இதுதாங்க டைரக்டர் டச்!
பொதுவாக திரைப்படங்களில் அந்தத் திரைப்பட நாயகன், நாயகி, இயக்குனர் ஆகியோரின் ரசிகர்களைக் கடந்து, காண்போர் அனைவருடைய மனத்தையும் தொடும் வகையில் காட்சியமைப்புகளைப் படைத்திடும் இயக்குனர்களின் சிந்தனையையே ’டைரக்டர் டச்’ என்பார்கள். அப்படியொரு டைரக்டர் டச் காட்சி இது. ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சிவாஜி கணேசன், சாவித்திரி நடிக்க உருவான திரைப்படம் ‘திருவிளையாடல்’. திரைப்படத்தின் கதைப்படி நாரதர் வேடமிட்டவர் ‘ஞானப்பழம்’ என்ற பழத்தைக் கொண்டுவந்து தருவார். அந்தப் பழம் முருகன் வேடமிட்டவருக்கா, விநாயகர் வேடமிட்டவருக்கா என்ற கேள்வியெழும். … Read more