RRR: அல்லூரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம்; படத்தில் வரும் இரு நண்பர்களின் நிஜ வரலாறு இதுதான்!

அல்லூரி சீதாராம ராஜூ 1922, ஆகஸ்டு மாதம் இரவு நேரம்: ஆந்திராவில் சின்டப்பள்ளி ஊரில் காவல் நிலையத்தில் திடீரென 500 பேர் நுழைகின்றனர். அனைவரையும் தாக்கிவிட்டு, அங்குள்ள துப்பாக்கிகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கிருஷ்ண தேவிப்பேட்டை, ராஜவோமாங்கி காவல் நிலையங்களிலும் இதே சம்பவம் நடக்கிறது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் யாரென்று நமக்கு வேண்டுமானாலும் குழப்பமாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள போலீஸாருக்கு ஒரு குழப்பமும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் கொள்ளையடித்த காவல் நிலையங்களில் … Read more

அரியலூர்: 170 ஏக்கர்… 100 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு!- மீட்கப்பட்டது ராஜேந்திர சோழன் வெட்டிய ஏரி

கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள வரலாற்றுத் தொன்மையான பொன்னேரியில், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்த 170 ஏக்கர் நிலத்தை அதிரடியாக மாவட்ட நிர்வாகம் மீட்டு எடுத்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரின் துணிச்சலான நடவடிக்கை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. கங்கை கொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பொன்னேரி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் மனிதர்களை வைத்து வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரியானது தெற்கு – வடக்கில் சுமார் 4 கிலோமீட்டர், கிழக்கு-மேற்கில் சுமார் 2 கிலோ மீட்டர் … Read more

ஒன்றரை ஆண்டு சிறைவாசம்… மீண்டும் ஜாமீன் மறுப்பு! – உமர் காலித் வழக்கில் என்ன நடக்கிறது?!

டெல்லி கலவரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஒரு தரப்பினரும், எதிர்த்து ஒரு தரப்பினரும் கடந்த 2020-ம் ஆண்டு டெல்லி வடகிழக்கு பகுதியில் ஊர்வலம் நடத்தினர். அந்த சமயத்தில் இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் பெரிதாகி கலவரமாக மாறியது. அந்த பகுதிகளிலிருந்த வீடுகள், கடைகள், வாகனங்கள் எரிக்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் துப்பாக்கியால் தாக்கினர். டெல்லி நகரமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. எங்குப் பார்த்தாலும் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது. டெல்லி கலவரம் மூன்று நாள்கள் … Read more

''அகதிகள் சிறையில் அடைக்கப்படவில்லை; சீமான் குழப்பம் செய்கிறார்!'' – சொல்கிறார் ராஜீவ் காந்தி

உச்சகட்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் இலங்கையிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே பல பத்தாண்டுகளாக நீடித்துவந்த போர்ச்சூழலுக்கும் பதற்றநிலைக்கும் 2009-ம் ஆண்டு இறுதிப்போர் முற்றுப்புள்ளி வைத்தது. ஆனாலும் இலங்கையில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரம் முள்கம்பிகளால் வேலியிடப்பட்ட முகாம்களுக்குள்ளேயே முடங்கிப்போய்விட்டது! இந்த நிலையில், நாட்டை ஆண்டுவரும் சிங்களப் பேரினவாத அரசுகளின் முதிர்ச்சியற்ற அரசியல் அணுகுமுறை குளறுபடிகளால் இன்று அந்நாடு வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துவருகிறது. அத்தியாவசிய … Read more

CSK vs KKR: ஜடேஜா vs ஸ்ரேயாஸ் – புதிய அணி, புதிய கேப்டன்கள், புதிய சவால்கள்… வெல்லப்போவது யார்?

