நாகை கோயில் திருவிழா: சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! – முதல்வர் இரங்கல்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் சப்பரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.  திருவிழா – தேர் சப்பரத்தில் சிக்கி தொழிலாளி பலி இரவு 11.50 மணிக்கு புறப்பட்ட உத்திராபதீஸ்வரர் சுவாமி சப்பரம், தெற்கு வீதியில் திரும்பியது.  இரவு 12.35 மணிக்கு சப்பரம் நிற்பதற்காக முட்டுக்கட்டை போடும்  தீபராஜன் என்ற தொழிலாளி முட்டுக்கட்டையை அகற்றும்போது எதிர்பாராவிதமாக தடுமாறி விழவே, அவர் வயிற்றின் மீது சப்பரத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. படுகாயமடைந்த … Read more

திருமண வீட்டில் திருடு போன 121 பவுன் நகைகள் – 3 பேர் கைது; 60 பவுன் தங்க கட்டிகள் பறிமுதல்

புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மனோன்மணி. இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகன் பாரதிராஜா கனடாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மனோன்மணியின் ஒரு மகளுக்கு காரைக்குடியில் மார்ச் மாதம் 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண விழா காரைக்குடியில் நடந்ததால், முதல் நாளான 5-ம் தேதி இரவே புதுக்கோட்டையில் உள்ள தங்கள் வீட்டினை பூட்டிவிட்டு காரைக்குடி சென்றிருக்கிறனர். திருமணம் முடிந்து வீட்டுக்குத் திரும்பியவர்களுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பூஜை அறை மற்றும் … Read more

Solar Eclipse: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்… பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (ஏப்ரல் 30) நிகழ்கிறது. சூரியனும் சந்திரனும் இணைந்து சஞ்சரிக்கும் நாள் அமாவாசை தினமாகும். அவை ராகுவுடன் இணைந்து சஞ்சாரிக்கும் நாளில் சூரிய கிரகணம் நிகழும். அதற்கு பின் வரும் பௌர்ணமி சந்திர கிரகணமாக அமையும். அந்த நாளில் சந்திரன் கேதுவுடன் இணைந்து சஞ்சரிப்பார். இந்த இயற்கை நிகழ்வுகளைப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கணித்து அவற்றைக் கடைப்பிடிக்கும் முறைகளையும் நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். எனவே ஒவ்வோர் ஆண்டும் நிகழும் … Read more

குமரி: காதலர்கள் என்ற போர்வையில் கொள்ளையில் ஈடுபட்ட ஜோடி… கொடிமரத்தில் கட்டிவைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு, வீடுகள் மற்றும் ஆலயங்களில் திருட்டு என கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனால் தக்கலை சுற்றுவட்டார பகுதி மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று தக்கலை அருகே உள்ள ஆர்.சி தெருவில் சந்தேகத்துக்கு இடமாக ஒரு ஜோடி அங்கும், இங்கும் சென்றுள்ளது. சிறிது நேரம் அவர்களை கவனித்த தெருவாசிகள் தங்களுக்குள் பேசி ஒன்று திரண்டு அந்த ஜோடியை … Read more

அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்; அரசுக்கல்லூரி முதல்வர் பணியிட மாற்றம்; ராமதாஸ் கண்டனம்! நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள அய்யந்தோப்பு பகுதியில் இயங்கி வருகிறது ‘கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி’. இந்த கல்லூரி முதல்வர் அறையில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் புகைப்படம், கல்லூரி முதல்வராலேயே நீக்கப்பட்ட விவகாரம் அண்மையில் பெரும் பேசுபொருளுக்கு உள்ளானது. இதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. இந்நிலையில், கோவிந்தசாமி அரசு கல்லூரி முதல்வர் நாமக்கல் மாவட்டத்திற்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அம்பேத்கர் இதன் பின்னணி குறித்து அந்த கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் … Read more

PBKS v LSG: சுமாரான லக்னோவும், படு சுமாரான பஞ்சாப்பும்; வேற மாதிரியாவது தோற்கலாமே கிங்ஸ்?!

தோல்வியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. வெற்றியை போல தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கமே. இந்த உன்னதமான கருத்தை உலக உயிர்களுக்கு எடுத்துரைப்பதற்காக அறிவியலாளர்களெல்லாம் இணைந்து ஒரு ரோபோவை உருவாக்குகிறார்கள். ‘Speed 1 Terahertz, memory 1 zeta byte’ என அத்தனை அம்சங்களைக் கொண்டிருந்தாலும் தோல்வியடைவது மட்டும்தான் அதனுடைய வேலை. என்ன செய்தாலும் எப்படிச் செய்தாலும் தோற்றுப்போகும். அப்படி ஒரு ரோபோ உருவாக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அச்சு அசலாக சிவப்பு கலர் ஜெர்சி அணிந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை … Read more

30.04.22 சனிக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

“என் மனைவி மரணத்தில் மாஜி அமைச்சருக்குத் தொடர்பிருக்கிறது!" – நடிகை சித்ரா கணவர் போலீஸில் புகார்

கடந்த 2020-ம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்ராவின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக அவரின் தந்தை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். நடிகை சித்ரா இந்த நிலையில், ஹேம்நாத் கடந்த 25-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். … Read more

10 நாள்கள்… ஆயிரக்கணக்கான போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் – அகவிலை உயர்வு கோரிப் போராட்டம்!

சென்ட்ரல் அருகே பல்லவன் இல்லத்தில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல‌ அமைப்பு சார்பாகத் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர். போராட்டம் ஓய்வுபெற்ற அரசுப்போக்குவரத்து ஊழியர்களுக்கு 77 மாதங்களாக ஓய்வூதியம் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. அதேபோல, மற்ற அரசுத் துறை ஓய்வூதியர்கள்போலப் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. மேலும், இறந்த ஓய்வூதியர்கள் குடும்பத்துக்கான நிதியுதவி ரூபாய் 50,000 இவர்களுக்கு … Read more

இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பஞ்சாயத்து பேசி மறைக்கமுயன்ற அதிமுக பிரமுகர் உட்பட 7 பேர் கைது!

தஞ்சாவூர் அருகே இளம்பெண் ஒருவரைச் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டி மிரட்டிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் நான்கு பேர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கட்டப்பஞ்சாயத்துப் பேசி இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்ற அ.தி.மு.க பிரமுகர் உட்பட ஏழு பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கூட்டுப் பாலியல் வன்கொடுமை தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண் ஒருவர், தஞ்சாவூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த … Read more