"கில்லிக்கு முன்னாடியே விஜய் சார்கூட நடிச்சிருக்கேன்; அந்தப் படத்துல…" – ஜெனிஃபர் #18yearsofGhilli

எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் `கில்லி’ படத்திற்கும் இடம் உண்டு. கில்லி வெளியாகி 18 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் தங்கையாக தனது எதார்த்தமாய் நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார் ஜெனிஃபர். ‘கில்லி’ ஜெனிஃபர் என்பதே இவரது அடையாளமாய் மாறிவிட்டது என்றே சொல்லலாம். அவரிடம் கில்லி பட அனுபவம் குறித்துப் பேசினோம். ‘கில்லி’ ஜெனிஃபர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் மீடியாவில் நடிச்சிட்டு இருக்கேன். என் ஒரு வயதிலேயே நடிக்க வந்திட்டதால … Read more

ஹார்ட் அட்டாக், பிரெயின் அட்டாக் வரிசையில் ஐ அட்டாக் அலெர்ட்! கண்கள் பத்திரம் – 11

மாரடைப்பு எனும் ஹார்ட் அட்டாக் பற்றியும், மூளைவாதம் எனப்படும் பிரெயின் அட்டாக் பற்றியும் நிறையவே கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல கண்களிலும் அட்டாக் வரலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கண்களில் வரும் அட்டாக்கை அவசரகால சிகிச்சையாகக் கருதி, உடனடியாக கவனிக்காவிட்டால், பார்வையை முழுமையாக இழக்க வேண்டிய நிலை வரலாம் என எச்சரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். இந்தப் பிரச்னையின் பின்னணி, அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து அவர் தரும் விளக்கங்களைப் பார்ப்போமா? சிறப்பு … Read more

FA கோப்பை பைனலில் லிவர்பூல், செல்சீ! டீம் செலக்‌ஷனால் தோற்றதா மான்செஸ்டர் சிட்டி?

FA கோப்பை இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் மற்றும் செல்சீ அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன. இந்த வார இறுதியில் நடந்த அரையிறுதிப் போட்டிகளில், லிவர்பூல் அணி மான்செஸ்டர் சிட்டியையும்; செல்சீ அணி கிறிஸ்டல் பேலஸையும் வீழ்த்தின. இங்கிலாந்தின் பழமையான கால்பந்து தொடர் FA கோப்பை. 1871ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொடர், 151 ஆண்டுகளாக நடந்துவருகிறது. இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் சனி மற்றும் ஞாயிருக்கிழமைகளில் வெம்ப்ளி மைதானத்தில் நடந்தது. சனிக்கிழமை நடந்த முதல் அரையிறுதியில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூலை எதிர்கொண்டது. … Read more

KGF -2 : கிரீன் சிக்னல் தந்ததா ரெட் ஜெயன்ட் ?! படத்துக்கு கூடுதல் காட்சிகள் கிடைத்த பின்னணி இதுதான்!

கடந்த வாரம் விஜய் நடித்த பீஸ்ட் மற்றும் யஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகின. அந்தப் படங்களைத் தொடர்புபடுத்தி, கடந்த சில தினங்களாக கோலிவுட்டில் பல தகவல்கள் வலம் வருகின்றன. ‘சரியாகப் போகாத ‘பீஸ்ட்’ படத்துக்காக சினிமா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற கே.ஜி.எஃப் 2 படத்துக்குத் தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் தடுக்கப் படுகிறது’ என்பதுதான் அந்த தகவல். அதாவது வசூலைக் குவிக்கும் ‘கே.ஜி.எஃப் 2 படத்தைத் திரையிட விரும்பிய தியேட்டர் உரிமையாளர்களுக்கு, ‘அப்படியெல்லாம் … Read more

“தனிப்பட்ட முறையில் ஆளுநரிடம் எந்த விரோதமும் இல்லை!” – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தது. இதன் காரணமாக ஆளுங்கட்சிக்கும் ஆளுநருக்குமிடையே மோதல் மேலும் அதிகரித்திருப்பதாக செய்திகள் பரவின. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஆளுநரிடம் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. ஆளுநர் என்ற முறையில் அந்த பதவிக்குரிய மரியாதையை நாங்களும் அளிக்கிறோம்” என கூறியுள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய … Read more

`யப்பா பிரபு… போனை எடுப்பா!'- பிரபுதேவாவிற்காக ரிங்டோன்களைப் பாடிய வடிவேலு; சந்திப்பின் பின்னணி

பிரபுதேவாவிடம், வடிவேலு `சிங் இன் தி ரெயின்..’ ரைம்ஸை பாடும் வீடியோ ஒன்றை பிரபுதேவா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது வைரலானது. வடிவேலு – பிரபுதேவா இருவரும் நெருங்கிய நண்பர்கள். டான்ஸ் மாஸ்டர் ஆக இருந்து ஹீரோவாக தனது பயணத்தை ஆரம்பிக்கும் போதிலிருந்து இவர்கள் நட்பு ரொம்பவே ஸ்ட்ராங்கானது. ‘காதலன்’, ‘ராசய்யா’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மனதை திருடிவிட்டாய்’ என பிரபுதேவாவின் பல படங்களில் வடிவேலுவின் காமெடிகள் ஒர்க் அவுட் ஆகின. பிரபுதேவா, தான் இயக்கிய ‘போக்கிரி’, ‘வில்லு’ … Read more

லக்கிம்பூர் விவகாரம்: மத்திய இணை அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் பேரணியின்போது, ஐந்து பேர் கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில், நான்கு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் அடக்கம். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில், மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். லக்கிம்பூர் கேரியில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில், விவசாயிகள்மீது மோதிய மூன்று கார்களும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் … Read more

“இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா?” – ஜெ.பி.நட்டா கண்டனம்

புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் `மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது.இந்த புத்தகம் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுத்தியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியது. இதையொட்டி, இந்த விவகாரத்தில், `நான் என்னுடைய கருத்தைத்தான் கூறினேன். எனவே எனக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன். என்னுடைய கருத்தை திரும்ப பெற மாட்டேன். … Read more

Umran Malik: அச்சுறுத்தும் வேகம்; திமிறும் ஷார்ட் பால்கள்; சிதறும் யார்க்கர்கள்; யார் சாமி இவன்?

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 20-வது ஓவரை முழுமையாக மெய்டனாக்கி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார் உம்ரான் மாலிக். 22 வயதான உம்ரான் மாலிக்கின் இந்த சாகசத்தை கண்டு கிரிக்கெட் உலகமே ஆச்சர்யத்தில் இருக்கிறது. உண்மையில் அவர் வேகத்தைக் கண்டுதான் வியந்து நிற்கிறது. யார் இந்த உம்ரான் மாலிக்? ‘வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கிறார்கள்’ என ஒரு மேற்கோள் உண்டு. சத்தியமான வார்த்தைகள். மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசும் வேகப்பந்து வீச்சாளரை யாராலும் உருவாக்கிவிட முடியாதுதான். … Read more

18 வயதான தமிழகத்தின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் மரணம்!

தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் எதிர்பாராத விதமாக நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இன்று (திங்கள் கிழமை) மேகாலயாவில் தொடங்க உள்ள 83வது தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக தனது மூன்று சக அணி வீரர்களுடன் காரில் பயணித்துள்ளார். அப்போது குவாஹாத்தியில் இருந்து மேகாலயாவில் உள்ள ஷில்லாங் நோக்கி (Guwahati to Shillong) அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிரே வந்த 12 … Read more