Vijay 66: விஜய் – ராஷ்மிகா பாடல் ஷூட்; ஐதராபாத்தில் அடுத்த ஷெட்யூல்… `Vijay 67' இயக்குநர் யார்?

`பீஸ்ட்’ கலெக்‌ஷன் எவ்வளவு? படம் வெற்றியா, தோல்வியா என பட்டிமன்றங்கள் ஒரு பக்கம் பரபரத்தாலும், சத்தமே இல்லாமல் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். ‘தோழா’ வம்சி பைடிபலி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘விஜய் 66’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. ‘காதலுக்கு மரியாதை’, ‘பூவே உனக்காக’ போல இது ஃபேமிலி ஆடியன்ஸைக் கவரும் கதை எனப் படத்தின் தில் ராஜூவே நம்பிக்கை மின்னச் சொல்லியிருக்கிறார். கடந்த சில வாரத்திற்கு முன்னர் … Read more

முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவில் சுற்றித்திரிந்த உக்ரேனியர்கள் – அஸ்ஸாமில் கைது!

அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உக்ரேனிய குடிமக்கள் இருவர் திரிபுரசுந்தரி எக்ஸ்பிரஸில் டெல்லிக்கு செல்வதை ரயில்வே காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக காவல்துறை, “ரயில்வே போலீஸார் வழக்கமான சோதனையில் அகர்தலாவில் இருந்து டெல்லி செல்லும் ரயில் அஸ்ஸாமில் உள்ள படற்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.  Assam அப்போது ரயிலில் இரண்டு உக்ரேனிய குடிமக்கள் இருந்ததை கண்டறிந்தனர். அதை தொடர்ந்து அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவை விசாரிக்கப்பட்டது. அப்போது அவர்கள் இருவரும் தங்களை கிறிசின்ஸ்கி வோலோடிமிர் … Read more

DC v RR: ஓயாத பட்லர் புயல்; மேட்சை மாற்றிய ப்ரஷித்… ஃபேர்பிளேயில் கோட்டை விட்ட டெல்லி!

ஐ.பி.எல்.லின் `எல் க்ளாசிகோ’ என அழைக்கப்படும் மும்பை, சென்னை போட்டி நேற்று நடந்தது. ஆனால், கடைசி ஓவரில் தோனியின் அதிரடி இல்லாமல் இருந்திருந்தால், `இது வெடிகுண்டு இல்ல வெறும் குண்டு’ என்ற அளவிலேயே அந்தப் போட்டி முடிந்திருக்கும். இன்றைய போட்டி அப்படி இல்லை. இந்த ஐபிஎல்லிலேயே கிட்டத்தட்ட சமபலத்துடன் இருக்கும் இரு அணிகள் ராஜஸ்தானும், டெல்லி கேப்பிடல்ஸும்தான். விக்கெட் கீப்பர் கேப்டன்கள்; பட்லர், வார்னர் என அதிரடி ஓபனிங் பேட்டர்கள்; குல்தீப், சாஹல் என பர்ப்பில் கேப்புக்கு … Read more

23.04.2022 இன்றைய ராசிபலன் | Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan |

#indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/THUC_1W-e3c #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

`ஊரடங்கில் பிறந்த குழந்தைகளுக்கு பேச்சும் வளர்ச்சியும் தாமதமாகலாம்!'- ஆய்வும் மருத்துவர் விளக்கமும்

கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில் நோயால் பாதிப்புகள் ஏற்பட்டதோடு, கூடுதலாக ஊரடங்கு காரணமாகவும் பல்வேறு பாதிப்புகள் இருந்தன. பொருளாதார சிக்கல்கள், குழந்தைகளின் கல்வி பாதிப்பு என பல பிரச்னைகள் இருந்தன. இந்நிலையில், கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் பிறந்த குழந்தைகள் பேசுவதற்கு அதிக நாள்கள் எடுத்துக்கொள்வதாக சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. Baby – Representative Image மூச்சுக்காற்றில் கோவிட்-19 பரிசோதனை, 91.2% துல்லியமுள்ள கருவி.. முதன்முறையாக அமெரிக்காவில் அனுமதி! LENA என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் … Read more

இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை… மோடி வருகைக்கு மத்தியில் ஜம்முவில் பதற்றம்!

ஜம்மு-வின் சுஞ்ச்வான் பகுதியில் இன்று அதிகாலை இரண்டு தீவிரவாதிகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இந்தியப் பிரதமர் மோடியைக் கொலை செய்ய வந்த தற்கொலைப்படையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 4:25 மணியளவில் சுஞ்ச்வான் ராணுவ முகாமை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு தீவிரவாதிகளைக் கண்ட எல்லை பாதுகாப்புப் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் சி.ஐ.எஸ்.எஃப் உதவி … Read more

“உதயநிதி ஸ்டாலின் கார் கமலாலயம் வர அருகதையில்லை..!" – அண்ணாமலை தாக்கு

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது. இந்த நிகழ்வுகள் கடந்த 2006 – 2011 தி.மு.க-வின் இருண்ட கால ஆட்சியை நினைவூட்டுகிறது. அண்ணாமலை மின்வெட்டுக்கு முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் மத்திய அரசையே குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தியாவில் 777 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 2.2 கோடி இருப்புள்ளது. முக்கியமாக, மத்திய மின்துறை … Read more

கார் கவிழ்ந்து விபத்து; 3 வயது குழந்தை பலி… 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

கன்னியாகுமரி மாவட்டம் ஆமணக்குவிளை பகுதியைச் சேர்ந்த சுயம்புதாசன் என்பவரின் மகன்கள் லிங்கேஸ் (36), சதீஷ் (34). இவர்கள் சென்னை ஐ.டி. கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினீயர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து சொந்த ஊரான ஆமணக்குவிளையில் உள்ள கோயிலில் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக தங்களது காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சதீஷ் ஒட்டிச் சென்றார். அவர்கள், சாத்தூர் அருகே பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. … Read more

கழிவுநீரில் நனைந்து வீணான 11,000 இரும்புச்சத்து மாத்திரைகள்; விருதுநகரில் என்ன நடந்தது?

விருதுநகரில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதையொட்டி உள்ள நூலக அறையில் மருந்துப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. கடந்த சில நாள்களாக விருதுநகரில் கனமழை பெய்ததில் மருந்துப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையை ஒட்டியுள்ள வடிகாலில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தக் கழிவுநீர் மருந்துப் பொருள் இருப்பு வைக்கப்பட்ட அறையினுள்ளும் புகுந்துள்ளது. இதனால் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த மருந்துகளில், அட்டைப் பெட்டியில் இருந்த 11,000 இரும்புச்சத்து மாத்திரைகள் கழிவுநீரில் … Read more