வேலூர்: பாலியல் தொல்லை… 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி! – 55 வயது ஆசிரியர் சிறையிலடைப்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள திருவலம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 561 மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 25 இருபால் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளியில், கடந்த 9 ஆண்டுகளாக ஆங்கில பாட ஆசிரியராகப் பணியாற்றிவரும் முரளி கிருஷ்ணன் என்பவருக்கு 55 வயது ஆகிறது. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். அவர்கள் திருமணமாகி தங்கள் குழந்தைகளுடன் … Read more

பிரதமர் மோடியின் பஞ்சாப் விசிட்; சிறந்த பாதுகாப்பு வழங்கியதாக 14 காவலர்களுக்கு விருது!

கடந்த ஜனவரி மாதம் ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வது, அதில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, ஹுசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்வது, பிற கட்சிசார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பல்வேறு திட்டமிடல்களுடன் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றார். விமான நிலையத்திலிருந்து சாலை வழியாகப் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டருக்கு முன்னால், பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் … Read more

“முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றால் வாழ்த்துபவர்கள், பிரதமர் மோடியை விமர்சிக்கிறார்கள்!" – வானதி

பா.ஜ.கவின் தேசிய மகளிரணி கூட்டம் நேற்று புதுச்சேரியில் நடைப்பெற்றது. அனைத்து மாநில மற்றும் தேசிய மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தை துவக்கி வைத்த தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், “நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் பா.ஜ.க-வின் செல்வாக்கு நாடு முழுவதும் அதிகரித்திருப்பதும், நம் வேட்பாளர்களுக்கு பெண்களின் ஆதரவு இருப்பதும் தெளிவாகியிருக்கிறது. குறிப்பாக உத்தப்ரபிரதேச தேர்தல் முடிவுகள் பா.ஜ.க மீது பெண்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தை மாதிரியாகக் கொண்டு … Read more

"அந்த ஒரு விஷயம் பிரச்னையா இருந்தது; இருந்தாலும், நல்லா நடிச்சிருக்கோம்!"- விக்ரம் பிரபு

‘ டாணாக்காரன்’ கதையை டைரக்டர் சொன்னப்போ என்ன தோணுச்சு? “ஏதாவது புதுசா இருக்கணும்னு நினைச்சுதான் கதை கேட்பேன். புரொடியூசர் எஸ்.ஆர் பிரபு போன் பண்ணி கதையோட ஒன்லைன் சொன்னார். ரொம்ப நல்லாயிருந்தது. டைரக்டர் தமிழ்-ஐ மீட் பண்ணினேன். கதையை அழகாகச் சொன்னார். சொல்ற விஷயத்துலயே நிறைய இன்புட்ஸ் தெரிஞ்சது. அப்புறம்தான், போலீஸ் துறையில தமிழ் இருந்திருக்கார்னு தெரியவந்தது. படமா நல்லா எடுப்பார்னு நம்பிக்கையில படத்துல நடிச்சேன். படம் பார்த்தப்போதும் இதே பீல் கிடைச்சிருக்கு. முக்கியமான படமா இது … Read more

“ஜோ பைடனின் ஒரு வார்த்தை கூட உறுதியளிக்கும் வகையில் இல்லை..!" – உக்ரைன் எம்.பி

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று உக்ரைன் நாட்டின் முக்கிய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் சந்தித்துப் பேசினார். ஏற்கெனவே இந்த விஷயம் தொடர்பாக ஜோ பைடன் நேட்டோ கூட்டமைப்பிலும், ஐரோப்பிய யூனியன் படைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோ பைடன் போலந்தில் தஞ்சம் அடைந்திருக்கும் உக்ரைன் மாக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பைடன், “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.” என்று … Read more

பாலியல் வழக்கில் `விருதுநகர் மாடல்'… முதல்வர் ஸ்டாலினின் சட்டம் – ஒழுங்கு அணுகுமுறை எப்படி?

