"வலிகளைச் சொல்லும் 'தி காஷ்மீர் பைல்ஸ்' பிரசாரப் படமா?"- யாமி கௌதம் கேள்வி

சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தைக் குறித்து யாமி கௌதம் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். “பெரும்பாலான மக்களின் சென்டிமென்ட் பக்கம் நான் நிற்க விரும்புகிறேன். எதை நான் கேட்டேனோ, எதை நம்புகிறேனோ அதன் பக்கம். (இந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும்) உணர்ச்சியின் வலி, விவாதங்கள், சார்புகள் இவற்றுக்கு அப்பாற்பட்டவை.” யாமி கௌதம் யாமி கௌதம் கணவர் இயக்குநர் ஆதித்யா தர், காஷ்மீரி பண்டிட் வகுப்பைச் சேர்ந்தவர். இந்நிலையில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ … Read more

சன் குடும்ப விருதுகளில் புறக்கணிப்பு… மீண்டும் விஜய் டிவிக்குத் திரும்புகிறாரா அஸீம்?

சன் டிவி சீரியல்களில் சிறந்தவற்றிற்கு வழங்கப்படும் ’சன் குடும்ப’ விருதுகள் வரும் மார்ச் 30ம் தேதி சென்னை தாம்பரத்திலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடக்க இருக்கிறது. அநேகமாக தமிழ்ப் புத்தாண்டையொட்டி நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகுமெனத் தெரிகிறது. இந்நிலையில் இந்த விருதுகளுக்கான பிரிவில் ஃபேவரைட் ஹீரோவுக்கான விருதின் நாமினேஷன் பட்டியலில் கூட தன் பெயர் இல்லாததால் ’பூவே உனக்காக’ ஹீரோ அஸீம் கடும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் சன் டிவியில்தான் தன் கரியரைத் துவக்கியவர் அஸீம். ‘பிரியமானவள்’ … Read more

How to: மாடித்தோட்ட குரோ பேக் தேர்ந்தெடுப்பது எப்படி? | How to choose grow bag for terrace garden?

மாடித் தோட்டங்களில் செடிகளை வளர்ப்பதற்குத் தற்போது பலரும் பயன்படுத்துவது குரோ பேக் (grow bag) எனப்படும் செடி வளர்ப்பு பைகள்தான். பல்வேறு அளவுகளில் செடிகளுக்கு ஏற்றவாறு இந்தப் பைகள் கிடைப்பதாலும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருப்பதாலும் பலரும் இதனை பயன்படுத்துகின்றனர். கீரை வளர்ப்புக்கு, காய்கறிகள், பூச்செடிகள் வளர்ப்பதற்கு எனத் தனித் தனியான அளவுகளில் இந்தப் பைகள் கிடைக்கின்றன. ஆனாலும் பலருக்கும் இந்த பைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் சந்தேகம் இருக்கிறது. எந்தெந்த செடிகளுக்கு எப்படி பைகளைத் தேர்ந்தெடுப்பது என்பது … Read more

நாவலூர் அரசுக் குடியிருப்பு; அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் மக்கள் – கவனிக்குமா அரசு இயந்திரம்?

சென்னை தாம்பரத்தை அடுத்த நாவலூர் அரசுக் குடியிருப்பில் மொத்தம் 2,040 வீடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். நாவலூர் செரபணஞ்சேரி பஞ்சாயத்துக் கட்டுப்பாட்டுக்குள் வரும் இந்த குடியிருப்பில் சென்னை எம்.ஜி.ஆர் காலனி, அரும்பாக்கம், பாடிக்குப்பம், அண்ணா நகர், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் வசித்து வந்த மக்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுக் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். சென்னைக்கு வெளியே நாவலூர் குடியிருப்பு இருப்பதால் இங்கு வசிக்கும் மக்கள் பெரியளவில் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். நாவலூர் … Read more

கோலிவுட் ஸ்பைடர்: நண்பர்களுக்காக விஜய் எடுத்த முடிவு; பிரமாண்டத்துக்குத் தயாராகும் 'வாடிவாசல்!'

* தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள படம் ‘வாடிவாசல்’. சமீபத்தில் ஈசிஆரில் இரண்டு நாட்கள் அதன் டெஸ்ட் ஷூட் நடந்தது. ஜல்லிக்கட்டுக் காளைகள் திமிறிக்கொண்டு வர, அதை மாடுபிடி வீர்களுடன் சேர்ந்து சூர்யா அடக்கும் காட்சிகள் டெஸ்ட் ஷூட் செய்யப்பட்டன. அந்த காட்சிகள் எடுத்த வரையிலும் திருப்தி என்கிறார்கள். ஆகையால், தென்மாவட்ட கதைக்கள ஏரியாவை, சென்னையிலேயே செட் போட்டு படமாக்கத் திட்டமிட்டு வருகின்றனராம். இன்னொரு விசேஷம், போனி கபூரோடு சேர்ந்து ‘வலிமை’யை தயாரித்த … Read more

`உ.பி-யால் முடிகிறது; ஏன் தமிழகத்தில் முடியவில்லை?' – கேள்வி எழுப்பும் கரும்பு விவசாயிகள்

தமிழக சட்டமன்றத்தில் நடப்பு ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் கடந்த மார்ச் 19-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் இதனால் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு 2,950 ரூபாய் விலை கிடைக்கும் எனவும் தெரிவித்தார். … Read more

“டாஸ்மாக் கொண்டு வராதீர்கள்" – கைக்குழந்தையுடன் காலில் விழுந்து அழுத பெண்… உறுதியளித்த ஆட்சியர்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் உள்ள அண்ணாநகரில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், தொண்டி பகுதியிலிருக்கும் டாஸ்மாக் கடையைத் தூய்மைப் பணியாளர்கள் குடியிருந்து வரும் அண்ணா நகருக்கு இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக அங்குள்ள ஒரு வீட்டை டாஸ்மாக் கடையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்சியர் சங்கர்லால் குமாவத் இந்த நிலையில், திருவாடானை அண்ணா நகரில் புதிதாகக் … Read more

'அவர் எங்கிருந்தாலும் அரசன்தான்!' – கேப்டன் தோனிக்கு ஓய்வுண்டு, ஆனால் தலைவனுக்கு இல்லை!

கோப்பைகளின் கோமகன், ஐபிஎல் கேப்டன்களின் பிதாமகன், கேப்டன் பணிக்கு பிரியாவிடை கொடுத்து ஓய்வுபெற்றுள்ளார். ஐந்தாவது கோப்பையை தோனி வெல்வார்; தனது போட்டியாளர் மும்பையின் சாதனையை சிஎஸ்கே சமமாக்கும்; கோப்பை, கொண்டாட்டங்களுடன் தோனியின் பிரிவு உபச்சாரம் நடக்கும் என்ற கனவிலிருந்த ரசிகர்களுக்கு, இடியாக வந்து இறங்கியுள்ளது தோனி தன் கேப்டன் பதவியை, ஜடேஜாவிடம் அளித்துள்ள துக்க செய்தி. ஐபிஎல் அதிகாரத்தில் 12 சீசன்களில் சிஎஸ்கே ஆடிவிட்டது. அதில், 11 முறை பிளேஆஃபிற்கு முன்னேறி வேறு எந்த அணியும் செய்யாத … Read more

`பல்கலைக்கழகத்தில் கட்டணமில்லா சீட் சரிதான்; ஆனால்..!' – அரசுக்கு கோரிக்கை வைக்கும் திருநர் சமூகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு ஓர் கட்டணமில்லா இடம் ஒதுக்கப்படும் என்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரும் கல்வியாண்டு முதல் அதாவது 2022-2023-ம் கல்வியாண்டிலேயே அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகமானது 2010-ம் ஆண்டு முதல் இலவசக் கல்வித்திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்பில் இணைந்து படிக்க முடிகிறது. அந்த வகையில் … Read more

"சாவுற வரைக்குமா சார்?" – 'இப்போது உயிரோடிருக்கிறேன்' நாவல் வாசிப்பனுபவம்

ஐங்கரநேசன்“வலி நிறைந்த இந்தப் பயணத்தில் நீங்கள் எப்படி வாழ்வை நடத்துகிறீர்கள்.வாழ்வே வலி நிறைந்ததுதான் என்று புரிந்து கொண்டால் எந்தப் பயணமும் சிரமமில்லை” கல்வி என்பது மட்டும் ஏழைகளுக்கு எட்டாக்கனியல்ல.. மருத்துவமும் தான். நடுத்தர வர்க்கத்தினருக்கு வரும் நோய் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடுவதை பார்த்திருக்கிறோம். உடல் ஒன்றையே முதலீடாய் வைத்திருக்கும் ஏழைகளுக்கு உடல் நலமின்மை, சிகிச்சை எல்லாம் பெரும் நெருக்கடிகள். அவசர சிகிச்சை அறையின் வெளியில் இருப்போரை பார்த்திருக்கிறீர்களா.. துக்கம் தோய்ந்த முகத்துடன் ஒருவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்.. … Read more