சிம்புவுக்கு சொந்தமான கார் மோதி முதியவர் உயிரிழப்பு… ஓட்டுநர் கைது!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள இளங்கோவன் தெருவில் 18-ம் தேதி முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்ற போது அவர் மீது ஒரு கார் ஏறியது. அக்கம் பக்கத்தினர் அந்த முதியவரை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணை செய்ததில் இறந்தவர் பெயர் முனுசாமி (70) என்று தெரியவந்தது. கார் விபத்து மேலும் அந்த … Read more

உக்ரைன் விவகாரம்: ஐ.நா-வில் ரஷ்யாவின் தீர்மானம்… ஆதரித்த சீனா; புறக்கணித்த இந்தியா!

உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் போர்நிறுத்தம் தொடர்பாக ஐ.நாவில் ரஷ்யாவுக்கு எதிராக 3 முறை வாக்கெடுப்பு நடத்தியும், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் முதலாவதாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு எதிராகப் பெரும்பான்மை இருந்தும், ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த தீர்மானத்தை தோல்வியுறச்செய்தது. இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே இந்தியா, பேச்சுவார்த்தை ஒன்றே போரை முடிவுக்கு கொண்டுவரும் என கூறி, உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் … Read more

சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழா

7 நாட்கள்… 5 இடங்களில் திரையிடல் எனச் சிறப்பாக நடைபெற்ற 10வது சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழா நிறைவு பெற்றது. பெரியார் சுயமரியாதை ஊடகம், Dot School of Design, கிறிஸ்தவப் பெண்கள் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என பல நிறுவனங்களுடன் இணைந்து மறுபக்கம் அமைப்பு இவ்விழாவை நடத்தியது. பத்து ஆண்டுகளாக இவ்விழாவை ஒருங்கிணைத்து மிகச்சிறப்பாக நடத்தி சாதனை புரிந்துள்ளார் ஆவணப்பட இயக்குநர் அமுதன். லாப நோக்கமில்லாமல், பெரிய … Read more

இத்தனை உடல் பிரச்னைகளுக்கு `பழைய சோறு' தீர்வளிக்கிறதா? விடைசொல்லும் தமிழக ஆய்வு

நம் முந்தைய தலைமுறையினரின் வாழ்வியலில் இருந்த பல அம்சங்களை பழைமை என நிராகரித்து விடுகிறோம். கால மாற்றத்துக்குத் தகுந்தாற்போல் அறிவியலில் பரிணாமமும் நிகழ்ந்து நவீனமாகி வருவது அவசியமானது. ஆனால், நமது முந்தைய தலைமுறையினரின் வாழ்வியலில் உள்ள நல்ல அம்சங்களை நவீனம் என்கிற பெயரில் நிராகரித்துவிடக்கூடாது. அதற்கான சமீபத்தைய உதாரணம்தான் பழைய சோற்றின் மருத்துவப் பயன் குறித்த ஆராய்ச்சி. ஸ்டான்லி மருத்துவமனை சார்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பெருங்குடல் அழற்சி, குடற்புண், வயிற்றுப் பொருமல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு … Read more

Dubai Expo 2022: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் கண்காட்சியின் சிறப்பம்சங்கள் இவைதாம்!

கண்கவரும் பிரமாண்ட கட்டட வடிவமைப்புகள், அலங்கார வேலைப்பாடுகள் உலகம் முழுவதும் இருந்து 192 நாடுகள் கலந்து கொள்ளும் ‘துபாய் எக்ஸ்போ 2022’ உலகின் மிகப் பெரிய கண்காட்சிகளில் ஒன்று. அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, கலை, பொழுதுபோக்கு எனப் பல தளங்களில் பரிணமிக்கும் இந்தக் கண்காட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவிருக்கிறார். முதல்வரான பிறகு அவர் செல்லவிருக்கிற முதல் வெளிநாட்டு பயணம் இது. அவருக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (மார்ச் 23) … Read more

ஆஃப்கானிஸ்தான்: பள்ளிகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட மாணவிகள்! -பெண் கல்விக்கு மீண்டும் தடை?

கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து பல கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றனர். இந்தக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆஃப்கானிஸ்தான் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என ஒரு வாரத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் கல்வி அமைச்சகம் “பெண்களுக்கான அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். பெண்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறப்பது எப்போதுமே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது” என்று கூறியது. தாலிபான்கள் இந்த நிலையில், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அனைத்து மாணவிகளும் ஆர்வமுடன் பள்ளிக்குச் சென்றபோது திடீரென பெண்கள் … Read more

இன்றைய ராசி பலன் | 24/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 : Source link

“இராக், லிபியா மீது அமெரிக்கா குண்டுவீசியதை பென்டகன் மறந்துவிட்டதுபோல"- ரஷ்யத் தூதர் தாக்கு

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 30 நாடுகள் ஒன்றிணைந்துள்ள கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணையக் கூடாது என்று கூறி உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின்பேரில் கடந்த 24-ம் தேதி ரஷ்யப் படையினரால் உக்ரைனில் தொடங்கப்பட்ட இந்த போர் நான்கு வாரங்களாக நடைபெற்றுவருகிறது. உலக நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தபோதும் ரஷ்யா போரை நிறுத்தியபாடில்லை. மேலும், சர்வதேச நீதிமன்றமும்கூட, உக்ரைனில் … Read more

லக்கிம்பூர் சம்பவம்: நீண்ட நாள்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பேசிய அஜய் மிஸ்ரா!

லக்கிம்பூர் சம்பவம்: கடந்தாண்டு அக்டோபர் 3-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பன்வீர்பூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்த மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருந்தார். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துணை முதல்வரை வரவேற்கச் சென்றிருந்தார். அந்த சமயத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் துணை முதல்வரின் காருக்குக் கருப்பு கொடி காட்ட முடிவு செய்தனர். லக்கிம்பூர் கேரி … Read more

பேரனிடம் பாலியல் அத்துமீறல்… 64 வயது முதியவருக்கு 73 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

கடந்த 2019-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் தன் பேரனை ஓரினச் சேர்க்கை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அவரின் தாத்தாவுக்கு தண்டனை வழங்கி இடுக்கி விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் வீட்டிலிருந்து தனக்குச் சொந்தமான பண்ணைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு, அவரின் கணவர் தன் பேரனுக்கு பாலியல் தொல்லை அளித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதையடுத்து, மூதாட்டி உடனடியாக இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகாரளித்தார். சம்பவ இடத்துக்கு … Read more