மணமகன் அணிந்திருந்த பணமாலை… பணத்தை உருவிய நண்பன் – வைரல் வீடியோ!

சமூக வலைதளத்தில் சில சுவாரஸ்யமான வீடியோக்கள் வலம் வருவதுண்டு. அதுபோல சமீபத்தில் தேதி, நேரம் குறிப்பிடப்படாத ஒரு வீடியோ, அதில் மண அலங்காரத்தில் மணமகனுக்கு பணமாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மணமகனின் நண்பன் ஒருவர் பணத்தை திருடும் காட்சி வைரலாக பரவி வருகிறது. View this post on Instagram A post shared by Meemlogy (@meemlogy) இந்த வீடியோவுக்கு நகைச்சுவையான பல கமெண்டுகள் குவிந்து வருகிறது. அந்த வீடியோவுக்கு  “Indian Money Heist” என்றும், “இது … Read more

`போனால் கடலோடு… தப்பினால் வேறெங்காவது போவோம் என வந்தோம்' -இலங்கையிலிருந்து அகதியாக வந்த பெண் வேதனை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால். அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக அதிகரித்து, சாமான்ய மக்கள் வாழ வழியின்றி மற்ற நாடுகளுக்கு கடல் வழியாக தப்பிச்சென்று அகதிகளாக நுழைந்து வருகின்றனர். அதன்படி ஏற்கெனவே இலங்கையிலிருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 16 நபர்கள் கடந்த மாதம் கள்ளப் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் அகதிகளாக நுழைந்தனர். அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் அகதிகள் நுழைவதை தடுத்து நிறுத்த இலங்கை கடற்படையின் அதி தீவிர … Read more

'ஒவ்வொரு நாளும் ஜோ பைடனுக்கு உதவுகிறார்' இந்தியரைப் புகழ்ந்த அமெரிக்கா; யாரிந்த வேதாந்த் படேல்?

இந்தியர்கள் உலகமுழுவதும் உள்ள நாடுகளில் முக்கிய பதவிகளில் கோலோச்சி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்தவகையில் அமெரிக்காவின் தலைமையகமாக இருக்கும் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர்கள் முக்கிய பணிகளில் பணியாற்றி வருகின்றனர். 2009 முதல் 2010 வரை ஒபாமா ஆட்சில் இருந்தபோது ப்ரியா சிங் என்பவர் வெள்ளை மாளிகை பத்திரிகையில் உதவியாளராக (White House Press Assistant) இருந்தார். அதன் பின் 2017 முதல் 2019 வரை டிரம்ப் ஆட்சில் ராஜ் ஷா என்பவர் … Read more

BB Ultimate -68: வெளியேறினாரா அபிராமி? ரம்யா இறுதிப் போட்டிக்குத் தகுதியானவரா!

அபிராமியின் நள்ளிரவு எலிமினேஷனைத் தொடர்ந்து ஜூலியும் எலிமினேட் ஆகியிருப்பதாகத் ஒரு தகவல் வந்திருக்கிறது. கடைசி வாரமாக இருந்தாலும்கூட மூச்சுத்திணறும் டாஸ்க்குகளை சரமாரியாக தந்து கொண்டிருக்கிறார் பிக் பாஸ். ரம்யாவிற்கு காலில் அடிபட்டது ஒருவகையில் அவருக்கு நல்லதாகப் போயிற்றுபோல. தனக்குப் பதிலாக வேறு யாரையாவது ஆட வைத்து காலை மெத்தையில் ஜாலியாக வைத்துக் கொண்டிருக்கிறார். எபிசோட் 68-ல் நடந்தது என்ன? அபிராமியின் எலிமினேஷனை நேற்றைய மெயின் எபிசோடில் காட்டவில்லை. குணா கமல் மாதிரி நாம்தான் ‘அபிராமி. அபிராமி’.. என்று … Read more

`புஷ்பா' அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ ஸ்டோரி! #HBDAlluArjun

புஷ்பா படத்தில் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பின் மூலமாக பேன் இந்தியா அளவில் ரசிகர்களை ஈர்த்த அல்லு அர்ஜுன் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி சுவராஸ்யமான தகவல்கள் இதோ. Allu Arjun அல்லு அர்ஜுன் 2002-ல் அறிமுகமான படம் Gangothri. 20 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார். அல்லு பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். அவருடைய 20 வயதில் ஹைதராபாத்துக்கு இடம் பெயர்வதற்கு முன்பு வரை அவர் வளர்ந்தது இங்குதான். அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்த். தயாரிப்பாளரான இவருக்கு … Read more

