பக்கிங்ஹாம் கால்வாய்: நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்!

சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தனி நபர் ஒருவர் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தலைமை நீதிபதி கொண்ட அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கால்வாயை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி அதே சமயத்தில், “ஆக்கிரமிப்பாளர்களுக்கு … Read more

`இனி தன்பாலின ஈர்ப்புள்ள ஆண்கள் ரத்த தானம் செய்யலாம்!' – தடையை நீக்கிய கனடா அரசு

தன்பாலின ஈர்ப்புள்ள ஆண்கள் ரத்தம் தானம் கொடுக்க இதுவரை நீட்டித்து வந்த தடையை நீக்கியுள்ளது, கனடா அரசு. ரத்த தானத்தின் மூலம் ஹெச்.ஐ.வி தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக 1992-ம் ஆண்டு முதல் தன்பாலின ஈர்ப்புள்ள ஆண்கள் (gay) ரத்தம் தானம் கொடுக்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டில் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள், ஐந்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ரத்த தானம் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. பிறகு ஐந்தாண்டு கால இடைவெளியானது மூன்று மாதங்களாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில் … Read more

"தேவர் மகன் படத்தில் நாசர் ரோல் சலீம் கவுஸ்தான் நடிக்கவேண்டியது" – நினைவுகள் பகிரும் விஜய் பாலாஜி

‘வெற்றிவிழா’, ‘சின்னக் கவுண்டர்’ உள்பட பல படங்களில் நடித்த சலீம் கவுஸ், தனது 70-வது வயதில் மும்பையில் காலமானார். ஒரு காலகட்டத்தில் தமிழில் மிக குறைவான படங்களில் நடித்திருந்தாலும் தனது கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர். கார்த்தியின் ‘சகுனி’ படத்தில் பிரகாஷ்ராஜின் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமாகி, நடித்து வந்தவர் சலீம் கவுஸ் தான். ‘சகுனி’யில் சலீம் கவுஸின் போர்ஷன்கள் படமாக்கப்பட்டபோது அவருடன் நடித்திருப்பவர் விஜய் பாலாஜி. பாலாஜி சக்திவேல் உள்பட பலரின் படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விஜய்பாலாஜி, … Read more

மானாமதுரை: பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்காலை எச்சம் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவுக்குட்பட்ட மணக்குளம் கிராமம் வலையனோடைக் கண்மாய்ப் பகுதியில் கிடக்கும் கற்கள் வித்தியாசமாக இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின்படி, பாண்டியநாடு பண்பாட்டு மையம் வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர்‌. இந்த ஆய்வில் அங்கு பெருங்கற்காலத்தில் இரும்பு உருக்காலை இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். கண்மாய்ப் பகுதியில் இரண்டு உருக்காலைகளும் ஏராளமான இரும்பு உருக்கு கழிவுகளும், பல துண்டுக் குழாய்களும் மேற்பரப்புக் கள ஆய்விலேயே கண்டறியப்பட்டுள்ளன. மேலும், இந்த … Read more

"திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது மிக முக்கியம்" – பா.இரஞ்சித்

“திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது மிக முக்கியம் என நினைக்கிறேன்…” என்று நீலம் பண்பாட்டு மைய நிறுவனரும் திரைப்பட இயக்குனருமான பா.இரஞ்சித் மதுரையில் பேசியிருக்கிறார். பா.இரஞ்சித் தமிழகத்தின் தொன்மைக்கலைகளையும், கலைஞர்களையும், நவீன கலை வடிவங்களையும் கொண்டு சேர்க்கும் வகையிலான நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்திவருகிறது. இந்நிலையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தை தலித் இலக்கிய மாதம் என அறிவித்து ‘வானம் கலைத் திருவிழா’ வை நடத்துகின்றனர். … Read more

“உங்களால் இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!" – பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தி மொழி குறித்து கூறிய கருத்து தேசிய அளவில் அரசியலில் பெரும் விவாதத்துக்கு வித்திட்டது. அதைத் தொடர்ந்து நடிகர் கிச்சா சுதீப், அஜய் தேவ்கன் இருவருக்குமிடையில் அண்மையில் ட்விட்டரில் இந்தி மொழி குறித்து உரையாடல் நடைபெற்றது. இதில் அஜய் தேவ்கன் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று கூறினார். தேசிய மொழி சர்ச்சை – சுதீப், அஜய் தேவ்கன் இதற்கு கிச்சா சுதீப் இந்தி மற்ற … Read more

விரும்பியதை அருளும் ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமி ஹோமம்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

15-5-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று (விஷ்ணுபதி புண்ய காலம், பௌர்ணமி சுவாதி நட்சத்திரம்) காலை 10 முதல் 11.30 மணி வரையிலான நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமகாலட்சுமி ஹோமம் நடத்த உள்ளோம். இந்த ஹோமத்தை சத்ய யுக சிருஷ்டி கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம். சத்ய யுக சிருஷ்டி கோயில் குடும்ப நலனுக்காகவும் உலக நன்மைக்காகவும் நடத்தப்படுபவை ஹோமங்கள். இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரிஷிகளால் உருவாக்கப்பட்டு, சிறப்புடன் … Read more

“இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்னையாகப் பார்க்கமுடியாது!" – முதல்வர் ஸ்டாலின்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக, “இலங்கையில் உணவு, அத்தியாவசியப் பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்டப் பகுதிகளில் கடும் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்னையாகப் பார்க்கமுடியாது. அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. ஸ்டாலின் இலங்கை மக்களுக்கு 500 டன் பால் … Read more

“கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்!" – அரசுக்கு கோரிக்கை வைக்கும் விவசாயிகள்

தற்போது, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதிகளில் விவசாயிகள், பல ஏக்கர் நிலங்களில் மிளகு சாகுபடி செய்து வருகின்றனர். கொல்லிமலையில் மிதமான தட்பவெப்ப நிலை, ஈரப்பதம் அதிகம் உள்ளதால், மிளகு வளர்ச்சிக்கு உதவியாக அமைகிறது. மிளகு விவசாயிகள் உலகத்தரம் வாய்ந்த மிளகுகளை இங்கு சாகுபடி செய்து வருகின்றனர். உலக அளவில் பிரசித்தி பெற்றதாக விளங்குவது கொல்லிமலை மிளகு. `கருப்பு தங்கம்’ என அழைக்கப்படும் மிளகானது, கர்நாடகம், கேரளத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. … Read more

KGF: இன்ஜினீயரிங் மாணவி டு ராக்கி பாயின் காதலி; Srinidhi shetty -யின் திரைப்பயணம்|Photo Story

KGF பாகம் ஒன்று வெளியானபோது மிக குறைவாகவே அந்தப் படத்தில் இவருக்கு காட்சிகள் இருந்தபோதும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி. ஸ்ரீநிதி ஹீரோயினாக அறிமுகமானது KGF படத்தில் தான். ஆனால் அதற்கு முன்பே உலகம் முழுவதும் மாடலாக அறிமுகமாகிவிட்டார். 1992 அக்டோபர் 21 கர்நாடகா மங்களூரில் பிறந்தார் ஸ்ரீநிதி. துளு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர். Sri Narayana Guru English Medium School-ல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கிறார். பெங்களூர் ஜெயின் யுனிவர்சிட்டியில் … Read more