CSK vs SRH: வானம் தொட்டுப் போனா… தொடர்ந்து 4 தோல்விகள்; 2020-ன் ரிப்பீட் மோடில் சென்னை?

ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த முறை 33% பார்வையாளர்கள் குறைவாக இருக்கிறார்கள் என ஆரம்பக்கட்ட முடிவுகள் சொல்கின்றன. பத்து அணிகள், குறைவான காலத்துக்குள்ளேயே அடுத்த ஐபிஎல் தொடர்; அதிகமான லீக் போட்டிகள் என நிறைய காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டாலும், கண் எதிரே பளீரென தெரியும் காரணம் சென்னை, மும்பை அணிகளின் தொடர் தோல்விகள்தான். மற்ற அணிகளைவிட எப்போதும் சென்னை போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் அதிகம். ரசிகர்கள் எண்ணிகையிலும் சென்னையும், மும்பையும்தான் டாப்பர்கள். ஆனாலும் இப்படி இரண்டு அணிகளும் … Read more

ஜம்மு காஷ்மீர்: மசூதிக்குள் நாட்டுக்கெதிராக கோஷமிட்ட 13 பேர் கைது!

கடந்த 2019-ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக தொடர்ந்து மசூதிகள் மூடப்பட்ட இருந்தன. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் உள்ள பெரிய மசூதியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு பொதுமக்கள் தொழுகை செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆயிரகக்ணக்கானோர் இந்த தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென தொழுகை கூட்டத்தில் நாட்டுக்கெதிராக சிலர் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு சிறிது … Read more

“8 கோடி மக்களை விட ஆளுநருக்கு அதிக அதிகாரம் இருக்கிறதா?!” – கேரளாவில் கொதித்த ஸ்டாலின்

கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மாநாட்டில், சிறப்பு விருந்தினராகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். தனது உரையின் தொடக்கத்தில் மலையாளத்தில் பேசினார் ஸ்டாலின். “தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையேயான உறவு என்பது சங்க காலம் முதல் உள்ளது திராவிட கம்யூனிச உறவு என்பது 80 ஆண்டுகால வரலாறு கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக என் பெயர் ஸ்டாலின்” என்றார். பின்னர் மத்திய – மாநில உறவு குறித்து மேடையில் பேசிய ஸ்டாலின், “கம்யூனிஸ்ட் … Read more

தமிழக கேரள பக்தர்கள் வழிபடும் காளிமலை கோயில்: சித்ரா பெளர்ணமி அன்று ஒரு லட்சம் பொங்காலை!

கன்னியாகுமரி மாவட்ட கேரள எல்லையில் பத்துகாணி மலையில் அமைந்துள்ளது காளிமலை கோயில். மார்த்தாண்டத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது காளிமலை. இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி அன்று தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 16-ம் தேதி சித்ரா பெளர்ணமி அன்று காளிமலையில் பொங்காலை விழா நடைபெறுகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன், மண்டைக்காடு பகவதி அம்மன், கொல்லங்கோடு பத்திரகாளி … Read more

Yoga: தேசிய யோகா சாம்பியன்ஷிப்பில் அசத்திய தமிழக அணி!

தேசிய யோகா விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தேசிய அளவிலான இரண்டாவது சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டிகள் சமீபத்தில் நடந்தன. தமிழகம், மகாராஷ்டிரா ஹரியானா மற்றும் பஞ்சாப் முதலிய 19 மாநிலங்களை சேர்ந்த 169 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர்.இதில் தமிழக மகளிர் அணி இரண்டு தங்கம், ஐந்து வெள்ளி, நான்காம் இடத்திற்கான பரிசு ஒன்று என ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். இப்பெண்கள் அணியில் இடம்பெற்றுள்ள காயத்ரி, ரோகினி ஆகிய … Read more

டாணாக்காரன்: "போலீஸ் யூனிபார்ம் போட்டு நடிப்பேன்னு நினைச்சுக்கூட பாக்கல" – கார்த்திக் கண்ணன்