விகடன் செய்தி எதிரொலி: ஒரே நாளில் புதிதாக மாற்றப்பட்ட ஆபத்தான மின் கம்பங்கள்; மக்கள் நிம்மதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் உள்ள மூலனூர் பகுதியில் உள்ள மின் கம்பங்களை குறிப்பிட்டு `இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்… அச்சத்தில் மக்கள் – நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?!´என்னும் தலைப்பில் கடந்த மார்ச் 30-ம் தேதி விகடனில் செய்தி ஒன்றை விகடன் வெளியிட்டிருந்தது. இடிந்து விழும் நிலையில் மின் கம்பங்கள்… அச்சத்தில் மக்கள் – நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?! 6 மாத காலமாக மின்கம்பங்கள் சரிசெய்யாமலும் மக்களின் கோரிக்கை ஏற்கபடாமலும் இருந்த நிலையில், விகடனில் இந்த … Read more

சிவசேனா நிர்வாகியின் ரூ.5 கோடி வீடு, 40 சொத்துக்கள் பறிமுதல்! – வருமான வரித்துறை அதிரடி

மும்பை மாநகராட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிலைக்குழு தலைவராக இருந்தவர் யஷ்வந்த் ஜாதவ். சிவசேனாவைச் சேர்ந்த ஜாதவ் தான் பதவியில் இருந்த போது மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து கொண்டு பணிக்கான தொகையை அதிகரித்து காட்டியும், செலவு கணக்கை அதிகரித்து காட்டியும் மோசடி செய்து இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் ஜாதவ் வீட்டில் 3 நாள்கள் சோதனை நடத்தினர். அதோடு ஜாதவுக்கு நெருக்கமான மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் இந்த … Read more

சுருள் முடி; உருளும் கண்கள்; வாஞ்சையான சிரிப்பு; நித்யா மேனன் பிறந்ததின ஆல்பம்! #HBDNithyaMenen

180, வெப்பம், ஓகே கண்மணி, 24, மெர்சல் என தமிழில் அவர் நடித்த படங்கள் குறைவு எனினும் தமிழ் ரசிகர்களுக்கு எப்போதும் பேவரைட் நித்யா மேனன். நித்யா மேனனின் தாய்மொழி மலையாளம். ஆனால் அவரது பெற்றோர்கள் கர்நாடகாவில் செட்டில் ஆனதால், நித்யா படித்தது எல்லாம் கன்னடம் தான். மலையாளம் பேச மட்டுமே தெரியும். எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் டப் செய்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறார் நித்யா. மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியப் படங்களில் … Read more

ராஜ் பவனில் கிடப்பில் கிடக்கும் மசோதாக்கள்… தமிழக ஆளுநர் தாமதிப்பதன் பின்னணி என்ன?

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா, 2021-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மசோதா மீது எந்த பதிலும் அளிக்காமல் நான்கு மாதங்களாக ராஜ் பவனில் ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தார். அது தி.மு.க தரப்பை கொதிப்படைய வைத்தது. ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குரல் எழுப்பினர். அதைத் தொடர்ந்து, நீட் மசோதா குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு ஏற்பட்டது. ஸ்டாலின் … Read more

கோடுகளும் கொள்கைகளும்!

‘கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ’ என்பது பந்தபாசப்படப் பாடல். ‘கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்க வில்லையே! சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே!’ இது, கோட்டின் பெருமையை விளக்கும் மற்றொரு கருத்துள்ள பாடல். கொள்கைகளைக் கோடுகளாக்கி, அவற்றைத் தாண்டாமல் இருப்பேன் என்று மனதுக்குள் சபதமேற்று, அவ்வாறே உறுதி காப்பவர்களே உலகில் உயர்ந்த இடங்களைத் தொடுகின்றனர். பிறவியின் பயனை முழுதாக அனுபவிக்கின்றனர். இன்றைய சூழலில், பள்ளி, கல்லூரிகளில் … Read more