`சிட்டுக்குருவிகள் அழியவில்லை; இடம் பெயர்ந்துவிட்டன!' – பறவைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக் குருவிகள் தினத்தை முன்னிட்டு கூடுகள் அமைப்பு சார்பில் திண்டுக்கல் மாவட்டம், பழநி சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சிப் பட்டறை மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் குருவிக் கூடுகளை எப்படி தயாரிப்பது என்று ஒரு பயிற்சி பட்டறையும் ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல துறைகளைச் சார்ந்த அனுபவம் மிகுந்தவர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளைக் கூறினர். மாணவர்கள் காக்கப்பட வேண்டிய குட்டி விவசாயிகள்… சிட்டுக்குருவிகள் நமக்கு ஏன் முக்கியம்? இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 300 … Read more

`ஆடுகளம்' சேவல் சண்டை; `வாடிவாசல்' மாடுகளின் வாழ்வியல்! – சீக்ரெட் சொல்லும் உதவி இயக்குநர் கருணாஸ்

வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் ‘வாடிவாசல்’ படத்தின் மூலம் உதவி இயக்குநாகிறார் நடிகர் கருணாஸ். இப்போது ஹீரோவாக ‘ஆதார்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து முடித்துவிட்டு, ‘வாடிவாசல்’ டெஸ்ட் ஷூட்டிலிருந்து உதவி இயக்குநராகவும் களமிறங்கிவிட்டார். திரைத்துறையில் புதுப்பயணத்தை ஆரம்பித்திருக்கும் கருணாஸிடம் பேசினேன். வாடிவாசல் டெஸ்ட் ஷூட் பூஜையின் போது… “வெற்றிகிட்ட உதவி இயக்குநர் ஆகியாச்சு. பாடகர், இசையமைப்பாளராக இருந்த நான் நடிகரானேன். அரசியலுக்கு வந்தேன். தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 150 படங்கள் நடிச்சிருப்பேன். எப்பவும் … Read more

`ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரச் சீர்கேடு; மாவட்டத்துக்கு முதல்வர் விருது' -குமுறும் சமூக ஆர்வலர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம் காத்தான் ஊராட்சி சேதுபதி நகரில் புதிய ஆட்சியர் அலுவலக வளாகம் அமைந்திருக்கிறது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கட்டடத்தில் ஆட்சியர் அலுவலகம், டி.ஆர்.ஓ., கூடுதல் ஆட்சியர், துணை ஆட்சியர்கள், தேர்தல் பிரிவு, மக்கள் தொடர்பு மையம் என பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் ஆட்சியராக சங்கர்லால் குமாவத் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் … Read more

“அந்த மொமன்ட் ரொம்பவே அழகாயிடுச்சு!" – மணமக்களுக்கு நண்பர்கள் கொடுத்த சுவாரஸ்ய பரிசு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள எதிர்கோட்டையைச் சேர்ந்தவர்கள் சுப்புராஜ் – முத்துலட்சுமி தம்பதி. இவர்கள் மகன் நவநீத கண்ணனுக்கும், இனாம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் – விஜயலட்சுமி தம்பதியின் மகள் அனிதாவுக்கும் எதிர்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில் மணமகனின் நண்பர்கள் அவருக்குக் கல்யாண சீர் வரிசையாக 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொடுத்து ஆச்சர்யப்படுத்தினர். இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து புதுமாப்பிள்ளை நவநீத கண்ணனிடம் பேசினோம். நவநீத கண்ணன்-அனிதா “என் … Read more

`கோவிஷீல்டு 2-வது டோஸின் இடைவெளியை குறைத்துக்கொள்ளலாம்!' – அரசுக்கு NTAGI பரிந்துரை