பாலியல் வன்கொடுமை: விருதுநகர் பாண்டியன் நகர்ப் பகுதியில் தன் தாயுடன் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை காட்டி ஹரிஹரன் பலமுறை தனிமையிலிருந்துள்ளார். இவர்கள் இருவரும் தனிமையிலிருந்ததை அந்த பெண்ணுக்குத் தெரியாமல் வீடியோப் பதிவு செய்திருக்கிறார் ஹரிஹரன். கைதுசெய்யப்பட்ட ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது ஹரிஹரனிடம் அந்த பெண் … Read more

600 ஏக்கர், 127 ரகங்கள்; ஆசியாவின் மிகப்பெரிய மாந்தோட்டத்தை உருவாக்கிய முகேஷ் அம்பானி; பின்னணி என்ன?

முகேஷ் அம்பானியின் இந்திய பன்னாட்டு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெறும் பெட்ரோலியம் மற்றும் தொலை தொடர்பில் மட்டும் சிறந்து விளங்கவில்லை. மாறாக அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய மாம்பழத்தோட்டத்தை சொந்தமாக வைத்து ஏற்றுமதி செய்து வருகிறது. சரி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஏன் மாம்பழ தோட்டத்தை உருவாக்க வேண்டும்? முகேஷ் அம்பானி விஞ்ஞானிகளுக்குச் சாவல் விடும் தேனீக்கள் மா விளைச்சலைக் கூட்டும் வீட்டு ஈக்கள்! இந்த கேள்விக்கான கதை 1997-ம் ஆண்டில் ஆரம்பிக்கிறது. ரிலையன்ஸ்க்கு … Read more

வார ராசிபலன் | இந்த வாரம் வெற்றி எந்த ராசிக்கு? | Weekly Rasi Palan | 27/03/2022 – 02/04/2022 |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். #Weeklyastrology | #Weeklyhoroscope | #Astrology #வாரராசிபலன்கள் #வார ராசிபலன் vaara rasi palan, vaara rasi palan in tamil, indha vaara rasi palangal, indha vaara rasi palan, vaara palan,vakra palngal, magara rasi,indha vaaram, vaara raasi palan, vaara raasipalan, vara rasi palan,vara rasipalan,rasi palangal,indhavaara rasi palan,vara … Read more

நாடாளுமன்றம்: “வெளிநடப்புகள், உண்ணாவிரதங்கள் இந்தியாவுக்கு நல்லதல்ல!" – தலைமைத் தேர்தல் ஆணையர்

நாடாளுமன்ற கூட்டத்தொடராக இருந்தாலும், சட்டமன்ற கூட்டத்தொடராக இருந்தாலும் விவாதங்களின்போது கூச்சல் போடுதல், வெளிநடப்பு செய்தல் போன்றவை எப்போதும் நிகழக்கூடிய ஒன்றாகத் தான் உள்ளது. இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரான சுஷில் சந்திரா, “சூடான வாதங்கள், விவாதங்கள் மற்றும் பேச்சுக்கள்தான் ஒரு வலுவான நாடாளுமன்றத்தின் அளவுகோலாகும். ஆனால் அடிக்கடி நிகழும் இடையூறுகள், வெளிநடப்புகள், உண்ணாவிரதங்கள் ஆகியவை நம்மைப் போன்ற வலுவான நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என ப்ரைம் பாயின்ட் அறக்கட்டளை நடத்திய சன்சத் ரத்னா விருது … Read more

`டாணாக்காரன்' பட நாயகி அஞ்சலி நாயர் – Special Photo Album!

ஜெய்பீம் படத்தில் போலீஸாக நடித்திருந்த இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடித்த ‘டாணாக்காரன்’ படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. காவலர் பயிற்சியில் இருக்கும் இளைஞராக விக்ரம் பிரபுவும் மலையாள குணச்சித்திர நடிகர் லால் பயிற்சியாளராகவும் நடித்திருக்கிறார்கள். காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் தமிழ் முன்னர் 10 ஆண்டுகள் காவலர் பணியில் இருந்தவர் என்பதால் படத்தின் நம்பகத்தன்மை ரசிகர்களை … Read more