IPL 2022 : அதிவேக பந்துக்கு அவார்ட் தேவையா? ஐ.பி.எல் செய்யும் மாபெரும் தவறு!

கிரிக்கெட் விளையாட்டில் மேன் ஆஃப் தி மேட்ச் விருது முதல் முறையாக வழங்கப்பட்ட ஆண்டு 1975. 22 வீரர்கள் விளையாடும் போட்டியில் சிறப்பாக விளையாடும் ஒருவருக்கு மட்டும் விருது கொடுக்கப்பட்டும் வழக்கம் போய், எல்லோருக்கும் அவார்ட் கொடுக்கும் காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம். ஐ.பி.எல் போட்டி ஒவ்வொன்றிற்கும் இப்போது எட்டு விருதுகள் வரை கொடுக்கப்படுகிறது. அதில் பல விருதுகள் எதற்கென்றே தெரியாதவை. குறிப்பாக அப்போட்டியில் அதிவேகமாக டெலிவரியை வீசியவருக்குக் விருது கொடுக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் … Read more

நியூ ஜென் பாடலாசிரியர்களுக்கு!

கண்மணிகளா, அன்போடு தமிழ் சினிமா ரசிகன் எழுதும் கடிதம்!. பொன்மணிகளா நீங்க அங்கு சௌக்யமா நான் இங்கு சௌக்யமே! ’காணவில்லை!’ என்று சில சமீப தமிழ் படங்கள்ல பல விஷயங்கள சொல்லலாம் – திரைக்கதை,  யதார்த்தமான நடிப்பு, பாடல் காட்சிகல தாண்டி வரும் ஹீரோயின், இன்டர்வல தாண்டி வரும் நண்பன்…இப்படி அடுக்கிட்டே போயி  கோபுரம் கட்டினால், அதுல  கலசம் மாதிரி என்ன  இருக்கும்  தெரியுமா? நல்ல பாடல் வரிகள்! என்ன சொல்ல போகிறாய் ஒட்டகத்த கட்டினோம்… ஆனா, கொட்டும் … Read more

“2 ஆடு, 2 மாடு வைத்திருப்பவருக்கு எதுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு?" -அண்ணாமலையை சாடிய பிரேமலதா

நாட்டில் உயர்ந்து வரும் பெட்ரோல் – டீசல் மற்றும் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகே விருதுநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி நடத்தினார். ஆர்ப்பாட்டத்தின் போது அவர் பேசுகையில், “பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தற்போது … Read more

சேலம்: கை மாறிய பணம்; அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி! – அதிமுக நிர்வாகி மீது புகார்

சேலம் ஆத்தூர், கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். எம்.ஏ.,பி.எட்., பட்டதாரியான இவரிடம், அதேப் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., ஒன்றிய விவசாயி அணி செயலாளர் சுரேஷ் என்பவர், மத்திய கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், 4,70,000 ரூபாய் வாங்கியுள்ளாராம். ஒரு வருடமாகியும் சுரேஷ் வேலை தொடர்பாக எந்தவித முயற்சியும் எடுக்காததால், தான்கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார் கண்ணன். அதற்கு சுரேஷ் வீடு புகுந்து கொலை மிரட்டல் … Read more

LSG vs DC: லக்னோ வெற்றி; பிரித்வியின் ஒன்மேன் ஷோவும், சரிவில் தள்ளிய பண்ட், சர்ஃபராஷ் கூட்டணியும்!

15 வது ஐ.பி.எல் சீசனின் 15 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியிருந்தன. கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியிருக்கிறது. போட்டிக்கு முன்பாக பிரித்வி ஷா ஒரு பேட்டி கொடுத்திருதார். அதில், “நான் வலைப்பயிற்சியில் நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறேன். மீண்டும் ஃபார்முக்குத் திரும்ப ஒரே ஒரு போட்டி போதும்” எனப் பேசியிருந்தார். பிரித்வி ஷா சொன்ன … Read more

08/04/2022 இன்றைய ராசி பலன் | Daily Rasi Palan | Indraya Rasi Palan | Astrology | Sakthi Vikatan

இன்றைய ராசி பலன் – Indraya Rasi Palan – 08/04/2022 மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

ஸ்டாலின் பார்த்து வியந்த `டெல்லி மாடல்' பள்ளிகளுக்கு விதைபோட்ட அதிஷி மர்லேனா; யார் இவர்?

சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு முன்மாதிரியாகச் சொல்லப்படும் டெல்லி அரசுப் பள்ளிகள் செயல்படும் விதத்தை நேரில் சென்று பார்வையிட்டார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷுடன் சென்று, அப்பள்ளிகள் செயல்படும் விதத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர், `டெல்லி மாடல் அரசுப் பள்ளிகள் போல தமிழகத்திலும் அமைக்கப்படும்’ எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சரி, டெல்லி மாடல் அரசுப் பள்ளிகளில் இந்த மாற்றத்தை ஏற்படுத்திய மூளைக்குச் சொந்தக்காரர் யார் தெரியுமா? … Read more

சீனா உதவியுடன் இந்தியாவில் ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்? – தனியார் உளவுத்துறை நிறுவனம் தகவல்!

கடந்த எட்டு மாதங்களில் லடாக் அருகே உள்ள இந்திய மின்சார விநியோக மையங்களைச் சீன அரசின் உதவியில் இயங்கும் ஹேக்கர்கள் குறிவைத்துள்ளதாகத் தனியார் உளவுத்துறை நிறுவனமான `ரெக்கார்ட் ஃபியூச்சர்’ அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக `ரெக்கார்ட் ஃபியூச்சர்’ உளவுத்துறை நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “லடாக்கில் உள்ள சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லைப் பகுதியிலுள்ள சுமார் 7 மின்சாரக் கட்டமைப்புகளை ஹேக்கர்கள் சிலர் சீன அரசின் உதவியுடன் ஹேக் செய்து, சைபர் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.  … Read more

ஆந்திரா: மாற்றம்… விரிவாக்கம்… அமைச்சரவையைக் கலைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி!

கடந்த 2019-ம் ஆண்டு ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 150-தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து முதல்வராகப் பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி, இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது, ஒய்.எஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை மூன்று ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய அமைச்சர்களை நியமனம் செய்ய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். சமீபத்தில், டெல்லி சென்ற முதல்வர் ஜெகன் மோகன் … Read more