“சீனா ரஷ்யாவுக்கு உதவினால்..!" – எச்சரிக்கும் ஜோ பைடன்

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7ன் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி-7 அமைப்பின் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். ஜி-7 நாடுகளின் தலைவர்களுடனான உரையாடல்கள் முடிவடைந்த பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு சீனா உதவிகள் வழங்குவதாக வெளியான செய்திகள் குறித்து … Read more

`கடன் தர மறுத்த பெண் குத்திக்கொலை!' – 9 ஆண்டுகளுக்குப் பிறகு லாரி டிரைவருக்கு 3 ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் மாவட்டம் வாணி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் அப்துல்கபூர். கோழிக்கறிக்கடை நடத்திவரும் இவரின் மனைவி பெயர் சபிதாபானு (52). இவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம், சிவஞானபுரம் புதுப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவரான முகமது அரபுதீன் என்ற ரபீக் (33), கடந்த 2013 ஜூன் மாதம் தன் பெரியம்மா உறவு முறையுள்ள சபிதாபானுவிடம் தொழில் தொடங்க பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு சபினாபானு மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. … Read more

`ஒன்லி வெஜ் முதல் பயோ கழிவறை வரை!' – அரசுப் பேருந்துகளை பயணவழி உணவகங்களில் நிறுத்த புதிய நிபந்தனைகள்

அரசுப் பேருந்துகளில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள் பலர், பயணத்தின்போது சாப்பிடுவதற்காக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களில், உணவு, கழிப்பிட வசதி, விலை போன்றவற்றைக் குறித்துப் பல குற்றச்சாட்டுகள் முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்தப்படும் இதுபோன்ற உணவகங்களுக்கான புதிய நிபந்தனைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. என்னென்ன நிபந்தனைகள் என்பதைப் பின்வருமாறு காணலாம், அரசுப் பேருந்து உணவகங்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட … Read more

30 நாள்களாக ரஷ்யாவைத் தாக்குப் பிடிக்கும் உக்ரைன்! – என்னென்ன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது?

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 30-வது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் நோக்கில் தீவிரமான தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது ரஷ்யா. வலிமையான ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து, விட்டுக் கொடுக்காமல் சண்டையிட்டுவருகிறது உக்ரைன். `மிகக் குறைந்த அளவிலேயே படை பலமும், ஆயுத பலமும் கொண்ட உக்ரைனை, வலிமை பெற்ற ரஷ்யப் படைகளால் இத்தனை நாள்களுக்கு பின்பும் கட்டுக்குள் கொண்டு வர முடியாதது ஏன்?’ என்ற விவாதங்கள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன. உக்ரைன் – ரஷ்யா … Read more

நட்சத்திர பலன்கள்: மார்ச் 25 முதல் 31 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

இன்றைய ராசி பலன் | 25/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam Source link

மாணவியிடம் பேசியதால் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டிய ஆசிரியர்? – ரயில் முன் பாய்ந்த மாணவர்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மோடமங்கலம் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இதில், சுமார் 400 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பாலா என்ற மாணவன் பதினோராம் வகுப்பு படித்துவந்தார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற அந்த மாணவன், மாணவி ஒருவரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்டு ஆத்திரமடைந்த பள்ளியின் தாவரவியல் ஆசிரியை தெய்வம்மாள் என்பவர், அந்த மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவன் … Read more

அணை விவகாரம்: தமிழக அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய கர்நாடகா!

காவிரி நதிநீர் பங்கீடு விஷயத்தில் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்னை நிலவி வருகிறது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேக்கே தாட்டூவில் அணைக் கட்டுவதற்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த அந்த தீர்மானத்தில், “நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவைப் பெறாமல் மத்திய அரசின் எந்தவித அனுமதியையும் பெறாமல் தன்னிச்சையாக காவிரி … Read more

The Kashmir Files: “யூடியூபில் போடுங்கள், எல்லோரும் இலவசமாகப் பார்ப்பார்கள்!" – கெஜ்ரிவால் தாக்கு

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் இயக்கத்தில் கடந்த 11-ம் தேதி வெளியாகி, திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ். காஷ்மீரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்துக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர வந்துகொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தப் படத்துக்குக் கேளிக்கை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது டெல்லியில் நடந்துவரும் சட்டசபைக் கூட்டத் தொடரில் பா.ஜ.க `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு டெல்லியிலும் வரிவிலக்கு அளிக்க … Read more

ஜெயலலிதா மரணம்: “எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாமே தெரியும்..!" – புகழேந்தி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கக் கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஆணைய விசாரணையில் ஓ.பி.எஸ் அளித்த பதில்கள் தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டது வருகிறது. எடப்பாடி பழனிசாமி இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் வா.புகழேந்தி இது … Read more