`இந்தியாவுக்கே தமிழ்நாடு மாடல்தான் முன்னோடியா?' – தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பதில்!

அண்மையில் நடந்து முடிந்த 5-வது நாணயம் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன். சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த அவர், அதற்கு முன்பாக இந்திய பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் சுணக்கம், உக்ரைன் – ரஷ்ய போர் ஏற்படுத்தும் தாக்கம், இந்தப் பொருளாதார மந்தநிலையை சமாளிக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவான உரையாற்றினார். அதன்பின்பு விகடன் மேலாண் … Read more

“ `அந்த பத்மா யாரு?’ன்னு அப்பா கேட்கலாம்; ஆனா, எங்க ஆதங்கம் தீரலை!” – எம்.எஸ்.வி மகள் லதா

தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன், கிளாஸிக் காலகட்ட திரையிசையில் கோலோச்சிய இசையமைப்பாளர். எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட அப்போதைய உச்ச நாயகர்கள் பலருக்கும், இவர் இசையமைத்த படங்களும், பாடல்களும் ஏற்றம் கொடுத்தது சினிமா வரலாறு. 700 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் எம்.எஸ்.வி, `தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலையும் இசையமைத்த பெருமைக்குரியவர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள எலப்புள்ளி கிராமம்தான் விஸ்வநாதனின் பூர்வீகம். இசை ஆர்வத்தால், அங்கிருந்து வந்து தமிழ் சினிமாவில் கால்பதித்தவர், ஆயிரக்கணக்கான மெல்லிசை பாடல்களைக் கொடுத்து, தமிழர்களின் … Read more

ராகு – கேது பெயர்ச்சி பரிகாரங்கள்| வேலை வாய்ப்புகள் பெருகும்|ஆரோக்கியத்தில் அக்கறை| பொதுப்பலன்கள்

ராகு – கேது பெயர்ச்சி 2022 இன்று 21.3.2022 அன்று நடைபெறுகிறது. ராகு பகவான் மேஷராசியிலும் கேதுபகவான் துலா ராசியிலும் சஞ்சரிக்க இருக்கிறார். இது நம் நாட்டுக்கும் உலகுக்கும் எந்த மாதிரியான பலன்களை வழங்கும் என்பது குறித்து விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஸ்ரீதர். #பரிகாரம் #RahuKetuPeyarchi #Astrology Source link

1000 பேர் அமரும் இடத்தில் 7000 பேர்?! – கேரள கால்பந்து மைதான கேலரி விபத்து விசாரணையில் அதிர்ச்சி

கேரள மாநிலத்தில் கால்பந்து ரசிகர்கள் அதிகம். அதிலும் கோழிக்கோடு, மலப்புறம் மாவட்டங்கள் கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்கள் நிறைந்துள்ள பகுதியில் முக்கியமானது. கிரிக்கெட் ரசிகர்களைவிட ஃபுட்பால் ரசிகர்களே அதிகம் என சொல்லலாம். கோழிக்கோடு, மலப்புறம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி ஃபுட்பால் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மலப்புறம் மாவட்டம் வண்டூர் பூங்கோடு பகுதியில் உள்ள மைதானத்தில் ஃபுட்பால் போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்துள்ளது. தற்காலிக கேலரி பூங்கோடு ப்ரெண்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்ட … Read more

`ஆட்டம் இன்னும் முடியவில்லை' – குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வுக்கு இருக்கும் சிக்கல்கள் என்ன?!

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தோடு முடிவடைகிறது. இந்த நிலையில், மேற்குவங்க சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, “நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்வது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. ஆட்டம் இன்னும் முடியவில்லை” என்று கூறியிருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக முன்னிறுத்தும் வேட்பாளர், வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை இங்கே அலசலாம்! மம்தா பானர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தல்! எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களின் … Read more

இன்றைய ராசி பலன் | 21/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 Source link

காவல் உதவி ஆய்வாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்த ரௌடி; வைரலான ஆடியோ… தீவிரமாகத் தேடும் போலீஸ்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக அர்ஜூனன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் தன்னை வழிமறித்து வினோத் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்திருந்தார். அவர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அர்ஜுனன், எதிர்தரப்பைச் சேர்ந்த வினோத் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வினோத்துக்கு ஆதரவாக தைக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அதையடுத்து, சிறப்பு காவல் ஆய்வாளர் அர்ஜுனன் … Read more

தேனி: மாணவி தற்கொலையில் மர்மம்? – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவர் மகள் அனு லத்திகா ஸ்ரீ (20). தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்துவந்தார். இந்த நிலையில், நேற்று காலை அதேப் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு சென்றவர், மாலை வரை வீடு திரும்பவில்லை. நுழைவு வாயிலை அடைத்து போராட்டம் மாலையில் தோட்டத்திலிருந்து வந்த பவுன்ராஜின் தந்தை தன் பேத்தி எங்கே … Read more

“அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் கொரோனா 4-ம் அலை பரவலை தடுக்கலாம்" – மா.சுப்பிரமணியன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போது சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளில் கொரோனா நான்காவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்கள் கொரோனா நான்காம் அலை தமிழகத்தில் பரவும் என்று கூறியுள்ளனர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட 740 பேர் கொரோனா … Read more

போக்சோ: “தமிழகத்தில் முதலில் வழக்கு பதிவு… பின்னர்தான் விசாரணை!" – டி.ஜி.பி சைலேந்திர பாபு

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட போலீஸாருடன் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சைலேந்திர பாபு, “தமிழக அரசு ரௌடிசத்தை ஒடுக்குவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. சரகம் வாரியாக ரௌடிசத்தை ஒடுக்குவதற்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வேலூர், காஞ்சிபுரத்தை தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் சரகத்திலும் ரௌடிகளை கண்காணித்து ஒடுக்குவதற்காக இந்த ஆய்வுக் … Read more