கோவிட் தொற்றுக்கான புதிய மருந்து… சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் சோதனை!

கோவிட் தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய புதிய மருந்திற்கான ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளனர் சென்னை ஐ.ஐ.டி-யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இன்டோமெதாசின் எனப்படும் விலை குறைந்த இம்மருந்தின் செயல்திறன் கோவிட் தொற்றிற்கு எதிரான சோதனையில் நல்ல முடிவுகளை அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 1960-களில் இருந்து அலர்ஜி போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டு வரும் இன்டோமெதாசின், அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது குறித்த அறிவியல் அடிப்படையிலான ஆரய்ச்சிகளை … Read more

தருமபுரி: கணவனுக்காக மனைவி செய்த கொடூரம்… அத்தை, மாமாவால் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

தருமபுரி அருகே 16 வயது சிறுமி ஒருவர் தனது அத்தையின் வீட்டில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வருகின்றார். அந்த மாணவியின் தாய்க்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், அவர் ஓசூரில் தங்கியிருக்கிறார். சிறுமியின் தந்தை இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், குடும்பச் சூழல் காரணமாக அந்த சிறுமி தருமபுரியில் உள்ள அவரின் அத்தையின் வீட்டில் தங்கிப் படித்து வருகின்றார். வீட்டின் மேல்மாடியில் பெரிய அத்தையின் குடும்பம் வசித்துவரும் நிலையில், கீழே உள்ள வீட்டில் வசிக்கும் சின்ன அத்தையின் … Read more

`குழந்தை திருமணம், சிறார்வதை நகர்ப்புறங்களில்தான் அதிகம்!' – கருத்தரங்கில் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, யுனிசெஃப் மற்றும் தோழமை அமைப்பு ஆகியவை இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி கூட்டரங்கை கிருஷ்ணகிரியில் நடத்தினர். நிகழ்ச்சியில் சமகால குழந்தைத் திருமண பிரச்னைகள் என்ற தலைப்பில் பேசிய சென்னை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சரண்யா சதீஷ், “2014-2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வு (NHFS) கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 26.8% குழந்தைத் திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த … Read more

“இந்தியாவை தாக்கினால்… எல்லையை தாண்ட தயங்கமாட்டோம்!" – ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

1971 இந்தியா – பாகிஸ்தான் போரில் அஸ்ஸாமை  தளமாகக் கொண்டு சண்டையிட்ட வீரர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்திய நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய பா.ஜ.க அரசு தீவிரமாகச் செயல்படுகிறது. பயங்கரவாதத்தைக் கடுமையாக இந்தியா எதிர்க்க முன்வந்துள்ளது. ராணுவ வீரர்கள் இந்தியாவின் எல்லையிலிருந்து இந்தியா குறிவைக்கப்பட்டால், எங்கள் எல்லையைத் தாண்ட தயங்கமாட்டோம். வங்க தேசம் நட்பு … Read more

2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேர் கொலை – உத்தரப்பிரதேசத்தில் கொடூரம்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் கவாஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றியதாக இன்று காலை காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு  விரைந்த காவல்துறை அந்த வீட்டில் குழந்தை உள்பட 5 பேரின் சடலங்களை கண்டெடுத்துள்ளது.  மர்ம மரணம் சம்பவம் நடந்த வீடு  அது தொடர்பான விசாரணைக்குப் பின் மூத்த காவல்துறை அதிகாரி அஜய் குமார் தெரிவித்ததாவது, “வீடு தீப்பற்றியுள்ளது என அக்கம்பக்கத்து வீட்டார் அளித்த தகவலின் பேரில் வந்த போது அந்த … Read more

வீடு மனை யோகம் அருளும் செவலூர் ஸ்ரீபூமிநாதர் கோயிலில் வாஸ்து நாள் சிறப்பு யாகம்!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாகவும் திகழ்கிறது. மகாவிஷ்ணு, பூமாதேவி வழிபட்ட இந்தத் தலம், வாஸ்துவிற்கு உரிய கோயிலாக போற்றப்படுகிறது. நிலம், வீடு, மனை உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் இருப்பவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்னை மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளோர் இங்கு வந்து வேண்டிக் கொள்ள அவை உடனடியாக நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. சொந்த … Read more

`நம்மாளு ஒருத்தன் போனா, அங்க பத்துபேரு போனும்' -சர்ச்சை கருத்தால் இந்து மகாசபா தலைவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள முள்ளுவிளை கிராமத்தில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் கடந்த 17.4.22 ம் தேதி அகில பாரத இந்து மகாசபா மாநில தலைவர் தா.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர், புதுக்கடை பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள துணிக்கடை மாடியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தா.பாலசுப்பிரமணியன், “இந்துக்களை பாதுகாப்பது நமது கடமை. கேரளாவுல ஒருத்தனை வெட்டினா அவன் திருப்பி இன்னொருத்தன வெட்டுவான். தமிழ்நாட்டில அப்பிடி இருக்கக்கூடாது. நம்மாளு ஒருத்தன் … Read more

சென்னை: ஆண் நண்பருடன் பேச்சு; காட்டிக் கொடுத்த கால் ரெக்காடர் – காதல் மனைவியைக் கொலை செய்த கணவர்

சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புகழ்கொடி (எ) டில்லி (23) இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர், சரிதா (19) என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறிதான் இவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது. அதனால் இருவரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். குமரி: சிறுமி மீது ஒருதலைக் காதல்; மனைவி கொலை – காதல் கடிதத்தால் சிக்கிய கணவர்! … Read more

இட்லி! -சிறுகதை

மணி இரவு 9.30. அமைச்சர் அமலனின் கார் ஊருக்குள் நுழைந்தது. பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு, வாழ்க கோஷம், கட்சிக்காரர்கள் ஷால் போர்த்தல், பத்திரிகையாளர் சந்திப்பு என எல்லா சம்பிரதாயங்களும் சமுதாயக்கூடக் கட்டடத்தில் முறைப்படி விமரிசையாக நடைபெற்றன. எல்லா வழக்கமான சடங்குகளும் முடிந்தபின். அவர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றார் முத்து… தங்கும் அறையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்ததால் இரவு நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தார். ஆறு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை … Read more

“தமிழகத்தில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை'' – எடப்பாடி பழனிசாமி காட்டம்

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூரில் கோயில் கோடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.ஐ மார்க்கெட் தெரசாவிடம் ஆறுமுகம் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆறுமுகம் என்பவர் அண்மையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஆறுமுகம் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண் காவல் அதிகாரியின் கழுத்தை அறுத்து … Read more