Glory Hole: பிரமாண்ட சுழல் திறப்பு… வியக்க வைக்கும் இன்ஜினியரிங்கின் பின்னணி என்ன?

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஏரியில் செயற்கையாக சுழலும் பிரமாண்ட சுழல் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 75 அடி அகலம் கொண்ட இந்த ராட்சச சுழல், கிழக்கு நாபா (Naba) பகுதியின் பள்ளத்தாக்கில் உள்ள மான்டிசெல்லோ அணையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை ‘நரகத்திற்கான வழி (Portal To Hell)’ மற்றும் ‘Glory Hole’ என்று அழைக்கின்றனர். 1950களில் ஏரியில் உள்ள அளவுக்கு அதிகமான தண்ணீரை வெளியேற்ற திட்டங்கள் வகுத்தபோது பெரிய நம்பமுடியாத சுழல் போன்று வடிவமைத்து ஏரியில் 4.7 மீட்டருக்கு … Read more

KGF 2 or Beast? வசூலைக் குவித்தது எது? – உண்மையை விளக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

`பீஸ்ட்’, `கே.ஜி.எஃப்-2′ ஆகிய படங்கள் வெளியாகி ஒருவாரம் நெருங்கிய நிலையில், அதன் வசூல்கள் குறித்து பேச்சு இன்னமும் பெரிய விவாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினேன். `பீஸ்ட்’, `கே.ஜி.எஃப்-2′ – ரெண்டுல எந்தப் படம் அதிக வசூலைக் கொடுத்துட்டு வருது? `கே.ஜி.எஃப்-2′ ஸ்க்ரீன்ஸ் அதிகப்படுத்தி இருக்காங்களா? “தமிழ்நாட்டை பொறுத்தவரையில் விஜய் படத்துக்கு வரவேற்பு இருக்கு. மொத்தம் உள்ள ஆயிரம் தியேட்டர்கள்ல தொள்ளாயிரம் தியேட்டர்கள்ல ‘பீஸ்ட்’ படத்தைத் திரையிடத்தான் விரும்பினோம். … Read more

`கோதுமை, அரிசியை விட பாலின் மதிப்பு அதிகம்!' – பிரதமர் மோடி பெருமிதம்

குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டம் தியோதர் என்ற இடத்தில் பால் பொருள் வளாகம், உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை, பனாஸ் சமூக வானொலி போன்றவற்றை தொடங்கியதோடு, 100 டன் உற்பத்தி திறனுடைய நான்கு இயற்கை எரிவாயு ஆலைகளுக்கும் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பால் உற்பத்தியை செய்து வருகிறது, இந்தியா. இந்த பால் உற்பத்தியின் மதிப்பு கோதுமை மற்றும் … Read more

ஆந்திரா: பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட 13 வயது சிறுமி – 74 பேரைக் கைது செய்த காவல்துறை

ஆந்திரா மாநிலம், குண்டூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்துவந்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் அந்த சிறுமியின் தாயார் கொரோனா பாதிப்பு காரணமாக குண்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமியின் தாயார் உயிரிழந்தார். இந்த நிலையில்தான், மருத்துவமனையில் சிறுமியின் தாயுடன் நட்புடன் பழகிவந்த சொர்ணகுமாரி என்ற மருத்துவமனை பணியாளர், சிறுமியைத்தான் தத்தெடுத்து வளர்த்துக் கொள்வதாகக் கேட்டிருக்கிறார். பாலியல் வன்கொடுமை சிறுமியின் தந்தையும், அவர் மகளை சொர்ணகுமாரியிடம் ஒப்படைத்துள்ளார். … Read more

பணத்தைக் கையாள்வதில் உங்கள் பிள்ளைகள் எப்படி? – பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் – 8

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்’ என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் … Read more

குழந்தைக்காக மனைவியுடன் தாம்பத்திய உறவு… ஆயுள் தண்டனைக் கைதிக்கு பரோல்! சரியா? தவறா?

