`தூங்கினால் ₹26,500 சம்பளம்!' – முந்தி அடித்துக்கொண்டு விண்ணப்பித்த மக்கள்

தூங்கி எழுந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வில் பங்கேற்று தூங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்கிற மலாயா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு மலேசியாவில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கரும்பு தின்னக் கூலி கொடுப்பதைப் போல ஆய்வின் நிமித்தம் தூங்குதற்கு பணம் என்கிற அறிவிப்பால் ஈர்க்கப்பட்டு பலரும் அதற்குப் பதிவு செய்துள்ளனர். Sleep Doctor Vikatan: எப்போதும் சோர்வு; நன்றாகத் தூங்கி எழுந்த பிறகும் தொடரும் தூக்கம்; என்னவாக இருக்கும்? மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகம் தூக்கம் குறித்த … Read more

"அதைப் பார்த்துவிட்டு வெற்றிமாறன் சார் முதலில் மறுத்துவிட்டார்" – 8 தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்

ஒரு சில படங்களை நம் வாழ்நாளில் அவ்வளவு எளிதாக கடந்துவிடமுடியாது. அப்படியான ஒரு படம்தான் எட்டு தோட்டாக்கள். படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு இயக்குநர் ஸ்ரீ கணேஷின் சிறப்பு நேர்காணல் இதோ… 8 தோட்டாக்கள் முதல் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. படம் குறித்து தற்போது வரை அனைவரும் பேசி வரும் நிலையில் உங்களின் மனநிலை என்ன? ” நாளைய இயக்குநர் முடித்துவிட்டு 2 வருடம் வேறு ஒரு ஸ்கிரிப்ட் வைத்துக்கொண்டு வாய்ப்பு … Read more

`நீங்க என்னை பாராட்டுற காலம் கண்டிப்பா வரும்ணே!' – புகார் கொடுத்தவர்களுக்கு விமல் அனுப்பிய ஆடியோ!

நடிகர் விமல்மீது ஏற்கெனவே விநியோகஸ்தர் சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர் கோபி ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து `மன்னர் வகையறா’ படத்தின் தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசனின் மகள் ஹேமா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பண மோசடி புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். இந்நிலையில் நடிகர் விமல், விநியோகஸ்தர் சிங்காரவேலன், கோபி இருவருக்கும் மாலை ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். அதில் அவர் பேசியிருப்பதாவது. ”சிங்காரவேலன் சார், கோபி அண்ணனுக்கு வணக்கம். என்னை … Read more

KGF-ன் உண்மை கதை: 1000 டன்கள் தங்கம் – மிரள வைக்கும் கோலாரின் 2000 ஆண்டு வரலாறு!

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு… வறட்சியும் விஷத்தன்மை மிக்க தேள் முதலிய உயிரினங்களும் நிறைந்த பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் சிறு குழு ஒன்று பரந்த விரிந்த குன்றுகளுக்கு நடுவே மேய்ச்சலுக்கான இடம் தேடி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். வெப்பம் தாள முடியாத அளவுக்கு வாட்ட, காற்று வீசாதா என ஏக்கத்தோடு பார்க்கும் மக்களின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறுமைதான் தென்படுகிறது. யாரும் எதிர்பாராத வேளையில் பேய் காற்று வீசத் தொடங்குகிறது. பாறைகளை மூடிய பழுப்பு நிற மண்துகள்களை வாரி … Read more

Elon Musk: ட்விட்டர் இனி எலானின் சொத்து… முடிவுக்கு வந்த டீல்; இனி என்ன நடக்கும்?

கால் வைக்கும் முன்பே கைப்பற்ற நினைக்கும் மாமன்னர் அலெக்ஸ்சாண்டர் போல, இன்றைக்கு மல்டிவெர்ஸ் எல்லாவற்றையும் சேர்த்தாலும் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபரான எலான் மஸ்க்கின் ஆளுகை விரிவடைந்து கொண்டே போகிறது. தற்போது அவர் கைகளில் வந்தமர்ந்திருக்கும் பறவை ட்விட்டர். 2006-ல் தொடங்கப்பட்ட முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரின் 100 சதவிகித பங்குகளை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கவுள்ளார் எலான் மஸ்க். 54.20 டாலர் ஒரு பங்கின் விலையாக பங்குதாரர்களுக்கு கிடைக்கும். ஏப்ரல் 1 அன்று … Read more

முன்னாள் ராணுவ வீரரிடம் லஞ்சம் – நில அளவையரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

கரூர் – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள எல்.வி.பி நகர் பகுதியில் வசிப்பவர் சரவணன் (வயது 46). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர், தனது நிலத்தை கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப்பட்டாவிற்கு மாற்ற, நில அளவையர் துறையை அணுகியிருக்கிறார். அங்குள்ள பீல்டு சர்வேயரான ரவி (40) என்பவர், இந்த தனிப்பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. முதலில் ரூ 8 ஆயிரம் கேட்டாராம். ஆனால், சரவணன், ‘அவ்வளவு முடியாது’ என்று கூற, இறுதியில் ரூ 5 ஆயிரம் தான் … Read more

தமிழகத்தில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி கேட்கும் வேதாந்தா நிறுவனம்! – ஒரு சுற்றுசூழல் பார்வை

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இயற்கை எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கான அனுமதிகேட்டு, வேதாந்தா குழுமத்தின் கெய்ர்ன் ஆயில் & கேஸ் நிறுவனம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருக்கிறது. மீனவ, விவசாய மக்களின் வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என பல்வேறு அரசியல், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஹைட்ரோகார்பன் திட்டம்: தமிழக அரசு எதிர்த்தும் அரியலூரில் ஓ.என்.ஜி.சி அனுமதி கேட்பது ஏன்? வேதாந்தா விண்ணப்பம் கடந்த … Read more

திருவண்ணாமலை: கள ஆய்வில் பல்லவர் காலத்துச் சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலையில் நடந்த கள ஆய்வில் பல்லவர் காலத்துச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அணிகலன்கள் மற்றும் சிற்ப அமைதியை வைத்து இச்சிற்பம் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்துக் கொற்றவையாக இருக்கலாம். பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகத் தவ்வையும் அதன் அருகே வயல்வெளியில் சிவலிங்கமும் முருகர் சிற்பமும் காணப்படுகின்றன. திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம், மேல்மலையனூர்ப் பகுதியில் உள்ள ஊர்களில் கள ஆய்வு மேற்கொண்டபோது, கிழவம்பூண்டி கிராமத்தில் உள்ள மல்லியம்மன் கோயியில் ஆய்வு மேற்கொண்டார். அவ்வூரின் … Read more