பா.இரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' டீசர் மற்றும் பட ரிலீஸ் எப்போது?

‘சார்பட்டா பரம்பரை’யை அடுத்து பா.இரஞ்சித், இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நிறைவுக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு சென்னை, பாண்டிச்சேரியில் தொடங்கிய படப்பிடிப்பு மூணாறு, கொச்சி ஆகிய இடங்களில் நடந்து நிறைவடைந்தது. “ஒரு அழகான படத்துல நானும் இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் மறக்க முடியாத அனுபவமா எனக்கு அமைஞ்சிடுச்சு” என காளிதாஸ் நெகிழ்ந்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, ‘டான்ஸிங் ரோஸ்’ … Read more

Viral Video – கழிவுநீர் கால்வாயைச் சுத்தம் செய்த கவுன்சிலர்; பாலில் குளிப்பாட்டிய ஆதரவாளர்கள்!

டெல்லியில் சாஸ்திரி பூங்காவில் உள்ள ஒரு கழிவுநீர் வடிகாலில் கழிவுநீர் நிரம்பி வழிந்ததால், பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கிழக்கு டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹாசன் என்பவர் சாஸ்திரி பூங்காவில் நிரம்பி வழியும் கழிவுநீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்தார். அதைக் கண்ட பொதுமக்களும், அவருடைய ஆதரவாளர்களும் அவரை திரைப்பட பாணியில் பாலில் குளிப்பாட்டினர். இதை அக்கம் பக்கத்தினர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த … Read more

`லாபமே இல்லாம இருந்தோம்; ஆனா இப்போ..!' – சிறு குறு தேயிலை விவசாயிகள் லாபம் ஈட்ட புது உத்தி

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 55,000 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகத் தேயிலை விவசாயம் விளங்கி வருகிறது. நூற்றுக்கணக்கான பெருந்தோட்டங்கள், சுமார் 50,000 சிறு குறு தேயிலை விவசாயிகள், 16 தேயிலைக் கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு அரசுத் தேயிலைத் தோட்டக் கழகம், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் எனத் தேயிலைப் பொருளாதாரத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்திருக்கும் மக்களே அதிகம் உள்ளனர். மத்திய அரசின் … Read more

'வட இந்தியா மோசமாக உள்ளது…' உலகக் காற்றுத் தர (IQAir) ரிப்போர்ட் சொல்வதென்ன!

கடந்த 2021-ம் ஆண்டிற்கான உலகக் காற்றுத் தர அறிக்கையின்படி (World Air Quality Report) உலகிலேயே அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரங்களில் முதல் பதினைந்து இடங்களில் பத்து இடங்களில் இந்தியாவின் வட மாநில நகரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தியாவின் தலைநகரான டெல்லி உலகிலேயே அதிக காற்று மாசுபாடு கொண்ட தலைநகராக இடம்பெற்றுள்ளது. மாதிரி படம் மேலும், டெல்லியின் காற்று மாசுபாடு உலகளவில் 4வது இடத்தில் உள்ளது. இதையடுத்து ராஜஸ்தானின் பிவாடி, அதைத் தொடர்ந்து டெல்லியின் கிழக்கு … Read more

RRR இந்தக் கதை பலர் பாத்துருப்பீங்க; ஆனா,இது வேற படமா இருக்கும்! – ராஜமௌலி

மூன்று வருடங்களாகக் காத்திருந்து, கோவிட் காரணமாகத் தள்ளிச்சென்று, தற்போது இறுதியாக மார்ச் 25-ம் வெளிவர இருக்கிறது ஆர் ஆர் ஆர் திரைப்படம். ராம் சரண் தேஜா, ஜூனியர் NTR, ஆலியா பட் என முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருக்கின்றனர். இயக்குநர் ராஜ மௌலி மற்றும் குழுவினர் இணைந்து பெரும் பொருட் செலவில் படம் தயாராகி இருக்கிறது. படக்குழுவினரின் நேர்காணல் இதோ… “பல வருடங்கள் கழித்து திரைப்படம் வெளிவர இருக்கிறது. தற்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?” RRR … Read more

மார்ச் 28, 29 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்; பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிராகவும், எல்.ஐ.சி ஊழியர்களை போலவே வாரத்தில் ஐந்து நாள் வேலையை அமல்படுத்த வேண்டியும், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், 28, 29-ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த இரண்டு நாள் போராட்டத்தில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கத்தினர் கலந்து கொள்ள உள்ளனர். வங்கி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி; ₹18,600 கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை பாதிப்பு! … Read more

ஆண்டுக்கு ₹5,000 கோடி; மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கொள்ளை; அம்பலமாகும் அரசு மற்றும் தனியார் கூட்டுச்சதி!