குழந்தைப்பேறுக்காக மனைவியுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள ஆயுள் தண்டனைக் கைதிக்கு 15 நாள்கள் பரோல் வழங்கியிருக்கிறது ராஜஸ்தான் உயர் நீதிமன்றம். ஒரு பெண்ணுக்கான அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்தரிக்கும் உரிமையின் அடிப்படையில் கோரப்பட்ட இந்த பரோலுக்கு இந்த அனுமதியினை வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இதே போன்று ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. `கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் தன் கணவருடன் தாம்பத்திய உறவு கொண்டு கருத்தரிக்க வேண்டும்’ … Read more

`குங்குமம், வளையல் எங்கே?' – ஷூட்டுக்கு சென்ற புதுப்பெண் ஆலியாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

பெண்களின் ஆடை, அணிகலன்கள் குறித்த கட்டுப்பாடுகளை கழுகுகள்போல கவனித்து விமர்சித்துக்கொண்டிருக்கவே நெட்டிசன்கள் கூட்டம் ஒன்று உள்ளது. பாலிவுட் நட்சத்திர ஜோடி ஆலியா பட் – ரன்பீர் கபூரின் திருமணம் மும்பையில் உள்ள கபூர் குடும்பத்தினரின் வீட்டில் சமீபத்தில் நடந்து முடிந்தது. திருமணத்திற்குப் பிறகு முதன் முறையாக வெளியே வந்துள்ள ஆலியா, கரண் ஜோஹரின் `ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள விமானநிலையம் சென்றுள்ளார். ரன்பீர்- ஆலியா ரன்பீர் கபூர் ஆலியா பட் … Read more

Electric Scooter Fire: தெலங்கானாவில் மறுபடியும் தீப்பிடித்த ப்யூர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

தூங்கி எழுந்தால் இப்போதெல்லாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிவதுதான் தலைப்புச் செய்தியாக இருப்பது, மிகவும் வருத்தமான விஷயம். தினமும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீக்கிரையாகி, சோஷியல் மீடியாக்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது. நேற்று முன் தினம் தெலங்கானாவில் உள்ள வாராங்கல் எனும் இடத்தில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த முறை எரிந்தது – ப்யூர் எனும் நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். மூன்று வாரங்களுக்கு முன்பு சென்னையில் இதே ப்யூர் ஸ்கூட்டர் எரிந்து போனது … Read more

பிரசாதக் குங்குமம் எப்படித் தயாராகிறது தெரியுமா? திருவேற்காடு திருக்கோயிலுக்கு ஒரு ஸ்பாட் விசிட்!

திருநீறும் குங்குமமும் பக்தர்களின் அடையாளம். ஆலயங்களுக்குச் செல்லும்போது அங்கு நாம் பெற்றிக்கொள்ள விரும்பும் பிரசாதங்கள் இவைதான். திருநீறு என்பதற்கு ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் உண்டு. குங்குமமோ அம்பிகையின் அருட்பிரசாதம். மகாலட்சுமி சுமங்கலிப்பெண்கள் அணியும் குங்குமத்தில் வசிப்பவள் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட மகிமை நிறைந்த குங்குமம் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பது பலரும் அறியாத விஷயம். அண்மையில் தமிழ்நாடு அரசு பக்தர்களுக்கு தரமான திருநீறு மற்றும் குங்குமம் பிரசாதம் ஆகியவற்றைத் தயாரிக்கும் மையங்களை எட்டு ஆலயங்களில் தொடங்கியுள்ளது. திருச்செந்தூர் … Read more

`ரஜினி 169' படத்திலிருந்து நெல்சன் டிராப்… திடீர் வதந்தி பரவியதன் காரணம் என்ன தெரியுமா?

‘பீஸ்ட்’ படத்தின் ரிசல்ட்டினால், இயக்குநர் நெல்சன் அடுத்து இயக்க உள்ள ‘ரஜினி 169’ படம் துவங்கப்படாது என்றும், நெல்சனைத் தூக்கிவிட்டு, வேறு ஒருவரை வைத்து ரஜினி படம் ஆரம்பிக்கப் போவதாகவும் நேற்று கோடம்பாக்கம் முழுவதும் தகவல்கள் பரவின. ‘இது வெறும் வதந்திதான்’ என இதற்கு நெல்சன் தரப்பிலிருந்து மறைமுகமாகப் பதில் வந்தது. அவர் தன் ட்விட்டர் முகப்புப் பக்கத்தில், தன்னுடைய படங்களின் லிஸ்ட்டில் ‘தலைவர் 169’ என ரஜினியின் படத்தையும் தற்போது இணைத்துள்ளார். இதன் மூலம், அவர் … Read more