பப்ஜி நண்பர்களுக்கும் பகிரப்பட்ட வீடியோ… 6 மாதங்களாக வன்கொடுமைக்கு ஆளான பெண் -விருதுநகர் அதிர்ச்சி

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர், சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்-ஆக இருந்திருக்கிறார். இந்நிலையில் விருதுநகர் மேலத்தெருவில் மெடிக்கல் குடோன் நடத்திவரும் ஹரிஹரன்(27) ஃபேஸ்புக் மூலம் இளம்பெண்ணுக்கு ரிக்வஸ்ட் விடுத்துள்ளார். இதை ஏற்று இளம்பெண்ணும் ஹரிஹரனும் ஃபேஸ்புக் வழியே பழகி வந்துள்ளனர். பின்னர் நாளடைவில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலை சொல்லி பல இடங்களுக்கும் ஒன்றாக சென்று ஊர் சுற்றியதாக … Read more

“விஜய் சார் சொன்ன அந்த சீக்ரெட்'' – `பீஸ்ட்' பட நடிகர் டாம் சாக்கோ

`பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் டாம் சாக்கோ (Shine Tom Chacko), தன்னுடைய அம்மாவை அழைத்துச் சென்று நடிகர் விஜய்யிடம் உரையாடியதைப் பற்றி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில், “நான் சீக்கிரத்தில் கோபப்படுவேன். என்னுடைய அம்மா அதற்காக கடிந்துகொள்வார். பீஸ்ட் பட ஷூட்டிங் சென்னையில் நடந்த போது என்னுடைய அம்மாவையும் உடன் அழைத்து சென்றேன். ‘உங்களுக்கு நிச்சயம் விஜயைப் பிடிக்கும். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. எப்போதும் பொறுமையாகவும் கூலாகவும் இருப்பார்’ என்று என்னுடைய … Read more

“ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை!" – ஆணையத்தில் ஓ.பி.எஸ் விளக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அது குறித்து விசாரிக்கக் கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். இந்த நிலையில், இன்று ஆணையத்தில் ஆஜரான ஒ.பன்னீர்செல்வத்திடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது இருவருக்குமிடையே நடந்த விசாரணை உரையாடல் இதோ… … Read more

“டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன் நேரில் பார்த்தோம்!” – ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அது குறித்து விசாரிக்கக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். அப்போது ஒ.பன்னீர் செல்வம், “அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் … Read more

உக்ரைன் விவகாரம்: `ரஷ்யாவை எதிர்கொள்ள இந்தியா நடுங்குகிறது!' – ஜோ பைடன்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த சில நாளாகத் தொடர்ந்து போர் நடைபெற்றுவருகிறது. உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், ரஷ்யா அதைப் பொருட்படுத்தாமல் உக்ரைனில் தொடர் தாக்குதலை நடத்திவருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராகப் பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இந்த விவகாரத்தில், இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அமைதியான முறையில் இருநாடுகளும் தங்கள் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முன்வரவேண்டும் என்பதை தொடர்ச்சியாக சொல்லி … Read more

“என் மனசாட்சி உறுத்துச்சு!” – ஜெமினி கணேசன் #AppExclusive

ஜெமினி கணேசன் சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி ரோட்டிலிருக்கும் தன் வீட்டு வரவேற்பறையில், தொளதொள பனியனோடு, காலை நேர வாக்கிங்கை முடித்துவிட்ட களைப்பில் அமர்ந்திருந்தார், நடிகர் ஜெமினி கணேசன். எழுபத்து மூன்று வயதைத் தாண்டிவிட்ட போதிலும் காதல் மன்னனின் முகத்தில் கவர்ச்சியின் மிச்சம் இன்னும் இருக்கிறது. லேசாய் அவரைப் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்று காதல், கல்யாணம் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தோம். “அதையெல்லாம் இப்போ ஏன் ஞாபகப்படுத்தறே… ஐம்பத்து நாலு வருஷம் ஆச்சுதே” என்றவர், “இன்றைய இளம் … Read more