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸை இதுவரை 12-16 வார இடைவெளியில் மக்கள் செலுத்தி வந்தனர். இந்த இடைவெளியை 8 முதல் 16 வாரங்களுக்குள் செலுத்திக் கொள்ளலாம் என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) அரசுக்குப் பரிந்துரைத்தது. Covid -19 Vaccine `கோவாக்சின், கோவிஷீல்டு Mix and Match மூலம் அதிகரித்துள்ள ஆன்டிபாடி!’ – ICMR ஆய்வு என்ன சொல்கிறது? இதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் இனிமேல் 8 முதல் 16 வாரங்களிலேயே இரண்டாவது டோஸ் … Read more

Vaadivasal: 60 ஜல்லிக்கட்டு காளைகள்; மாடுபிடி வீரர்கள்; ஈ.சி.ஆர் டெஸ்ட் ஷூட்டில் நடந்தது என்ன?

இயக்குநர் வெற்றிமாறன், சூர்யா கூட்டணியின் ‘வாடிவாசல்’ படத்திற்கான டெஸ்ட் ஷூட், சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இரண்டு நாள் ஷூட் ஆக நேற்று தொடங்கிய இதன் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது. அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. படப்பிடிப்பில் நடந்தது என்ன? யாரெல்லாம் பங்கேற்றனர் என்பதைப் பார்ப்போம். வீரர்களுடன் சூர்யா கலைப்பு எஸ்.தாணுவின் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் `வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’தான், படமாகிறது. அந்த நூலின் முன்னுரையில் … Read more

`தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது ஏன்?' – விளக்கமளித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்

“தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 – 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு/தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த … Read more

`வித்யா நம்பர் 1' தொடரில் இருந்து விலகிய இனியன்; காரணம் இதுதான்!'

‘யூடியூபராக நம்மிடையே அறிமுகமானவர் இனியன். அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘வித்யா நம்பர் 1′ தொடரின் மூலமாக கதாநாயகனாக சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது அவர் அந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார்!’ இனியன் – புவி ஷூட்டிங்கின் போது அவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் அந்தத் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்காக மூன்று வாரங்களுக்கும் மேலாக கேரளாவில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறாராம் இனியன். அவர் தொடரில் இருந்து விலகியிருப்பதால் அவருக்கு பதிலாக … Read more

15 நிமிடம் மட்டுமே நினைவுத்திறன்; 2 வருடங்களாக தினமும் குழந்தைகளைச் சந்திக்கும் முதியவர்| video

உங்களின் நினைவுத்திறன் எத்தனை வருடங்களுக்கு இருக்கும்? நம்முடைய நினைவுகளும் அனுபவங்களும்தான் நாம் இன்றைக்கு யாராக இருக்கிறோம் என்பதை முடிவு செய்கிறது. சில நேரங்களில் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும் கடந்த காலம் பல நேரங்களில் துயரமான சம்பவங்களில் நம்மை ஆழ்த்திவிடும். அப்படியான நினைவுகளை மறக்க இன்னமும் போராடிக்கொண்டிருப்போம். மறதி வரம் என வாதிடுபவர்களும் உண்டு. சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோ நம்மை நெகிழச் செய்கிறது. ஒரு வீட்டின் முன் வயதான பெரியவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் தினமும் … Read more

`Miss India -வில் வெளியேற்றம் டு Pan India ஹீரோயின்' `Halamathi habibi' பூஜா ஹெக்டேயின் பயணம்!

2012 -ல் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’ படம் தான் பூஜா ஹெக்டேவின் முதல் படம். 2022-ல் ‘பீஸ்ட்’ மோட். பூஜாவின் 10 வருட சினிமா பயணம் ஒரு சின்ன rewind. 2009 Miss India போட்டியில் முதல் ரவுண்டிலேயே வெளியேற்றம். 2010 Miss Universe India போட்டியில் இரண்டாவது ரன்னர் அப். பூஜாவின் புகைப்படங்களைப் பார்த்து விட்டு மிஷ்கின் நடிக்க வைத்த படம் ‘முகமூடி’. 2014-ல் தெலுங்கில் முதல் படம் ‘Oka Laila Kosam’. … Read more