இறந்தும் வாழ்பவர்கள்: ஆதரவற்றவர்களுக்கு உயில் எழுதச் சொன்ன 5 திரைப் பிரபலங்களின் கதை!

பேரிடர்கள் நம்மிடையே பல கேள்விகளை எழுப்பும். அப்போது வங்கிக் கணக்கில் நிறைந்திருக்கும் பணம், சொத்துகள், அவற்றின் மதிப்புகள் எல்லாமும் கேள்விக்குறியாகிப் போகும். உதாரணத்துக்கு கொரோனா முதல் அலையின்போது பணம் என்பது பொருளற்றதாகிப் போனதை நாம் கண்கூடாகப் பார்த்தோம். உதவுவதற்காக நீண்ட முன்கள பணியாளர்களின் உதவிக்கரம் மட்டுமே நமக்கு ஆசுவாசம் அளித்தன. பணம், அதிகாரம் என பலவும் பயனற்றுப்போன பொழுதில், மனிதம் மட்டுமே ஆறுதலளித்தன. நோய்மையும், பேரிடர்களும் இதை நமக்கு உணர்த்திச் செல்கின்றன. பலரும் முகம் தெரியாத பலருக்கு … Read more

நெய்வேலி: “அரசியலுக்காக வரவில்லை; விவசாயிகள் பாதிக்கப்பட்டால் ஓடோடி வருவேன்!” – அன்புமணி

நெய்வேலி அனல்மின் நிலையத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறது என்.எல்.சி நிர்வாகம். அதற்கு அந்த பகுதி மக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், பா.ம.க சார்பில் அந்த மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் சிறுவரப்பூர் கிராமத்தில் நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்டு அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்ட பின்பு பேசிய எம்.பி அன்புமணி ராமதாஸ், “பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து இந்த மண்ணில் நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள். இந்த மண்ணைத் தவிர உங்களிடம் வேறு எதுவும் … Read more

PBKS vs RCB: டு ப்ளெஸ்ஸி அதிரடி வீண்… ஆர்சிபி தவறவிட்ட கேட்சால் கேமையே மாற்றிய ஓடியன் ஸ்மித்!

பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதிய போட்டி மும்பையிலுள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்தது. கிட்டத்தட்ட 2011-க்குப் பிறகு இந்த ஸ்டேடியத்தை ஐபிஎல்லுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் என்பது ஒரு ‘வாவ்’ செய்தி. இந்தப் போட்டி பெங்களூர் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சென்னை ரசிகர்களின் மனதுக்கும் நெருக்கமானது. காரணம் அவர்களின் எக்ஸ் எல்லைச்சாமி ஃபாஃப் டு ப்ளெஸ்ஸி இப்போது ஆர்சிபி-யின் கேப்டன். டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால், ‘நாங்கள் ஃபர்ஸ்ட் பௌலிங்’ என்று கையைத் … Read more

இன்றைய ராசி பலன் | 28/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

KGF -2: `பீஸ்ட் படமும் வரட்டும்; இது அரசியல் அல்ல சினிமா' – டிரைலர் வெளியீட்டில் பேசிய யஷ்!

பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இன்றி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் கேஜிஎப் கன்னட மொழி மட்டுமின்றி தமிழ் தெலுங்கு இந்தி என பல்வேறு இடங்களிலும் பரவலாக இந்த படம் குறித்த பேச்சுக்கள் ஆரம்பித்தன இதை எடுத்து கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே படம் குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. படமும் ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. படம் ஏப்ரல் 14 வெளியாகும் என முன்பே அறிவிப்பு வந்தது. சமீபத்தில் விஜய் … Read more

"என் மகள்,மனைவி இவர்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை; நடிப்பைவிட நினைத்தேன்; ஆனால்"- வருந்திய அமீர் கான்!