மூன்று தலைமுறைப் போராட்டம்; ஸ்மார்ட் அட்டை வழங்கிய ஆட்சியர் – மகிழ்ச்சியில் நாடோடியின மக்கள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாடோடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள், தாங்கள் குடும்பமாகச் செல்லும் இடங்களிலேயே தற்காலிகக் கூடாரங்கள் அமைத்து ஊசிமணி, பாசிமணி விற்றும், பச்சைக் குத்தியும், வேட்டையாடுதல் தொழில் செய்தும் பிழைப்பு நடத்துகின்றனர். நாடோடிகளாய் திரியும் இவர்களுக்கு நிரந்தர முகவரியும், இருப்பிடமும் இல்லை. அவர்களில் பெரும்பாலானோருக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு என எந்த அடையாள அட்டையும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, … Read more

டியர் காம்ரேட்ஸ்! | உலக சினிமா #MyVikatan

1962 ஜூலை 2 அன்று ‘சோவியத் ரஷ்யா’ நாட்டில் நொவோசெர்கெஸ்க் என்ற பகுதியில் நடந்த படுகொலை தாக்குதலை விவரிக்கும் திரைப்படம் ‘ டியர் காம்ரேட்ஸ்!’. இயக்குநர் ஆந்த்ரே கான்கெலாவ்ஸ்கி உருவாக்கத்தில் மிகச்சிறப்பாக படுகொலைத்தாக்குதலை ஆய்வு செய்திருக்கிறது ‘டியர் காம்ரேட்ஸ்!’. அதிபர் நிகிதா க்ருஷோவ் ஆட்சி காலத்தில் சோவியத் ரஷ்யாவின் அவல நிலை திரைப்படத்தின் ஒவ்வொரு சட்டகத்திலும் வெளிப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்டாலின் ஆட்சியில் நிலவிய பொற்காலத்தையும் எடுத்துரைக்கிறது. ஸ்டாலின் ஆட்சி பற்றிய அமெரிக்க ஏகாதிபத்திய ஊடக விமர்சனங்களுக்கு … Read more

"எனக்கு மோடியைத் தெரியும்னு சொன்னார்"- இரிடிய மோசடி குறித்து விளக்கும் விக்னேஷ்

’எனக்கு மோடியைத் தெரியும்’ என பொய் சொன்ன ஒரு மோசடி நபரை நம்பி கோடியை இழந்து நிற்கிறார் நடிகர் விக்னேஷ் `இரிடியம் விற்பனை மூலம் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்’ இந்த இரிடிய விற்பனையை நான் சட்டபூர்வமாக அதாவது மத்திய அரசின் அனுமதியுடன் செய்கிறேன். முதலில் சில பல லட்சங்களை இதில் முதலீடு செய்பவர்களுக்கு கோடிகளில் ரிட்டர்ன் கிடைக்கும்’ என அந்த நபர் சொன்னதை நம்பி தான் மட்டுமல்லாது தன் நண்பர்கள் சிலரின் பணத்தையும் அந்த நபரிடம் … Read more

போருக்கு எதிரான குரல்; சிவகார்த்திகேயன் ஜோடி; உக்ரைன் நடிகை Maria Ryaboshapka-ன் சுவாரஸ்யப் பின்னணி

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியாகும் #SK20 படத்தில் உக்ரைன் நடிகை மரியா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. யார் இவர்? அவரைப் பற்றிய சில தகவல்கள்! 25 வயதான உக்ரேனிய நடிகை மரியா முதலில் அறிமுகமானது உக்ரேனிய படங்களில்தான். 2018இல் வெளியான Eter என்கிற படத்தில் நடித்தார். இது சயின்ஸ் பிக்ஷன் வகையைச் சேர்ந்த Spanish திரைப்படம். ரஷ்யன், உக்ரேனிய மொழிகளில் நடித்து கொண்டிருந்தவர் இந்தியாவுக்கு வந்தது ‘Special OPS 1.5: The … Read more