தலைமறைவாக இருந்து ஆட்டம் காட்டிய ரௌடி; சேவல் சண்டையைக் காண சென்னை வந்தபோது கைது செய்த தஞ்சை போலீஸ்!

தஞ்சாவூர் அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராமன் என்கிற சூரக்கோட்டை ராஜா (52). முன்னாள் பி.ஜே.பி பிரமுகரான இவர் மீது தஞ்சாவூரில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து, ஆள்கடத்தல், சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த சூரக்கோட்டை ராஜாவை போலீஸார் தேடி வந்தனர். தனிப்படை போலீஸ் டீம் கைது செய்த சூரக்கோட்டை ராஜா ஆனால் அவர் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கான என … Read more

“பாஜக 4 மாநிலங்களில் வெற்றிபெற்றும் உட்கட்சி பூசல் காரணமாக எங்கும் ஆட்சியமைக்கவில்லை!" – கெஜ்ரிவால்

பஞ்சாப், உத்தரகாண்ட, உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் 92 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியமைத்திருக்கிறது. மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட வெற்றிபெறவில்லை. பல இடங்களில் படுதோல்வியைச் சந்தித்திருந்தது. மோடி இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று நடைபெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் டெல்லியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் … Read more

அண்ணா பல்கலைத் தேர்வில் 10,000 மாணவர்களுக்கு ஆப்சென்ட்? – அமைச்சர் பொன்முடி விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாகத் தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன் காரணமாக, பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து மார்ச் 1-ம் தேதி வரை ஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த ஆன்லைன் தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள்களைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யவில்லை என்றும், அதனால் அந்த விடைத்தாள்களைத் திருத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. அண்ணா பல்கலைக் கழகம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் … Read more

பெட்ரோல் ஊற்றி மகன் குடும்பத்தை எரித்துக் கொன்றது எப்படி? – முதியவர் அதிர்ச்சி வாக்குமூலம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழ அருகே உள்ள சீனிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது (79). ஹமீதுக்கு இரண்டு மகன்கள். அதில் இரண்டாவது முகமது பைசல் (45), மருமகள் ஷீபா (40), பேத்திகள் மெஹரா (17), அஸ்னா(13) ஆகியோர் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். ஹமீதுக்கும் அவர் மகன் முகமது பைசலுக்கும் சொத்து சம்பந்தமாக சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதையடுத்து முகமது பைசல் புதிதாக ஒரு வீடு கட்டி வந்துள்ளார். அந்த வீடு பணி … Read more

காற்று மாசை குறைக்கும் எல்.பி.ஜி தகன மேடைகள் – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!

சென்னையில் உள்ள தகனக் கூடங்களை விரைவில் திரவ பெட்ரோலிய வாயுவால் (எல்.பி.ஜி) இயங்கும் தகனக் கூடங்களாக மாற்றியமைக்கும் முனைப்பை மேற்கொள்ள உள்ளது மாநகராட்சி நிர்வாகம். முதற்கட்டமாக தி.நகரில் ஒரு எல்.பி.ஜி எரியும் தகன மேடை அமைக்கப்படவுள்ளது. உடல் தகனம் செய்யும் பணியை விரைவு படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி முழுவதும் எல்.பி.ஜி எரிவாயு மூலம் இயங்கும் மயானங்களை அறிமுகப்படுத்தவுள்ளது சென்னை மாநகராட்சி. இம்முயற்சி பெருகிவரும் காற்றுமாசை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடல் தகனம் இந்த எல்.பி.ஜி தகனக் … Read more

ஹிஜாப் விவகாரம்: தீர்ப்பளித்த நீதிபதிகளுக்குக் கொலை மிரட்டல்… தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது!

இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஹிஜாப் தடைக்கு எதிராகச் சரியான முகாந்திரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதும் அல்ல. இதனால் கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” எனக் குறிப்பிட்டு தீர்ப்பளித்தது. … Read more

பொருளாதார நெருக்கடி… தாள்களுக்குத் தட்டுப்பாடு – பள்ளித் தேர்வுகளை ரத்து செய்தது இலங்கை அரசு!

1948 சுதந்திரத்துக்கு பிறகு முதன் முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதால், அங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து, மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் காகிதத் தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அந்த நாட்டு அரசு பள்ளித் தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது. நிதி பற்றாக்குறை காரணத்தால் தாள்களை அச்சிடவும், இறக்குமதி செய்ய முடியாமலும் இலங்கை அரசு பரிதவித்து வருவதால், … Read more

“நான் அவனை எதிர்கொள்ளத் தயாரானால்'' – மர்ம நபரால் தாக்கப்பட்ட 'The boys' வெப் சிரீஸ் நடிகை கரேன்!

அமேசான் பிரைமில் ஒளிப்பரப்பாக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க வெப் சிரீஸ் ‘The Boys’. இதில் Kimiko Miyashiro என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் கரேன் புகுஹரா (Karen Fukuhara) மார்ச் 16 அன்று முன்பின் தெரியாத ஒருவரால் தாக்கப்பட்டிருக்கிறார். தனக்கு நேர்ந்த இந்தச் சம்பவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கரேன் ‘இது போன்று நடப்பது நிறுத்தப்பட வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்துள்ளார். “இன்றைக்கு நான் ஒரு மனிதனால் தாக்கப்பட்டேன். (உடல்ரீதியாக நலம்) இது போன்று நடப்பது நிறுத்தப்பட்ட வேண்டும்) நாங்கள், … Read more

`சொப்பு பொருள்களை கொடுத்தா, திருக்குறள் புத்தகம் கேட்குறா!' – சாதனைப் புத்தகங்களில் 2 வயது சனந்தா

மழலைப் பேச்சு, கேட்கக் கேட்கத் திகட்டாதது. அதிலும் அவர்கள் பாடல்கள், தகவல்கள் எனக் கற்றுக்கொண்டு சொல்லி மொழியில் அற்புதங்கள் நிகழ்த்தும்போது அவர்களது நினைவாற்றல் ஆச்சர்யத்தின் உச்சிக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும். அப்படி ஒரு சுட்டிதான், 2 வயதே ஆகும் சனந்தா. தன் மழலைப் பேச்சாலும், நினைவாற்றலாலும் சாதனைகளை நிகழ்த்திப் பாராட்டுகளைப் பெற்று வரும் குட்டிப் பூ. திருவண்ணாமலையை சேர்ந்த மகேந்திரன் – லாவண்யா தம்பதியின் குழந்தை. சனந்தா மூன்றே விரல்கள், சுழலும் சிலம்பம்… சுட்டி சாம்பியன் யாஷிகா … Read more

அசுரன், நான் கடவுள்; நாவல் டு சினிமாவான படங்கள் என்னென்ன தெரியுமா? Special Story

அசுரன் ஏற்கெனவே வெளியான கதைகளைப் படமாக்குவது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல; என்ற போதும் இப்போதும் அப்படியான படங்களைப் பற்றி பேச இந்த படங்களின் இயக்குனர்கள்தான் காரணம். தற்போது எம்.பி ஆக இருக்கும் சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ நாவல் தான் 2012-ல் வெளியான இயக்குநர் வசந்தபாலனின் ‘அரவான்’ படத்திற்கு கதை ஆதாரம். வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது. இந்தப் படத்தின் கதை மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நாவலில் இருந்து எடுக்கப்பட்டது. அசுரன் தனுஷின் … Read more