“17 வயது கூட நிரம்பாத மாணவிகளின் கையில் மதுபாட்டில்கள்… எங்கே செல்கிறது தமிழகம்!" – ராமதாஸ் வேதனை

மது அருந்தும் பள்ளி மாணவிகள்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பொன்விளைந்த களத்தூர் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சிலர் ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்தில் மது அருந்தும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளி மாணவர்களின் இந்த செயல் பெற்றோர்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்தும் மாணவிகள் பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தில் மது அருந்திய சம்பவம் தொடர்பாகப் பள்ளிக் … Read more

சமந்தா, பிரபாஸுடன் என்ன பிரச்னை – விளக்கும் பூஜா ஹெக்டே!

பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே தன் மீதான வதந்திக்கு நேரடியாக விளக்கம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். பூஜாவுக்கும் பிரபாஸ்க்கும் இடையே மோதல், சமந்தாவுடன் நெருக்கடி என வந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அவர் பேசியுள்ள நேர்காணல் அமைந்திருக்கிறது. செய்தி இணையத்தளம் ஒன்றிற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “பாஸிட்டிவ் செய்திகளைவிட நெகட்டிவ் செய்திகள் அதிகமாக விற்பனையாகின்றன. அவை உண்மையாக இல்லாத போதும் மக்கள் அதைப் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் ஆர்வமாக இருக்கின்றனர்”. சமந்தா மேலும், … Read more

“என்ன நடந்தாலும் சரி… சண்டையின்றி சரணடைய மாட்டேன்!" – இம்ரான் கான் திட்டவட்டம்

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. இந்த நிலையில், `இம்ரான் கான் சரியாக அரசாங்கத்தை வழிநடத்தவில்லை. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என சொந்தக் கட்சியினர் தொடங்கி அந்த நாட்டு ராணுவத்தினர் வரை பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதையொட்டி, வருகிற மார்ச் 25-ம் தேதி(நாளை) இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. இதனால் தனது இம்ரான் கானுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இம்ரான் கான் இந்த நிலையில், இம்ரான் கான் … Read more

`அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!' – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.  மழை கோப்புப் படம் இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் 25, 27 மற்றும் 28 ஆகிய … Read more

எடப்பாடி முன்னாள் உதவியாளர் பணமோசடி வழக்கு; 29-ம் தேதி வழக்கை விசாரிக்கிறது நீதிமன்றம்!

சேலத்தை சேர்ந்தவர் நடுப்பட்டி மணி. இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். மணி எடப்பாடி பழனிசாமியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதுபோல வெளியில் பந்தா காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் அதை வைத்து பணம் சம்பாதிக்கத் திட்டம் தீட்டி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பல கோடி வாங்கியிருக்கிறார். அப்படி பணம் கொடுத்த நெய்வேலியைச் சேர்ந்த இன்ஜினீயர் தமிழ்ச்செல்வன் என்பவர் மணி மீது சேலம் குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார். … Read more

"நான் எந்த மாதிரியான ஒரு நடிகை ஆகணும்னு இந்தப் படம் புரிய வெச்சிருக்கு!"- அக்‌ஷரா ஹாசன்

அக்‌ஷரா ஹாசன் நடித்திருக்கும் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ நாளை அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது. தமிழில் ‘கடாரம் கொண்டான்’, ‘விவேகம்’, இந்தியில் ‘ஷமிதாப்’ என நடித்திருக்கும் அக்‌ஷரா, இந்தப் படம் குறித்து நம்மிடம் பேசினார். ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ – டைட்டில், போஸ்டர், டிரெய்லர்ன்னு எல்லாமே சுவாரஸ்யமாவும் இருக்கு. ரொம்ப போல்டான படமாவும் தெரியுதே… அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு “இந்தப் படத்தோட கதையை கேட்டப்போ ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. ஏன்னா, இந்த மாதிரியே கதையை … Read more

திருக்கடையூர் கோயில் கும்பாபிஷேக யாகசாலைகளுக்கு அக்னி உருவாக்கியது இப்படிதான் – அபூர்வ காட்சி!

உலகின் ஆக்கத்திற்கு இன்றியமையாத சக்தியாக இருப்பது அக்னி.  உயிர்கள் கருவறையில் உருவாவது, பின் உடலைக் காத்து வளர்த்திடத்  தேவையான உணவினை உருவாக்குவது, இறுதியில் மரணம் அடைந்தபின் எரியூட்டுவது என வாழ்வியலில் ஒவ்வொரு  நிலையிலும் இன்றியமையாத சக்தியாக இருப்பது அக்னி. திருக்கடையூர் அக்னி உருவாக்கியது இப்படிதான் பஞ்சபூதங்களுள் அக்னியானது ஏனைய நான்கினுள்ளும் மறைபொருளாக விளங்குகின்றது.   அதாவது, வானில் – இடி மின்னல்; நிலத்தில் – எரிமலை ; கடலுக்குள் – வடவைத் தீ; காற்றினுள் – உரசுந் தீ -ஆகிய நிலைகளில் … Read more

ஓசூர்: நடத்தையில் சந்தேகம்… மனைவியை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்ட நபர்!

மனைவி மீது சந்தேகம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கீழ் கொச்சாவூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான கூலித்தொழிலாளி பசப்பா. திருமணமான இவர் தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக வாழ்ந்துவந்துள்ளார். இந்த நிலையில், கீழ் கொச்சாவூர் பகுதிக்கு அருகில் உள்ள மேல் கொச்சாவூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவருக்கும், பசப்பாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கொலை ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கம் திருமணம் … Read more

Mr.Zoo Keeper: யுவன் இசை, நிஜப் புலியுடன் பிலிப்பைன்ஸில் டிரெய்னிங் – புகழ் எடுக்கும் ஹீரோ அவதாரம்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’யில் ஸ்கோர் செய்து வரும் புகழ், பெரிய திரையிலும் நடித்து வருகிறார். ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ படங்களைத் தொடர்ந்து ‘காசேதான் கடவுளடா’, ‘யானை’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ ஆகிய படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கதாநாயகனாக ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற படத்தில் கமிட் ஆகியிருப்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். மிருகக்காட்சி சாலை ஒன்றில் வேலை செய்பவராக புகழ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 20ம் … Read more

முடிந்தது விசா இழுபறி… இன்று CSK-வுடன் இணையும் மொயின் அலி முதல் போட்டியில் ஆடுவாரா?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. விசா நடைமுறைகள் முடிவடையாத காரணத்தால் முதல் போட்டியில் CSK வீரர் மொயின் அலி விளையாட மாட்டார் என்று தெரியவந்தது. இந்தச் சூழலில், இன்று அவருக்கு விசா கிடைத்திருக்கிறது. இன்றே மும்பை வந்தடைகிறார் மொயின். “அவர் நேற்றே விசா ஆவணங்களைப் பெற்றுவிட்டார். இன்று மும்பைக்குப் புறப்பட ஆயத்தமாகி கொண்டிருக்கிறார். இன்று மாலை மும்பை வந்துவிடுவார். மும்பை வந்தாலும் முதல் போட்டியில் … Read more