தவறாகப் பேசிய காவலர்… புகார் தெரிவித்த பெண்; மன்னிப்பு கேட்ட சைலேந்திர பாபு! – என்ன நடந்தது?

இளம்பெண் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று இரவு ஈ.சி.ஆர் சாலையில் பணியிலிருந்த காவலர் ஒருவர் எங்களிடம் தரக்குறைவாகப் பேசினார். நானும் எனது நண்பரும் அலுவலகம் முடிந்து கடற்கரையில் அமர்ந்திருந்தோம். எங்களுக்குக் கடற்கரையில் அனுமதிக்கப்பட்ட நேரம் குறித்துத் தெரியாது. அப்போது அங்கு பணியிலிருந்த காவலர் ஒருவர் எங்களிடம் குற்றவாளிகளைப் போலவும், தீவிரவாதிகளைப் போலவும் வெறுப்பைக் காட்டினார்” என்றும். மேலும், “இரவு 10 மணிக்கு மேல் வட இந்தியாவில் போய் சுற்றித் திரியுங்கள் என்று மரியாதையைக் குறைவாகப் பேசினார். … Read more

வெளிப்படைத்தன்மை, தற்காலிகத் தடை.. ட்விட்டரில் எலான் மஸ்க் செய்ய விரும்பும் மாற்றங்கள் இவைதாம்!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகித பங்குகளை வாங்கினார். இதையடுத்து ட்விட்டரின் மொத்த பங்குகளையும் 43 பில்லியனுக்கு வாங்குவதாகத் தெரிவித்துள்ளார். Twitter | ட்விட்டர் “ட்விட்டரை மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள். இல்லையென்றால்…”- எச்சரிக்கை விடுக்கிறாரா எலான் மஸ்க்? ஒருவேளை தான் ட்விட்டரை வாங்கும் பட்சத்தில் அதில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய விரும்புவதாக, TED நிகழ்ச்சியில் நடைபெற்ற நேர்காணலில் தெரிவித்தார் எலாம் மஸ்க். அதில், ‘அதிகபட்ச நம்பகமான மற்றும் … Read more

மாநில சாதனைகள் 17, தேசிய போட்டியில் வெள்ளி, அடுத்து சர்வதேச போட்டி – யோகாவில் சாதிக்கும் மாணவர்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் நெசவாளர் காலனியைச் சேர்ந்த ராஜ்குமார் – லீலாவதி தம்பதியின் மகன் டால்வின்ராஜ். அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே யோகா பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு, அப்துல்கலாம் வேர்ல்டு ரெக்கார்டு, டிரம்ப் வேர்ல்டு ரெக்கார்டு மற்றும் மாவட்ட அளவில் 37 சாதனைகளும், தமிழ்நாடு அளவில் 17 சாதனைகளும் செய்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 11-ம் தேதி கோவாவில் … Read more

“ஏழைகளுக்கு எதிராகப் பாகுபாடு கொண்ட சட்டங்களே இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளன" – நீதிபதி எஸ்.முரளிதர்

இந்தியாவில் சட்ட உதவிகளின் தரம் குறித்த கவலையை ஒடிஸா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “இங்கே பாகுபாடுகளால் ஆன சட்டங்கள்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை எப்போதும் ஏழைகளுக்குச் சமமற்ற முறையில் செயல்படுகின்றன. சமுதாயத்தில் ஒரங்கட்டபட்டவர்கள் நீதியை அணுகுவதற்குப் பல தடைகள் உள்ளன, கல்வியறிவு பெற்ற ஒருவருக்கும் சட்டங்களும் செயல்முறைகளும் மர்மமானவை.” என்கிறார். `கல்வி, வேலைவாய்ப்பில் பாகுபாடு ஒழிப்பு மற்றும் விளிம்புநிலை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஒடிஸா … Read more

Oil India தலைமையகத்தில் சைபர் தாக்குதல்… ரூ. 57 கோடி கேட்டு மிரட்டல்! பின்னணி என்ன?