“ம்… பிரமாதம். சூப்பர்!” “ம்ஹூம்… தேறாது. சுத்த வேஸ்ட்!” கடந்த 18/03/22 அன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் தமிழக அரசின் பட்ஜெட் குறித்து இப்படிப்பட்ட பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நம் கவலையெல்லாம்… பட்ஜெட் என்பது உண்மையிலேயே உருப்படியாகத்தான் போடப்படுகிறதா… அதன் மூலமாக மக்களுக்கு முழுமையாக பலன்கள் கிடைக்கின்றனவா என்பதைப் பற்றித்தான். சாம்பிளாக, மக்களுக்கான இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைக் கையில் எடுப்போம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் 1,547 கோடி ரூபாயை இதற்காக ஒதுக்கியுள்ளார் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் … Read more

உச்சிப்புளி ஐஎன்எஸ்: ஆயுதமேந்திய ரோந்து.. புதிதாய் இணைந்த அதிநவீன ஹெலிகாப்டர்களின் சிறப்பு அம்சங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளம் உள்ளது. இங்கு ஏற்கனவே இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு ஆளில்லா விமானம் செயல்பாட்டில் உள்ளது. இந்த ஹெலிகாப்டர் மூலம் புயல் காலங்களில் கடலில் சிக்கும் மீனவர்களை காப்பாற்றுவது, வெளிநாட்டுக் கப்பல்கள் எல்லை தாண்டுவதை கண்காணிப்பது, கடலில் காணாமல் போன மீனவர்களை தேடி மீட்பது ஆகிய பணிகளில் ஈடுபடுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இரவிலும் கடலில் ரோந்து சென்று, கண்காணிக்கும் வகையிலான நவீன வசதிகளை கொண்ட, … Read more

''ரெண்டு விஷயம் தாமதம் ஆச்சு. ஒண்ணு… என் கல்யாணம்… இன்னொன்னு சங்க கட்டடம்!'' – விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு நேற்று கூடியதுடன், வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர் பதவி ஏற்றுக்கொண்டனர். பொதுச்செயலாளராக பதவியேற்ற விஷால், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துவிட்டு தன் பேச்சை ஆரம்பித்தார். ”தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் நன்றி சொல்லிக்கறேன். ஏன்னா, சில சலசலப்புகள் நடந்தன. தேர்தல் எப்படி நடந்ததுனு எல்லாருக்கும் தெரியும். அதைத் தாண்டி, எந்த ஒரு முறைகேடும் இல்லாமல் நடத்திக் கொடுத்ததற்கு நன்றி. எங்கள் வழக்கறிஞர்களுக்கும் நன்றி. ஆஸ்பத்திரியில்தான் அதிக கேஸ்கள் … Read more

ஏ.ஆர்.ரஹ்மான் அணிந்த உடை எவ்வளவுக்கு ஏலம் போனது தெரியுமா?

ஏ.ஆர்.ரஹ்மான் 1992 ரோஜாவில் அறிமுகமானது தொடங்கி இந்திய இசைத்துறையில் 30 வருடங்களாக இசைத்துறையில் கொடி கட்டிப் பறப்பவர். தமிழ் மட்டுமல்லாது பல்வேறு இந்திய மொழிகளிலும் இசையமைத்த ரஹ்மானின் இசை மகுடத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக இரட்டை ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. இந்திய இசையை உலகளவில் பிரதிநிதித்துவம் செய்த இசையமைப்பாளர்களில் ரஹ்மானுக்கு எப்போதும் ஒரு இடமுண்டு. அவர் பயன்படுத்திய உடை சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. ஏலம் போன தொகையைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ராஜஸ்தான் காஸ்மோ கிளப் … Read more