நடிகர் அமீர் கான் எப்போதும் தனது படங்கள் சரியாக வரவேண்டும் என்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். இதுவரை இரு முறை திருமணமாகி இருவரையும் விவாகரத்து செய்து விட்டுத் தனியாக வாழ்ந்து வருகிறார். அவரின் இரண்டாவது மனைவி கிரண் அவரது வீட்டிற்கு அருகில்தான் வசிக்கிறார். இந்நிலையில், அமீர் கான் தனது வாழ்க்கையில் தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் அதிக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று சமீபத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது தனது சொந்த … Read more

நீட்: “9,19,400-வது தரவரிசை பெற்றவருக்கு MBBS சீட்; பணமே காரணம்!" – ராமதாஸ் காட்டம்

இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக இருந்து வருகிறது நீட் (NEET). 2021 – 2022-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை முடிவுறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, தரவரிசை பட்டியல் அடிப்படையில் நடத்தப்படாமல், பல்வேறு இடங்களில் பணத்தை பெற்றுக் கொண்டே நிரப்பட்டிருப்பதாகவும்; தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த போதும்… படிக்க வசதி இல்லாத ஏழை, … Read more

DC vs MI: 'கேம் இன்னும் முடியல' மோடில் அக்சர், லலித்; சோக ஸ்மைலியுடன் பும்ரா, சாம்ஸ் மற்றும் மும்பை!

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்கப்பட்ட வேகத்துக்கு இப்படியானதொரு முடிவை நோக்கி இந்தப் போட்டி நகரும் என யாரும் யூகித்திருக்க முடியாது. ஐபிஎல்லின் முதல் போட்டியை சாமிக்கு எழுதிவிட்டு தோற்பது மும்பை இந்தியன்ஸ் வழக்கம் என்பதைத் தவிர டெல்லி எப்படி இதை வெல்லப்போகிறது என எல்லோருக்குள்ளும் நிறைய கேள்விகள் இருந்தன. அதிரடியாக ஆரம்பித்து, சீட்டுக்கட்டு போல் விக்கெட்டுக்களை இழந்து பின் வருபவர், செல்பவர் எல்லாம் அடித்து வெளுத்து, விசித்திரமான முடிவை நோக்கி நகர்ந்தது. இந்த சீசன் ஐபில்லில் … Read more

IPL 2022- PBKS Starting 11: புதிய கேப்டன், பலமான படை; இம்முறையாவது சோபிக்குமா பஞ்சாப்?

எந்த அணிக்கும் இல்லாத மிக அதிக தொகையோடு இந்தாண்டு மெகா ஏலத்தை எதிர்கொண்ட அணி பஞ்சாப். அதற்கேற்றவாறு டி20 ஃபார்மெர்டிற்கே உரிய மிக சிறந்த வீரர்களை கொண்ட பலம் பொருந்திய அணி ஒன்றையும் உருவாகியிருக்கிறது அந்த அணி நிர்வாகம். முந்தைய கேப்டன் ராகுலின் இடத்திற்குத் தற்போது புதிதாக வந்திருப்பவர் மயங்க் அகர்வால். சீனியர் வீரர் தவான் இருப்பினும் அகர்வாலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தலைமை பொறுப்பு பஞ்சாப் அணியின் எதிர்காலத்திற்கான சிறந்த முடிவு. புதுப்பொலிவுடன் காணப்படும் பஞ்சாப் கிங்ஸின் … Read more

புதுச்சேரி: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமானச் சேவை -ஹைதராபாத், பெங்களூருக்குப் பறக்கலாம்!

புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூர் நகரங்களுக்கு இன்று மதியம் முதல் மீண்டும் விமானச் சேவை தொடங்கியது. அதில் முதல் பயணியாக ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த துணை நிலை ஆளுநர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி வரவேற்றார். கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்கும் விமானச் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி ஸ்பைட்ஜெட் நிறுவனம் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானச் சேவையை தொடங்கியது. விமானத்திற்கு வரவேற்பு அதையடுத்து 2019-ம் ஆண்டு … Read more