அஸ்ஸாமில் உள்ள இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு தயாரிக்கும் நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனத்தின் துலியாஜன் தலைமையகம் (Duliajan Headquarters) மர்ம நபர்களால் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி நடந்த இந்த சைபர் தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த பல கணினிகள் மற்றும் பல இணையதளங்கள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சைபர் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் பாதிப்பைச் சரி செய்ய $7,500,000 (தோராயமாக ரூ.57 கோடி) பணம் கேட்டு … Read more

“நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும்!'' – பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள கே.கே.படேல் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையின் தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவராலும் மருத்துவக் கல்வியை எட்ட முடியும். பிரதமர் மோடி இந்த குறிக்கோள்களின் மூலமாக அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார். அதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு நிலநடுக்கத்தால் … Read more

எட்டுக்குடி முருகன் கோயில் தேரோட்டம்: சித்ரா பௌர்ணமி ஏற்பாடுகள் தீவிரம்!

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடியில் சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பதினெண் சித்தர்களுள் ஒருவரான வால்மீகி சித்தர் ஜீவ சமாதி அடைந்த தலமாக இது உள்ளது. இந்தக் கோயிலிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். எட்டுக்குடி முருகன் கோயில் தேரோட்டம் இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்றது. … Read more

“ராமர் ஒன்றும் கடவுள் அல்ல, வெறும் கதாபாத்திரம்தான்!" – பீகார் முன்னாள் முதல்வர் பேச்சு

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் `ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா’வின் தலைவரான மஞ்சி, அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ராமர் கடவுள் இல்லை. அவர் கதையில் வரும் ஒரு கதாபாத்திம். துளசிதாஸ், வால்மீகி ஆகியோரின் கருத்துகளை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம்தான் ராமர். ஜிதன் ராம் மஞ்ஜி துளசிதாஸ், வால்மீகி ஆகியோரின் எழுத்துக்களில் நல்ல கருத்துகள் நிறைந்திருக்கின்றன. நாங்கள் அவர்கள் இருவரையும் நம்புகிறோம்… ராமரை அல்ல. இந்த உலகத்தில் … Read more

`அரேஞ்சுடு கம் லவ்': `இதயத்தை திருடாதே' நாயகனுக்கும்; நியூஸ் ரீடர் கண்மணிக்கும் நிச்சயதார்த்தம்!

‘இதயத்தை திருடாதே’ தொடரில் நடித்துவரும் நவீனுக்கும், நியூஸ் ரீடர் கண்மணிக்கும் பெரியவர்கள் முன்னிலையில் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவருடைய குடும்பத்தினரும் கலந்து பேசி திருமணம் முடிவான நிலையில் இன்று இவர்களுடைய நிச்சயதார்த்த விழா நடைபெற்றிருக்கிறது. கலர்ஸ் தமிழ் சேனலின் ‘இதயத்தை திருடாதே’ தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் நடிகராக அறிமுகமானவர் நவீன். தற்போது அந்தத் தொடரின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நவீன். இவருக்கு அவரது ரசிகர்கள் ‘மக்கள் நாயகன்’ என்கிற பட்டத்தையும் அளித்திருக்கிறார்கள். “அவர் … Read more

"ரசனைக்கு முன்னுரிமை கொடுங்கள்" – லியனார்டோ டாவின்சி வாழ்க்கை சொல்லும் 5 பாடங்கள்!

ஆர்வத்தைப் பல விதங்களில் வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள் பனிக்கட்டி மீது சிலரால் எப்படி எளிதாக நடக்க முடிகிறது, இதய வால்வு எப்படித் தானாக மூடி மூடித் திறக்கிறது, மனிதர்கள் கொட்டாவி விடக் காரணம் என்ன என்று பல கேள்விகளை எழுப்பிக் கொண்டு அவற்றுக்கு விடை அளிக்க முயன்றவர் லியனார்டோ டாவின்சி. தன் வாழ்க்கை முழுவதும் ஆர்வம் பொங்கப் பல கேள்விகளை எழுப்பி அதற்கு அவர் அளித்த விடைகள் மற்றும் வெளிப்பாடுகள்தான் இன்று பல விதங்களில் நமக்குப் பயன்படுகின்றன. … Read more