K.G.F Chapter 2: தி ரியல் PAN இந்தியன் சினிமா… ராக்கி பாயின் எழுச்சி மாஸ் என்றால், ஆட்சி எப்படி?

கே.ஜி.எஃப்-பில் (K.G.F) கொடி ஏற்றிவிட்ட ராக்கி பாய்க்கு, அரசியல்வாதிகளும், மிச்சம் வைத்த பகையாளிகளும் கூட்டு சேர்ந்து தொல்லை கொடுக்கின்றனர். அவற்றை எப்படி ராக்கி பாய் சமாளித்தார் என்பதுதான் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’. கருடனைக் கொன்ற கையோடு ராக்கி பாய் கோலார் தங்க வயலில் தன் சிம்மாசனத்தை நிலைநாட்டுகிறார். ஏறிக்கொண்டிருக்கும் ஏணியின் கீழ் படிகள் ஆங்காங்கே சிக்கலை உண்டாக்கி நிலை தடுமாறச் செய்கின்றன. இறந்து போனதாய் நினைக்கும் ஒருவன் உயிர்ப்பெற்று வர, அதே களத்தில் புதிய வில்லன்களைச் சந்திக்க … Read more

“ராஜ் தாக்கரேவுக்கு பாஜக கொடுத்த பணியை செய்கிறார்!” – சரத் பவார் காட்டம்

மும்பையில் கடந்த இரண்டாம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, `மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கியை அகற்றவேண்டும், இல்லாவிட்டால் மசூதிக்கு வெளியில் ஒலி பெருக்கியை வைத்துக்கொண்டு அனுமான் பாடல்களை பாடுவோம்’ என்று எச்சரித்திருந்தார். அவர் எச்சரித்த உடன் மும்பையில் ஆங்காங்கே மசூதிக்கு வெளியில் ஒலி பெருக்கியை வைத்துக்கொண்டு ராஜ் தாக்கரே கட்சியினர் அனுமான் பாடல்களை பாடினர். அதோடு விடாமல் தாதரில் உள்ள சிவசேனா தலைமையகத்துக்கு வெளியிலும் அனுமான் … Read more

கோவை ரேஷன் கடையில், முதல்வர் ஸ்டாலின் படம் அருகே பிரதமர் மோடி படத்தை மாட்டிய அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவை வந்திருந்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பீஸ்ட் படம், இந்தி, தமிழ், முதல்வர், திராவிடம் என்று பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருந்தார். அண்ணாமலை அடிதடி… வீடியோ கால்… கோவை மாநகராட்சி முதல் கூட்ட களேபரங்கள்! இதையடுத்து, அவர் அவிநாசி சாலை கோல்டுவின்ஸ், துரைசாமி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். மத்திய அரசு வழங்கி வரும் இலவச அரிசி குறித்து பொது … Read more

`உன் வீடியோ இருக்கு; வீட்டுக்கு அனுப்பவா?’ – பல பெண்களை காதலித்து, மிரட்டி பணம் பறித்த இன்ஜினீயர்

சென்னையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி அவர். இன்ஸ்டாகிராம் மூலமாக திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த விஸ்வா என்னும் இளைஞருடன் நட்பாகியிருக்கிறார். ஒருகட்டத்தில் நட்பு காதலாக, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்ட விஷ்வா, ஒருகட்டத்தில் அதை அந்தப் பெண்ணுக்கு அனுப்பி அதிர வைத்துள்ளார். `எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது. கொடுக்கலைன்னா இந்த வீடியோவை உங்க வீட்டுக்கு அனுப்பிடுவேன்!’ என மிரட்ட, வேறு வழியில்லாமல் அந்தப் பெண்ணும் … Read more

தெலங்கானா: 10 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கிலிருந்து அக்பருதீன் ஒவைசி விடுவிப்பு!

தெலங்கானா மாநில  ஏ.ஐ.எம்.ஐ.எம்- கட்சியின் எம்.எல்.ஏ அக்பருதீன் ஒவைசி 2012 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்மல் நகரில் உரையாற்றியபோது இந்துக்களுக்கு எதிரான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒரு சமூகத்திற்கு எதிராக எரிச்சலூட்டும் மற்றும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடும் அமளிக்குப் பின் அக்பருதீன் ஒவைசி கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  அக்பருதீன் உவைசி  அதைத் தொடர்ந்து, குற்றப் … Read more

5 டன் காய்கறி; லட்சம் பேருக்கு விருந்து; மொய் எழுதும் மக்கள்; மதுரை மீனாட்சி திருக்கல்யாண வைபவம்!

சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெறுவதால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் கடந்த 5-ம் தேதி தொடங்கிய மதுரை மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் சித்திரை முதல் நாளான இன்று காலை 10.35 மணி முதல் 10.59-க்குள் நடைபெறுகிறது. இதை மக்கள் கண்டுகளிக்க வசதியாக கட்டணச் சீட்டு அனுமதியும் இலவச அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. நேரில் வர முடியாதவர்கள் தொலைக்காட்சி, யூ டியூப், பேஸ் புக் … Read more

"விஜய்க்கு சந்தனம்… எனக்கு ரத்தமான்னு கேட்டார் அஜித்!"- `திருப்பதி' நினைவுகள் பகிரும் பேரரசு

பேரரசு இயக்கத்தில் அஜித் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் ‘திருப்பதி’. ஆக்‌ஷன் சென்ட்டிமென்ட் கலந்த இப்படம் திரைக்கு வந்து பதினாறு வருடங்கள் (ஏப்ரல் 14) ஆனதையொட்டி படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் பேரரசு. “‘திருப்பதி’ திரைப்படம் வந்து பதினாறு வருஷம் ஆச்சுங்குறது நம்பவே முடியல. இந்தப் படத்துக்கு முன்னாடி விஜய்யை வைத்து ரெண்டு படங்கள் பண்ணியிருந்தேன். இதனாலயே விஜய் பட டைரக்டர்னு பேர் இருந்தது. இதனால, அடுத்து எந்த ஹீரோ வேணும்னாலும் நமக்கு படம் … Read more

"அப்பா, அம்மா இறந்தப்போகூட லீவு போடல" – 34 வருடத்தில் விடுப்பின்றி பணியாற்றிய போஸ்ட் மேன் சிவன்!

வாழ்க்கையை எவ்வளவு வாழ்ந்து முடிக்கிறோம் என்பதில் இல்லை ஆனந்தம். யாருக்காக வாழ்ந்து முடித்தோம் என்பதில் இருக்கிறது. அப்படி வாழ்ந்ததில் எதை பெற்றிருக்கிறோம் எதை இழந்திருக்கிறோம் என நினைத்தால் சிரிப்பு வருகிறதா, அழுகை வருகிறதா என்பதில் ஒளிந்திருக்கிறது வாழ்க்கைக்கான அர்த்தம். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊர் உலகம் கொண்டாடி தீர்த்த மனிதர் சிவன். குன்னூரைச் சேர்ந்த போஸ்ட் மேன். 34 ஆண்டுகள் தபால் துறையில் பணிபுரிந்தவர். எட்டு வருடங்கள் தினமும் 15 கிலோ மீட்டர்கள் காட்டுக்குள் நடந்தே சென்று … Read more

மாத ராசிபலன்

சித்திரை மாத ராசிபலன் – ஏப்ரல் 14 முதல் மே 14 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் வழிபாடுகள் குறித்து கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’முருகப்ரியன். மேஷ ராசி அன்பர்களே! பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். . குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். கணவன் – மனைவிக்கி … Read more