IPL 2022: பிரஷர் சேஸில் பொல்லார்டைவிட இரண்டு மடங்கு ஸ்ட்ரைக் ரேட் – மும்பையின் 19 வயது திலக் வர்மா!

விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு அஷ்வின் அவ்வளவு தீவிரமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை பார்த்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. தனக்கு அதிக சவால் கொடுக்கும் தன்னுடைய ஈகோவை சுரண்டி பார்க்கும் வீரர்களுக்கு எதிராக விக்கெட் வீழ்த்தும்போது மட்டுமே அஷ்வின் கொஞ்சம் கூடுதல் எமோஷனலோடு செலிப்ரேஷன்களில் ஈடுபடுவார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அஷ்வின் அப்படியான செலிப்ரேஷனில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அஷ்வினுக்கு எதிர்முனையில் நின்று அவருக்குச் சவாலளித்தது ஒரு மேக்ஸ்வெல்லோ கெய்லோ அல்ல. 19 வயது இளைஞன் திலக் வர்மா! மும்பை … Read more

டெண்டர் வழக்கு: “எஸ்.பி.வேலுமணிக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது!" – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த ஆண்டு நவம்பரில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் பின்னர் இந்த வழக்கில், சென்னை உயர் … Read more

இந்து அமைப்பினர் பேரணி… மசூதி அருகே வெடித்த கலவரம் – ராஜஸ்தானில் பதற்றம்!

ராஜஸ்தானில் இந்து நாட்காட்டியின் கீழ் நேற்று புத்தாண்டின் முதல் நாள் என்பதால் மாநிலத்தில் இந்துக்கள் விமரிசையாகக் கொண்டாடினர். அந்த வகையில், இருசக்கர வாகனங்களில் பேரணி சென்ற இந்து அமைப்பினர், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கரௌலி நகர் வழியே சென்றபோது அவர்களுக்கும் அங்கிருந்த முஸ்லிம் மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கலவரம் வெடித்திருக்கிறது. நிலைமை மோசமானதால் அந்தப் பகுதி முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று பேசிய ராஜஸ்தான் மாநில ஏ.டி.ஜி ஹவா சிங் … Read more

BB Ultimate 63: ரம்யாவிடம் தோற்ற பாலா; திறமையாகச் சமாளித்த நிரூப்… யாரெல்லாம் பைனலிஸ்ட்ஸ் ஆவாங்க?

அல்டிமேட் சீசன் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு போட்டியாளரின் மீதான தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் ஆகியவற்றைத் தாண்டி ஒட்டுமொத்தமாக இந்த சீசன் முழுவதும் நன்றாக விளையாடியவர் யார் என்பதை கறாராக பரிசிலீத்து இறுதி வாரத்தில் வாக்களிப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். இந்த வாரம் அபிராமி எலிமினேட் ஆகியிருப்பதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. பரிசுத் தொகைக்காக நடந்த டாஸ்க்கில் அபிராமியும் கலந்து கொண்டிருந்தால் ஆட்டம் சுவாரஸ்யமாகியிருக்கலாம். நாள் 62-ல் நடந்தது என்ன? வழக்கம் போல ஒரு … Read more

“வன்னியர் உள் இட ஒதுக்கீடு விஷயத்தில் திமுக துரோகம் இழைத்துவிட்டது!" – எடப்பாடி காட்டம்

சேலம், கொண்டலாம்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் நேற்று கோடைக்கால நீர்மோர்ப் பந்தலை அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முழுவதும் நிலைகுலைந்து போய்விட்டது. பெண்களுக்கான பாதுகாப்பு என்பது இங்கு இல்லை. நாளுக்குநாள் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். தமிழக அரசு இதை வேடிக்கை பார்த்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி கடந்த 2 ஆண்டுக் காலம் கொரோனா காரணமாக மக்கள் கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து வந்த நிலையில், … Read more

