இடம், பொருள், ஆவல்: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் இப்போது எப்படி இருக்கிறது? | VLOG

சென்னையின் அறிவுத் திருக்கோயில்களில் ஒன்றாக கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுகளில் ஒன்றாக உயிர்த்தெழுந்திருக்கிற இந்த நூலகம் கடந்த பத்தாண்டுகளில் பராமரிப்பின்றி சிதலமைடந்து பொலிவிழந்துபோனது. தற்போது மீண்டும் சுமார் 29 கோடி ரூபாய் செலவில் மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது. பிரதான சாலையில் இருந்து விலகி அகன்ற நுழைவாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் பிரமாண்டமாக விரிந்துகிடக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். முகப்பில் பசுமை போர்த்தியிருக்க, நுழைவாயிலுக்கு முன்னால் … Read more

Solar Storm: பூமியைத் தாக்க உள்ள சூரிய புயல்… பாதிக்கப்படுமா இன்டர்நெட் மற்றும் GPS சேவை?

‘Solar Storm’ எனப்படும் சூரிய புயல் நேரடியாக பூமியின் வளிமண்டலத்தை ஓரிரு நாள்களுக்குள், அதாவது இன்று (மார்ச் 31) தாக்க நேரிடும் என்று அமெரிக்காவின் நாசா (NASA) எச்சரித்துள்ளது. சூரியனின் மேற்பரப்பிலிருந்து மின்காந்த வெடிப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல்கள் வெளிப்படுவதால் இந்நிகழ்வு சூரியப்புயல் எனப்படுகிறது. குறிப்பாக பூமியில் இங்கிலாந்து பகுதி அருகே வலுவான சூரியப் புயல் மோதும் அபாயம் இருப்பதாக நாசா (NASA) எச்சரித்துள்ளது. இந்த நிகழ்வின் துல்லியமான நேரம் குறித்து சரியான தகவலில்லை. ஆனால், இதன் … Read more

70 போட்டிகளில் முதல் பரிசு வென்ற `சங்கீதா எக்ஸ்பிரஸ்' காளை மரணம்; இறுதிச் சடங்கு நடத்திய உரிமையாளர்!

வேலூர் மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவர் `சங்கீதா எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் 7 வயதுடைய காளை மாடு ஒன்றை வளர்த்து வந்தார். இந்தக் காளை வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் நடைபெற்ற மாடு விடும் விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளது. இதுவரை 70-க்கும் அதிகமான போட்டிகளில் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளது. சங்கீதா எக்ஸ்பிரஸ் காளை `இவை மீனவர்களின் நண்பன்!’ – ஆலிவர் ரெட்லி ஆமைகள் … Read more

How to: கோடைக்காலத்தில் கேசத்தை பராமரிப்பது எப்படி? | How to maintain hair during summer?

கோடை தொடங்கிவிட்டாலே சருமப் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். சருமத்துக்கு மட்டுமல்லாமல் கேசத்துக்கும் நாம் இந்தக் காலகட்டத்தில் கவனம் கொடுக்க வேண்டும். கோடைக்காலத்தில் கேசம் வறண்டு, பிளவுபட்டு, பொலிவிழந்து காணப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் அதை எதிர்கொண்டு பராமரிப்பதற்கான வழிமுறைகளை பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா கூறுகிறார். வசுந்தரா 1. ஹேர் மிஸ்ட் (Hair mist) கோடைக்காலங்களில் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போதோ, கடுமையான வெயிலினாலோ கேசம் வறண்டு, எண்ணெய்ப் பசை இல்லாமல் இருக்கும். இதைத் தவிர்க்க, … Read more

RCB vs KKR: ஆரஞ்சும் எங்களுதுதான், பர்ப்பிளும் எங்களுதுதான்… எப்படி எப்படியோ போராடி வென்ற ஆர்சிபி!

தோனியின் அணி என்பது சாதாரண ஸ்கோராக இருந்தாலும், இருபது ஓவர் வரை விளையாடி விட்டுத்தான் அந்த இலக்கை எட்டும். கோலியின் ஆர்சிபியின் (யார் கேப்டன் என்றாலும் அது கோலியின் அணி தான்) ஃபார்முலாவே வேறு. பெரிய டார்கெட்டை அடித்துவிட்டு எளிதாகத் தோற்கும். சின்ன டார்கெட்டை சேஸ் செய்ய முடியாமல் தோற்கும். தோற்பதற்காக ஃபார்முலா எழுதி விளையாடுகிறார்களோ என ஆர்சிபி ரசிகர்களே சிந்திக்கும் அளவு பல போட்டிகளில் அவர்களின் பெர்பாமன்ஸ் இருக்கும். RCB vs KKR கொல்கத்தா வெர்சஸ் … Read more

இன்றைய ராசி பலன் | 31/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட விவகாரம்: டெல்லி முதல்வர் வீட்டின் முன் பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்!

டெல்லி சட்டமன்ற கூட்டத்தின் போது `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பா.ஜ.க-வினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ” தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்கு செய்யுங்கள் என்று பா.ஜ.க-வினர் சொல்கிறார்கள். இந்த திரைப்படம் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என விரும்பினால் யூடியூபில் போடுங்கள். அனைவரும் இலவசமாகப் பார்ப்பார்கள். காஷ்மீர் பண்டிட்கள் பெயரில் சிலர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். நீங்கள் போஸ்டர் ஒட்டவேண்டும் … Read more

`விரைவில் சென்னைக்கு 2-வது விமான நிலையம்!' – மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தகவல்

இந்தியா முழுவதும் பெரு நகரங்களுக்கு விமானச் சேவையை விரிவுபடுத்தும் திட்டம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இந்தியா முழுவதும் பெரு நகரங்களுக்கு 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்காக ரூ.38,000 கோடி செலவில் டெல்லி ஜிவாரியிலும், அதே போல ரூ.17,000 கோடியில் மும்பையில் உள்ள நவி மும்பையிலும் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டுவருகிறது. விமான நிலையம் … Read more

தூத்துக்குடி: மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் தேர்வு; அமைச்சர்கள் அணிப் போட்டியால் சலசலப்பு!

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில், 44 தி.மு.க வேட்பாளர்களும், 6 அ.தி.மு.க வேட்பாளர்களும், 3 காங்கிரஸ் வேட்பாளர்களும், சி.பி.எம், சி.பி.ஐ, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஒரு வார்டிலும், 4 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். மறைமுகத் தேர்தலில், 20-வது வார்டு கவுன்சிலரான ஜெகன் மேயராகவும், 46-வது வார்டு கவுன்சிலரான ஜெனிட்டா துணை மேயராகவும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். மறைந்த முன்னாள் தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான … Read more