ஐபிஎல் 15 வது சீசன் இன்று தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவிருக்கின்றன. இரண்டு அணிகளுமே கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் மோதியவை என்பதால் இந்தப் போட்டிக்கு பயங்கர எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இரு அணிகளின் பலம் பலவீனம் என்ன? எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது? ஒரு சிறு அலசல் இங்கே… கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் மோதிய இரண்டு அணிகள் என்றாலும் அதே அணிகள் இப்போது இல்லை. … Read more

“ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாகத் தான் எரிபொருள் விலை உயர்கிறது” – நிதின் கட்கரி

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தொடங்கிச் சரியாக ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. ஆனால் இந்தப் போர், இன்னும் முடியாமல் தொடர்கிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பலகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை போர் நிறுத்துவதாக எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. உக்ரைன் போர் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கட்கரி நேற்று நடைபெற்ற உச்சி மாநாட்டில், இது பற்றிப் பேசியதாவது, “இந்தியாவில், 80 … Read more

`எங்களுக்கும் வேற வழி தெரியல!' – பண்டலுக்கு ₹50 உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில தீப்பெட்டி உற்பத்திதான் முக்கியமான தொழிலாக உள்ளது. தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 320 பகுதி நேர இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 2,000-க்கும் தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு … Read more

வேலூர்: இரவில் திடீரென வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! – தந்தை, மகள் பலியான சோகம்

வேலூர், சின்ன அல்லாபுரம் பலராமன் தெருவைச் சேர்ந்தவர் துரைவர்மா. இவர், போட்டோ ஸ்டுடியோ வைத்து தொழில் செய்கிறார். இவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில்,13 வயதாகும் மகள் மோகன ப்ரீத்தியுடன் துரைவர்மா வசித்துவந்தார். சமீபத்தில் புதிதாக எலெக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியிருக்கிறார் அவர். சிறிய வீடு என்பதால் வெளியில் நிற்க வைத்து, ஸ்கூட்டரின் பேட்டரிக்கு சார்ஜ் போடும் வசதியில்லை. உயிரிழந்த தந்தை, மகள் இதனால், வீட்டு ஹாலை ஒட்டிய முன்புறப் பகுதியில் … Read more

ஏ.ஆர்.ரஹ்மானின் துபாய் ஸ்டூடியோவில் முதல்வர் ஸ்டாலின்… சந்திப்பில் என்ன நடந்தது?

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு நடைபெறும் கண்காட்சியில் பங்குகொண்டு அதன் மூலமாக அந்நிய முதலீடுகளை ஈர்க்கவே அவர் அங்கே பயணப்பட்டிருக்கிறார். அரசு முறை சந்திப்பாக அங்கிருக்கும் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் உரையாடினார். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் முதல்வர் ஸ்டாலின் இதைத் தொடர்ந்து எக்ஸ்போவில் தமிழ்நாட்டு அரங்கைத் திறந்துவைக்க வந்த முதல்வர் ஸ்டாலினைத் தனிப்பட்ட முறையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்தார். அங்கே ரஹ்மான் கட்டியிருக்கும் புது ஸ்டூடியோவிற்கு … Read more

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு விமர்சனம்: எடுத்துக் கொண்ட கதை பேசப்படவேண்டியது, ஆனால் சொன்ன விதம்?

ஒரு பெண் தான் நினைத்த விஷயத்தை நினைத்த மாத்திரத்தில் செய்ய இந்தச் சமூகமும், அவளின் ஆழ்மனதும் சம்மதிக்கின்றனவா என்பதைச் சொல்கிறது ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’. 80 நிமிடங்கள் கொண்ட இந்தத் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது. அக்‌ஷரா ஹாசன் கர்னாடக சங்கீதத்தில் திளைத்து விளங்கும் ஆச்சாரமானதொரு குடும்பத்தில் வளர்கிறார் அக்‌ஷரா ஹாஸன். அக்‌ஷராவின் தாயாரான மால்குடி சுபாவுக்கோ அக்‌ஷராவின் பாட்டி உஷா உதுப் போலவே, அக்‌ஷராவையும் பிரபலமான பாடகியாக்கிவிட வேண்டும் என்பது பெருங்கனவு. அதற்கு எல்லா … Read more