BB Ultimate – 69: இறுதிக்கட்டத்தில் போட்டி; பைனலுக்குத் தயாரான போட்டியாளர்கள்; அந்த ஒருவர் யார்?

ஜூலியின் எலிமினேஷனைத் தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் நான்கு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். பாலா, நிரூப், தாமரை மற்றும் ரம்யா. இதில் வெற்றிக் கோப்பையை பறிக்கப் போகிறவர் யார்? அது பாலாதான் என்கிற அழுத்தமான கணிப்பு பரவலாக உலவினாலும் கடைசி நேரத்தில் எதுவும் மாறலாம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற மேஜிக், பார்வையாளர்கள் தரப்பிலிருந்துகூட நிகழலாம். ‘சக மனிதர்களை சகித்துக்கொள்வது, ஒருவரை நிறை, குறையோடு ஏற்றுக்கொள்வது, முகமூடி இல்லாமல் இயன்ற வரை நேர்மையாக இருப்பது, புறணி பேசாதது, போன்றவைதான் பிக் பாஸ் … Read more

“ஜனநாயகத்தின் நான்காவது தூண் தகர்க்கப்பட்டது!” – மத்திய பிரதேச விவகாரம் குறித்து ராகுல் காந்தி

மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ கேதர்நாத் சுக்லா, அவரின் மகன் குருதத் குறித்து ஆபாசமான கருத்துகளைக் கூறியதாக நாடகக் கலைஞர் நிரஜ் குந்தர் கைது செய்யப்பட்டார். இந்த கைது தொடர்பான செய்தி சேகரிப்பதற்காகப் பத்திரிகையாளர்கள் ஏப்ரல் 2-ம் தேதி காவல் நிலையம் சென்றபோது, பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு அரைநிர்வாணமாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ராகுல் காந்தி – காங்கிரஸ் மேலும், உள்ளாடையையும் கழட்டுமாறு வற்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அது தொடர்பான புகைப்படம் வியாழக்கிழமை வெளியாகி சமூக … Read more

H-1B விசா; மனைவி, குழந்தைகளுக்கு பணி அனுமதி வழங்குவதற்கான மசோதா அறிவிப்பு!

தற்போது H-1B, H-2A, H-2B மற்றும் H-3 ஆகிய விசாக்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல H-4 விசா வாங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அவர்கள் அங்கு பணி செய்வதற்கு வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணமான (EAD) படிவம் I-765க்கு விண்ணப்பித்து அனுமதி வாங்கி அவை செயலாக்கப்படும் வரை விண்ணப்பித்தவர்கள் பெரும் போராட்டங்களைச் சந்தித்துக் காத்திருக்கவேண்டும். ஆனால் இந்த புதிய மசோதா H-1B, H-2A, H-2B மற்றும் H-3 விசா வைத்திருப்பவர்களின் மனைவி மற்றும் … Read more

உதவி பேராசிரியர் மீதான பாலியல் புகார்: `கணவரை பழிவாங்க இப்படி செய்றாங்க’ – கர்ப்பிணி மனைவி கண்ணீர்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாமாண்டு பயிலக்கூடிய மாணவி ஒருவர் சமீபத்தில், தனது துறை உதவி பேராசிரியர் பிரேம் குமார் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தன்னை சாதி பெயரைக்கூறி திட்டியதாகவும் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். ஆசிரியரின் மனைவி இந்நிலையில் நேற்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பிரேம் குமாரின் மனைவி கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அவர், … Read more

Karnan: "காட்டுப்பேச்சியைக் கையெடுத்துக் கும்பிட்டேன்னு வடிவேலு சொன்னார்!"- மாரி செல்வராஜ்

‘கர்ணன்’ திரைப்படம் வந்து ஒரு வருடம் ஆனதையொட்டி இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ‘கர்ணன்’ வந்து ஒரு வருஷமாகுது, எதெல்லாம் ஞாபகத்துக்கு வருது? ” ‘கர்ணன்’ நினைச்சாலே கொரோனாதான் ஞாபகத்துக்கு வருது. பயங்கரமா செலிபிரேட் பண்ணிக் கொண்டாடக்கூடிய வெற்றியா ‘கர்ணன்’ இருந்தது. படம் ரிலீஸுக்கு முன்னாடி எத்தனை தியேட்டர்ல ஓப்பனிங் எப்படியிருக்கும், எத்தனை தியேட்டர்ஸ் கிடைக்கும், மக்கள் தியேட்டருக்கு வருவாங்களா இல்லையான்னு கேள்வி இருந்தது. பெரிய பயமும் இருந்தது. கொரோனா செகண்ட் அலை … Read more

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, ரெளடியிசம்… சட்ட ஒழுங்கை கையாள்வதில் சறுக்கியதா திமுக அரசு?!