இயக்குநர் தமிழ் எடுத்திருக்கும் திரைப்படம் ‘டாணாக்கரன்’ ஓடிடியில் வெளியாகிருக்கும் பலரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது. விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமான முருகன் கேரக்டரில் கார்த்திக் கண்ணன் நடித்திருக்கிறார். படத்தில் நடித்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “படத்தோட ஷூட்டிங் வேலூர்ல நடந்தது. அதிகமான வெயில் இருந்த நேரத்துலதான் அங்கே இருந்தோம். காலையில இருந்து வெயில்ல ஓடிக்கிட்டே இருப்போம். நாங்கபட்ட எல்லா கஷ்டத்துக்கும் பலன் கிடைச்சிருக்கு. ஐ.டில வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அப்போ, வீக் … Read more

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை: சுகாதாரமற்ற கிணற்றுத் தண்ணீர் சர்ச்சையும் விளக்கமும்! #SpotVisit

சர்ச்சை: சென்னை ராயப்பேட்டை பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனையில், சுகாதாரம் இல்லாத கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது என்றும் இதனால், அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் சர்ச்சை கிளம்பியது. மருத்துவமனை கிணறு சென்னை நகர் பகுதியில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையும் ஒன்று. புகாரின் உண்மை நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று பார்த்தோம். மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அருகே அந்த கிணறு இருந்தது. நாம் … Read more

குடிப்பழக்கத்தை நிறுத்தச் சொன்னதால் விலகிச்செல்லும் காதலன்; அன்பைவிட மதுதான் முக்கியமா? #PennDiary61

நான் ஒருவரை காதலிக்கிறேன். ஆறு ஆண்டுகளாக நன்றாக சென்றுகொண்டிருந்த எங்கள் காதல், இப்போது மதுவால் பிரிந்துவிடுமோ என்று எண்ணும் அளவுக்கு, அவரது குடிப்பழக்கத்தால் எங்களுக்கு இடைவே இடைவெளி பெருகிவருகிறது. நான் கல்லூரியில் படித்தபோது, அவர் அப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்திருந்தார். இருவரும் ஒரே ஏரியா. அவர்தான் முதலில் காதலைச் சொன்னார். நான் ஒரு வருடம் அதை ஏற்கவில்லை. ஆனாலும் அவர் தன் காதலில் உறுதியுடன் இருந்து, இன்னும் வருடங்கள் ஆனாலும் எனக்காகக் காத்திருப்பதாகச் சொல்ல, ஒரு கட்டத்தில் … Read more

டெல்லி: நடிகை சோனம் கபூர் வீட்டில் ரூ.1.41 கோடி நகை, பணம் திருட்டு!

நடிகை சோனம் கபூர் திருமணம் செய்து கொண்டு டெல்லியில் உள்ள அம்ரிதா மார்க்கில் இருக்கும் வீட்டில் தனது கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் வசித்து வருகிறார். தற்போது சோனம் கபூர் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள இவரின் வீட்டில் இருந்த ரூ. 1.41 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். சோனம் கபூர் மாமியார் இத்திருட்டை கண்டுபிடித்தார். உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளனர். உடனே போலீஸார் விரைந்து செயல்பட்டு … Read more

பெரம்பலூர்: மரத்தடியில் மது அருந்திய 2 பேர் பலி; ஒருவர் கவலைக்கிடம்! – மின்னல் தாக்கியதில் பரிதாபம்

மழையில் மரத்தடியில் அமர்ந்து மதுகுடித்துக்கொண்டிருந்த போது இடிதாக்கியதில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பெரம்பலூர் பெரம்பலூர் கம்பன் தெருவைச் சேர்ந்த செல்லதுரை, கவுள்பாளையத்தை சேர்ந்த ராமர், வெங்கடேஷ் ஆகிய மூன்று பேரும் கோனேரிபாளையம் மலைப்பாதை அருகேயுள்ள மரத்தடியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, சிறிது நேரம் லோசான மழை பெய்துள்ளது. மழையின் இடையே பலத்த சத்ததுடன் இடி மின்னல் தாக்கியுள்ளது. இதில் செல்லதுரை மற்றும் ராமர் ஆகிய … Read more