திருமண மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் சிறப்பு பள்ளிக்கு வழங்கிய குடும்பத்தினர்; மதுரையில் நெகிழ்ச்சி!

அழைப்பிதழில் குறிப்பிட்டதுபோல், தங்கள் மகள் திருமணத்தில் கிடைத்த மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் சிறப்புப் பள்ளிக்கு வழங்கியுள்ளனர் மதுரையை சேர்ந்த ஆத்மராவ் குடும்பத்தினர். ஆத்மராவ் குடும்பம் `மொய்ப்பணம் மொத்தமும் ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்துக்குத்தான்’-ஆச்சர்யப்படுத்திய மதுரைத் திருமணம்! மதுரையை சேர்ந்த ஆத்மராவ் மகள் அம்ரிதாவுக்கும் திருச்சியை சேர்ந்த பாலகுமாருக்கும் கடந்த மார்ச் 16-ம் தேதி திருமணம் நடந்தது. திருமண அழைப்பிதழில், `அன்புடையீர், கருணை உள்ளம் கொண்ட நீங்கள் வழங்கும் மொய்ப்பணம், அன்பு இல்ல ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் … Read more

சித்திரைத் திருவிழா | உற்சாகமாகும் சல்லடம் தயாரிக்கும் கலைஞர்கள் | Chithirai Thiruvila 2022 | மதுரை

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்லது. தென் இந்தியாவின் கும்பமேளா எனப்பதும் இந்தத் திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதில் பக்தர்கள் அழகருக்கு வேண்டிக்கொண்டு சல்லடம, தீபந்தம், வேஷம் ஆகியன அணிந்து கொள்வார்கள். அதற்கான தயாரிப்பில் தற்போது ஈடுபட்டும் மதுரைக் கலைஞர்கள் குறித்த வீடியோ #Madurai #ChithiraiThiruvila2022 #Kallalagar Source link

வேலூர்: கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் கடந்த 16-ம் தேதி இரவு காட்பாடியில் இருக்கும் ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் சென்றார். நள்ளிரவு 1 மணிக்கு படம் முடிந்ததும் தான் பணிபுரியும் மருத்துவமனைப் பகுதிக்குச் செல்வதற்காக திரையரங்கம் முன்பு ஆட்டோவுக்காகக் காத்து நின்றனர். அப்போது வந்த ஒரு ஆட்டோவில் ஓட்டுநருடன் சேர்த்து 5 பேர் இருந்தனர். ‘ஷேர் ஆட்டோ’ என்பதால், அந்தப் பெண்ணுக்கும் அவரின் ஆண் நண்பருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. … Read more

RRR ரிலீஸ்; கம்பிவேலி கொண்டு திரையைப் பாதுகாக்கும் திரையரங்க உரிமையாளர்; காரணம் இதுதான்!

இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளத்தின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘RRR’ படம் வரும் மார்ச் 25 -ல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது. பொதுவாக உச்ச நட்சத்திங்களின் படத்திற்கு திரையரங்கில் கூட்டம் எகிறும். இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு … Read more

`திருமண மேடைல எல்லாரும் அப்படி சொல்லவும் செல்வா கடுப்பாயிட்டார்!' – ரோஜா – செல்வமணி ஷேரிங்ஸ்

ஆர்.கே.செல்வமணி – ரோஜா ஜோடிக்கு, சினிமா நட்சத்திர தம்பதியர்கள் வரிசையில் முக்கிய இடமுண்டு. 1990-களில் முன்னணி நடிகையாக ஜொலித்த ரோஜா, தற்போது ஆந்திரா அரசியலில் அதிரடிப் பேச்சாளராகக் கவனம் பெற்றிருக்கும் எம்.எல்.ஏ. தமிழ்நாடு சினிமா இயக்குநர்கள் சங்கத் தலைவரான ஆர்.கே.செல்வமணி, அரசியல் கதையம்ச படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர். செல்வமணியால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோஜா, 11 ஆண்டுக்கால காதலுக்குப் பிறகு, அவரை கரம்பிடித்தார். ரோஜா – செல்வமணி இந்தத் தம்பதியைச் சந்திக்க, ஆந்திரா மாநிலம் நகரியிலுள்ள இவர்களின் … Read more

ஓய்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே… அரசு வேலைக்காக தந்தையை, மகனே கொன்ற கொடூரம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தவர், கீரனூர் திடீர் நகரைச் சேர்ந்த கருப்பையா. இவர் கடந்த 19-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரின் மகன் பழனியோ, அப்பா அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தார். போதையில், இருந்தவர் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தான், சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி … Read more

இன்றைய ராசி பலன் | 23/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 Source link

திருவாரூர்: கமலாலய குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் கமலாலய குளம் மிகவும் புகழ்பெற்றது. `கோயில் ஐந்து வேலி… குளம் ஐந்து வேலி’ எனப் போற்றப்படும் இந்தக் குளம், கோயிலுக்கு நிகரான பரப்பில் பிரமாண்டமாகக் காட்சி அளிக்கக்கூடியது. இந்தக் குளத்தில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். இந்த நிலையில்தான், இந்தக் குளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகேயுள்ள புலிவலம் பெருமாள் கோயில் தெருவில் வசித்துவருபவர் அன்பழகன். இவருடைய மகன் சக்திவேல். பதினான்கு வயதான சக்திவேல் 7-ம் … Read more

“உக்ரைன் அகதிகளுக்காக..!" – நோபல் பதக்கத்தை விற்கும் ரஷ்யப் பத்திரிகையாளர்

உக்ரைனில் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ம் தேதி முதல் ரஷ்யப் படையினருக்கும், உக்ரேனிய படையினருக்கும் இடையே போர் நடைபெற்றுவருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் போன்ற நகரங்களை ஆக்கிரமிக்கும் முனைப்புடன் ரஷ்யப் படையினர் தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் பொருளாதார உதவிகள், ராணுவ உபகரணங்களை அளிப்பது போன்ற உதவிகளை நேரடியாகவே உக்ரைனுக்கு வழங்கிவருகின்றன. பொதுமக்கள் தங்களின் உயிரையும், … Read more