“இந்தியாவைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துங்கள்!" – பைடனுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய இந்து சேனா நபர்

டெல்லியில் கடந்த வெள்ளிக் கிழமையன்று சாணக்யபுரியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத நபரால், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில், “பைடன் அரசே இந்தியாவைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துங்கள். எங்களுக்கு நீங்கள் தேவையில்லை. சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுக்குதான் இந்தியா தேவை” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து டெல்லி காவல்துறை பைடனுக்கு எதிராக இவ்வாறு போஸ்டர் ஒட்டியதற்காக இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த பவன் குமார் என்பவரை நேற்று(சனிக்கிழமை) கைது செய்தது. இந்து … Read more

“திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்..!" – ஆயுதப்படைக் காவலர் மீது பட்டியலினப் பெண் புகார்

விருதுநகரைச் சேர்ந்த 23 வயது பட்டியல் வகுப்பு இளம்பெண் ஒருவர் சூலக்ரையிலுள்ள விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலர் மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்தார். இது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக அந்த இளம்பெண் அளித்த புகார் மனுவில், “விருதுநகர் ஆயுதப்படைக் காவலராக பணிபுரிந்து வரும் கண்ணன் என்பவருக்கும் எனக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம். என்னை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறி … Read more

தூத்துக்குடியில் ராஜாங்கம் நடத்தும் கீதாஜீவன் முதல் செக் வைக்கப்படும் ஆ.ராசா வரை…கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் அனிதா தரப்பு…‘‘தூத்துக்குடியில் கீதாஜீவனின் ராஜாங்கம்!’’ தூத்துக்குடி மாநகராட்சியின் நான்கு மண்டலக் குழுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களில், தலைமையால் அறிவிக்கப்பட்டவர்களே வடக்கு, கிழக்கு மண்டலத் தலைவர்களாகப் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டார்கள். அமைச்சர் கீதாஜீவனின் ‘திடீர்’ முடிவால் மேற்கு மண்டலத் தலைவராக அறிவிக்கப்பட்ட கனகராஜ், இரவோடு இரவாக மாற்றப்பட்டு அன்னலெட்சுமி அறிவிக்கப்பட்டு அவர் தேர்வும் செய்யப்பட்டார். தெற்கு மண்டலத் தலைவராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான சுயம்புக்கு எதிராக, தன் ஆதரவாளரான பாலகுருசாமியைப் போட்டி வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெறச் … Read more

`பண பேரம்; சொகுசு வசதி' – டிஜிபி-க்குப் புகார் கடிதம் எழுதிய ஊழியர் -விருதுநகர் கிளைச் சிறை சர்ச்சை!

`பணம் கொடுத்தால் எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் சிறையில் அனைத்து வசதிகளும் கிடைக்கும். இதன் மூலம் சிறை ஊழியர்கள் சிலர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். நடிகர் விக்னேஷ் உட்பட பலரிடம் பலகோடி ரூபாய் இரிடிய மோசடி செய்த ராம்பிரபு என்ற கைதிக்கு விருதுநகர் கிளைச்சிறையில் பல லட்சம் ரூபாய்க்கு பெற்றுக்கொண்டு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தனர்’ என்ற பகீர் குற்றச்சாட்டுகளுடன் டிஜிபி-க்கும், சிறைத்துறை உயரதிகாரிகளுக்கும் சிறை ஊழியர் ஒருவர் அனுப்பியுள்ள கடிதம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கடித நகல் … Read more

இந்திய மீனவர்கள் மீது இலங்கை மனித உரிமை மீறல்; வெளியுறவுத்துறை மீது தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு!

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதுடெல்லியில் உள்ள மனித உரிமை ஆணையத்திடம் கடந்த 23-ம் தேதி தேசிய மீனவர் சங்கம் பொருளாளர் தோமர், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னதம்பி ஆகியோர் புகார் மனு அளித்தனர். மனித உரிமைகள் ஆணையம் … Read more