கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை… நிதியுதவி அளிக்க முன்வரும் சீனா!
1948 சுதந்திரத்துக்குப் பிறகு முதன்முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதால், அங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இலங்கையில் தற்போது தினமும் 8 மணிநேரம் மின்தடை நிலவுகிறது. அதே சமயம் ஒரு டீ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒட்டுமொத்த இலங்கையுமே கடந்த 1 மாதமாக மின், எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரமான கொழும்பு கூட இதற்கு விதிவிலக்கல்ல. தினமும் அட்டவணை போடப்பட்டு மின்தடை செயல்படுத்தப்படுகிறது. … Read more