்ட்ரென் ஆப் ஹெவன்’’. உலகத் திரைப்பட வரிசையில் “சில்ட்ரன் ஆப் ஹெவன்’’ திரைப்படத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்கிற பழக்கத்தை வைத்திருக்கிறேன். தொடக்கப் பள்ளிகளில் நாம் சந்தித்த வாழ்வியல் முறையை மீண்டும் எட்டிப் பார்க்க வைக்கும் அதிசயத்தை நான் உணர்வேன். வறுமையின் வடிவங்கள் இயல்பானவை. காலத்தின் வேகம் அளவிட முடியாதவை. ஆனால் கடந்த கால நினைவுகளின் தாக்கம் நம் இதய வலிகளை ஆறுதல் படுத்த உதவும். பகையைப் பொறுத்துப் போகச் சொல்லிய … Read more