சென்னை: தடகள பயிற்சி அளிப்பதாக 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – எலக்ட்ரீசியன் கைது
சென்னை நெசப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுவன், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அந்தப்பகுதியில் உள்ள மைதானத்துக்கு விளையாட செல்வது வழக்கம். அப்போது தடகள பயிற்சி அளிப்பதாகக் கூறி மணப்பாக்கத்தைச் சேர்ந்த கோபிகண்ணன் (32) என்பவர் சிறுவனிடமும் அவனின் நண்பர்களிடமும் அறிமுகமாகியுள்ளார். அதன்பிறகு கோபி கண்ணன், பயிற்சி என்ற பெயரில் சிறுவன், அவனுடைய நண்பர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன், தன்னுடைய தந்தையிடம் விவரத்தைக் கூறினார். போக்சோ: “தமிழகத்தில் முதலில் … Read more