`தி.மு.க ஆட்சிக்கு வந்தால், சட்ட ஒழுங்கு சீர்கெடும், கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும், மக்கள் அமைதியாக வாழமுடியாது’ என ஒரு எச்சரிக்கை வாசகம் போல, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் தவறாமல் சொல்லிவந்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பின்னர், தேர்தல் முடிவில் தி.மு.க வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சியில் அமர்ந்ததும், பொதுமக்களிடம் வரவேற்பைப்பெற்ற பல திட்டங்களைக் கொண்டுவந்தார். ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்னையை கட்டுப்படுத்துவதில் மொத்தமாக தி.மு.க அரசு கோட்டை விட்டுவிட்டதாகவே அ.தி.மு.க., பா.ஜ.க … Read more

22 பேர் ஆப்சென்ட்; 2 பேர் வெளிநடப்பு! – தலைமையை மீறி நகராட்சித் தலைவரானவரின் முதல் கூட்டம் எப்படி?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேனி – அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 19 வார்டுகளை திமுக கைப்பற்றியது. அதிமுக -7, அமமுக -2, காங்கிரஸ்-2, சுயேச்சை -2 மற்றும் பாஜக -1 ஆகிய இடங்களையும் பிடித்தன. இதையடுத்து நகர்மன்ற தலைவர் பதவியை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கிய நிலையில், தலைமையின் அறிவிப்பை மீறி திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் தங்கள் பதவிகளை … Read more

கோத்தபய, மகிந்த, நமல்… இலங்கை மக்களின் பஞ்சத்துக்கு வித்திட்ட ராஜபக்சே குடும்பப் பின்னணி

1948-ம் ஆண்டு பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றது இலங்கை. சுதந்திரத்துக்குப் பின்னர் அந்த நாடு, தற்போதுதான் மிக மோசமான நிலையைச் சந்தித்துவருகிறது. இலங்கை மக்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது இலங்கை. அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு எனத் திண்டாடி வருகிறார்கள் இலங்கை மக்கள். இலங்கை கடந்த 2019 தேர்தலில், சிங்கள மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது ராஜபக்சே குடும்பத்தின் இலங்கை பொதுசன முன்னணி கட்சி. ஈழப் … Read more

PBKS vs GT: கில் மாஸ்டர் கிளாஸ், திவேதியா மரண மாஸ்! பஞ்சாப் செய்த மிகப்பெரிய தவறு என்ன?

கில்லாடி கில்லின் அதிஅற்புத ஆட்டம், திவேதியாவின் இறுதிநேர இமாலய சிக்ஸர்கள் எல்லாம் சேர்ந்து குஜராத்துக்கு ஹாட்ரிக் வெற்றியைப் பரிசளித்துள்ளதோடு, வீழாத அணியாகவும் மகுடம் சூட்டியுள்ளது. பஞ்சாப்போ தங்களது பலமான பௌலிங்கிலும் கோட்டை விட்டிருக்கிறது. பேர்ஸ்டோவின் வரவு, ராஜபக்ஷவின் இடத்திற்கு ஆபத்தாக, ஃபினிஷர் மற்றும் பௌலர் என்னும் இருமுகனாக ஓடியன் ஸ்மித்தின் தலை தப்பியது. ஆனால், பஞ்சாப்பின் விதியும் அங்கேயே எழுதப்பட்டு விட்டது. குஜராத், கடந்த டிஎன்பிஎல் சீசனில் வெறித்தனமாக ரன் வேட்டையாடிய சாய் சுதர்சனோடு, தர்ஷனையும் கொண்டு … Read more